30.8 C
Chennai
Monday, Nov 18, 2024
1517298996 4878
மருத்துவ குறிப்பு

பிரண்டை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா..!சூப்பர் டிப்ஸ்…

ரத்த மூலத்திற்கு பிரண்டை கைகண்ட மருந்தாகும். இளம் பிரண்டையை ஒன்றிரண்டாக நறுக்கி நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, சிறு நெல்லிக்காய்  அளவிற்கு காலை, மாலை சாப்பிட ரத்த மூலம் குணமாகும்.
பிரண்டை, கற்றாழை வேர், நீர், முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் சம அளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர உள்மூலம் குணமாகும்.

பிரண்டையை சிறு தீயில் இட்டு, வதக்கி சாறு பிழிந்து 30 மில்லி அலவு குடித்து வர முறையற்ற மாதவிலக்கு சீராகும். பிரண்டை வேரை உலர்த்து பொடி செய்து 1 கிராம் அளவாக காலை, மாலை கொடுத்து வர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும்.
பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை  நரம்புகளும் பலப்படும்.
இரைப்பை அழற்சி, அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற அனைத்து செரிமானம் பிரச்சினைகளுக்கும் பிரண்டை துவையல் மிகவும் சிறந்த மருந்தாக இருக்கிறது. மூலம் மற்றும் குடற்புழு நீக்குவதற்கு பிரண்டை நல்ல மருந்தாக விளங்குகிறது.1517298996 4878

Related posts

கீரை டிப்ஸ்..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

nathan

கணவரிடம் அந்த விஷயத்தில் விருப்பமில்லை என்பதை மனைவி உணர்த்தும் அறிகுறிகள்

nathan

நாப்கினால் ஏற்படும் பேராபத்துகள் !பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

சின்னம்மை தாக்கினால் ஏற்படுத்தும் வடுவை குணமாக சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! பெண்களே சிறுநீர் கசிவினால் கவலையா? அதிலிருந்து எப்படி விடுபடலாம்?

nathan

இதயத்தை பாதுகாக்க சிறந்த உணவு முறை எது தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

இதோ சில எளிய வழிகள்! இயற்கையான முறையில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா?

nathan

தலையில் கோர்த்துக்கொள்வதற்கான காரணம் – தீர்வு

nathan