26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
neck apain 1517470816
மருத்துவ குறிப்பு

நீங்கள் தினமும் கழுத்து வலியால் கஷ்டப்படுறீங்களா?அப்ப இத படிங்க!

இன்று ஏராளமானோர் தோள்பட்டை வலி, முதுகு வலி, கழுத்து வலி, கால் வலி என்று பல வலிகளால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் இதுவரை கழுத்து வலியைத் தவிர இதர அனைத்து வலிகளுக்குமான இயற்கை வைத்திய முறைகளைப் பார்த்துள்ளோம். இன்று நாம் பார்க்கப் போவது கழுத்து வலிக்கான சில எளிய இயற்கை வழிகள் குறித்து தான். கழுத்து வலி என்பது தோள்பட்டை மற்றும் கழுத்து இணையும் இடம் அல்லது முதுகுப் பகுதியின் மேல் பகுதியில் ஏற்படும் வலிகளாகும். ஒருவருக்கு கழுத்து வலி வந்தால், அது மிகுந்த எரிச்சலை உண்டாக்குவதோடு, எந்த ஒரு வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாமல் செய்துவிடும்.

மேலும் கழுத்து வலியானது தலையை அசைக்க முடியாமல் செய்து, ஒருவருக்கு கவனச்சிதறலை அதிகம் உண்டாக்கும். சிலருக்கு கழுத்து வலி தவறான நிலையில் அடர்ந்து நீண்ட நேரம் தவறான கோணத்தில் கழுத்தை வைத்துக் கொண்டு இருந்தாலும் வரும். முக்கியமாக கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோருக்கு தான் கழுத்து வலியில் இருந்து அனைத்து வகையான வலிகளும் வரும். எனவே இந்த தொல்லைமிக்க கழுத்து வலியில் இருந்து விடுபட நினைத்தால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே கழுத்து வலிக்கான சில எளிய இயற்கை நிவாரண வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கழுத்து வலிக்கான காரணங்கள் * தவறான தூக்க நிலை மற்றும் உட்காரும் நிலை * அளவுக்கு அதிகமாக மன அழுத்தம் மற்றும் கஷ்டம் * நீண்ட நேரம் குனிந்தவாறு படிப்பது அல்லது எழுதுவது * தலை, கழுத்து அல்லது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்தாலும் கழுத்து வலி வரும்

கழுத்து வலிக்கான அறிகுறிகள் * கழுத்து மற்றும் சுற்றியுள்ள பகுதியில் விறைப்பு * கழுத்துப் பகுதியில் ஊசி குத்துவது போன்ற கூர்மையான வலி * கழுத்து வலியுடன், தலைவலி * எதையும் தூக்க முடியாமல் கஷ்டப்படுவது

மருத்துவரை உடனே காண வேண்டியர்கள் * தலையை அசைக்க முடியாத அல்லது திருப்ப முடியாத நிலை * தாங்கவே முடியாத அளவிலான கழுத்து வலி * எதையும் விழுங்க முடியாமல் அல்லது மூச்சு விட முடியாமல் கஷ்டப்படும் தருணம்

இயற்கை வைத்தியங்கள் கழுத்து வலிக்கு ஆரம்பத்திலேயே முறையாக சிகிச்சை அளித்து சரிசெய்யாமல் விட்டுவிட்டால், அது மிகுந்த அசௌகரியத்தையும், எரிச்சலையும் உண்டாக்கும். மிதமான கழுத்து வலி 1-2 நாட்களில் மறைந்துவிடும். ஆனால் அடிக்கடி கழுத்து வலி வந்தால், உடனே கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கழுத்து வலியை இயற்கையாகவே சரிசெய்ய ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அவைகளை கீழே விரிவாக காண்போம்.

எப்சம் உப்பு * 2-3 கப் எப்சப் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் அனை ஒரு மஸ்லின் துணியில் கட்டிக் கொள்ள வேண்டும். * பின்பு ஒரு பாத் டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் இந்த உப்பு மூட்டையைப் போட வேண்டும். * பிறகு அந்நீரில் 1 மணிநேரம் உட்கார வேண்டும். இப்படி தினமும் 1 மணிநேரம் உட்கார்ந்தால், கழுத்து வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர் * ஒரு பௌலில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 2 டீஸ்பூன் நீரை சரிசமமாக எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் ஒரு பேப்பர் டவலை எடுத்து, அதில் நனைத்து, வலிமிக்க பகுதியில் வைத்து 1-2 மணிநேரம் ஊற வையுங்கள். * இல்லாவிட்டால் பாத் டப்பில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் ஊற்றி, வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதனுள் 1 மணிநேரம் கழுத்து முழ்கும் வரை அமர வேண்டும். இதனால் கழுத்து வலி மாயமாய் மறையும்.

மசாஜ் தெரபி * 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை ஒரு வாணலியில் ஊற்றி சூடேற்றி இறக்கிக் கொள்ள வேண்டும். * பின் அதில் சிறிது கற்பூரத்தைப் போட்டு கலந்து கொள்ள வேண்டும். * பின்பு அந்த எண்ணெயை கழுத்து வலியுள்ள இடத்தில் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். * இந்த முறையை எப்போதெல்லாம் கழுத்து வலிக்கிறதோ, அப்போதெல்லாம் செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

யோகாசனம் * குறிப்பிட்ட சில யோகாசனங்களை தினமும் செய்து வருவதன் மூலம் கழுத்து வலியில் இருந்து விடுபடலாம். * கழுத்து மற்றும் தோள்பட்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்க திரிகோணாசனத்தை தினமும் செய்யுங்கள். * கோமுகாசனம் தண்டுவடம் மற்றும் முழுங்கால்களுக்கு மிகவும் நல்லது. * விரிக்சாசனம் மூட்டு இணைப்புகளுக்கு மிகவும் நல்லது.

ரோஸ்மேரி ஆயில் * சில துளிகள் ரோஸ்மேரி ஆயிலை வலியுள்ள கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும். * பின் 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். * இந்த முறையை தினமும் 2-3 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர, கழுத்து வலி காணாமல் போகும்.

மஞ்சள் * ஒரு டம்ளர் மாட்டுப் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றிக் கொள்ள வேண்டும். * பின் அதில் 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * சுவைக்கு வேண்டுமானால் தேன் சேர்த்துக் கொள்ளலாம். இதனை தினமும் இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும். * இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், கழுத்து வலி போய்விடும்.

இஞ்சி * 2 விரல் அளவுள்ள இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு நன்கு கழுவி, துருவிக் கொள்ள வேண்டும். * பின் ஒரு டம்ளர் நீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி, அதில் துருவிய இஞ்சியை சேர்த்து 3 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு அதனை வடிகட்டி, அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சூடாக குடிக்க வேண்டும். * இந்த இஞ்சி டீயை தினமும் 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வர, கழுத்து வலி போய்விடும்.

மிளகு * 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலை சூடேற்றி இறக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் மிளகுத் தூளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின்பு அந்த கலவையை வலியுள்ள கழுத்துப் பகுதியில் தடவுங்கள். * இதை தினமும் 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து பயன்படுத்தினால், கழுத்து வலி போய்விடும்.

கழுத்து பயிற்சிகள் * நேராக உட்கார்ந்து, கழுத்து வட்ட சுழற்சியில் சுழற்ற வேண்டும். * இதே பயிற்சியை எதிர் திசையில் மீண்டும் சுழற்ற வேண்டும். * பின் கழுத்தை மேலும், கீழுமாக மெதுவாக அசைக்க வேண்டும். * பின்பு தலையை பக்கவாட்டில் தோள்பட்டையைத் தொடுமாறு அசைக்க வேண்டும். * இந்த பயிற்சிகளை தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பின்பற்ற வேண்டும். இதனால் கழுத்து வலி வருவதைத் தடுக்கலாம். முக்கியமாக இந்த பயிற்சிகள் அலுவலகங்களில் செய்வதற்கு ஏற்ற பயிற்சிகளாகும்.

ஐஸ் பேக் * ஒரு கையளவு ஐஸ் கட்டிகளை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதனை ஒரு பாலிதீன் பையில் போட்டு கட்டிக் கொள்ளுங்கள். * பின் அதனை வலியுள்ள கழுத்துப் பகுதியில் 15-20 நிமிடம் ஒத்தடம் கொடுங்கள். * இப்படி தினமும் 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்யுங்கள்.

neck apain 1517470816

Related posts

உங்களுக்கு தெரியுமா ஆண்களை அதிகம் தாக்கும் ப்ரோஸ்டேட் புற்று நோயின் அறிகுறிகளும் , வராமல் தடுக்கும் உணவுகளும்!!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! தூக்கம் மிகவும் அவசியம் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் சாப்பிடத் தோன்றும் உணவுகள்!!!

nathan

சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் புதிய சிகிச்சை!! முயன்று பாருங்கள்

nathan

எச்சரிக்கை! உங்களுக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

nathan

மூலநோய் வராமல் தடுப்பது எப்படி?

nathan

இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் செய்ய கூடியவை… செய்ய கூடாதவை

nathan

செல்போனை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்

nathan

தெரிஞ்சிக்கங்க… உயிர் போகும் காது வலியா? இந்த இலையின் ஒரு துளி சாறு போதும்….

nathan