தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 2௦௦ கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
வெங்காயம் – 25௦ கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – 1 (முழுவதும் தட்டி கொள்ள வேண்டும்)
பச்சை மிளகாய் – 5
நெய் – 5௦ கிராம்
சோம்பு – 1௦ கிராம்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை மெல்லிய அகன்ற துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். நெய்யை உருக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, உருக்கிய நெய், உப்பு ஆகியவற்றை கடலை மாவு, தட்டிய பூண்டு, கறிவேப்பிலை அரிசி மாவுடன் நீர் தெளித்து கையால் நன்றாக கலக்கவும். மாவு உதிரியாக இருக்க வேண்டும். தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காய கலவையை உதிரி உதிரியாக போடவும். பொன்நிறமாக சிவந்து வரும் வரை வறுக்கவும். சூடாக பரிமாறவும். சுவையான வெங்காய பக்கோடா தயார்.
