26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமா? இந்த ஃபேஸ் பேக்குக

14-1371195000-6-smoothskinஒவ்வொருவருக்குமே பொலிவான சருமத்தின் மீது ஆசை இருக்கும். குறிப்பாக பெண்கள் தான் தங்கள் சருமம் பொலிவோடு அழகாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கவும் தயாராக இருப்பார்கள். இருப்பினும் தற்போதைய காலத்தில் அனைவருமே கெமிக்கல் பொருட்களின் உபயோகத்தால் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்று இயற்கை வழிகளை நாட ஆரம்பித்துவிட்டனர்.

இதற்காக தங்கள் அழகைக் கூட இயற்கைப் பொருட்களைக் கொண்டு பராமரிக்க விரும்புகின்றனர். சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், சருமத்திற்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டு வருவதோடு, ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டும் சருமத்திற்கு ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் போன்றவற்றையும் போட வேண்டும்.

முக்கியமாக இயற்கை வழிகளை கையாள நினைக்கும் போது, பொறுமை மிகவும் அவசியம். ஏனெனில் இயற்கை வழிகளினால் நமக்கு நன்மைகளானது சற்று தாமதமாக கிடைக்கும். ஆனால் அதன் நன்மை வாழ்நாள் முழுவதும் இருக்கும். இங்கு சருமத்தின் அழகை அதிகரிக்கவும், அதன் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, பொலிவோடு வெளிக்காட்ட உதவும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

திராட்சை உங்கள் சருமம் பொலிவோடு இருக்க வேண்டுமானால், திராட்சைப் பழ ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இல்லாவிட்டால், சிறிது திராட்சையை எடுத்து மசித்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள்.

சந்தனப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் பால் ஒரு பௌலில் சந்தனப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகத்தின் பொலிவு அதிகரிப்பதோடு, முகம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

தேன் மற்றும் மில்க் க்ரீம் தேனுடன் சிறிது மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்திற்கு மாஸ்க் போட்டால், அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் போட்டால், சருமம் பொலிவு பெறும்.

பால், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சிறிது பாலுடன், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகளில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமத்துளைகள் சுத்தமாகி முகம் அழகாக காணப்படும்.

தக்காளி ஜூஸ் தக்காளி சாறும் மிகவும் சிறப்பான சருமத்தை சுத்தம் செய்ய உதவும் பொருட்களில் ஒன்று. அதிலும் தக்காளி சாற்றில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகம் பட்டுப்போன்று பொலிவோடு காணப்படும். முக்கியமாக இந்த முறையை வாரத்திற்கு 2 முறை போடுவது மிகவும் நல்லது.

மஞ்சள் தூள், கோதுமை மாவு மற்றும் நல்லெண்ணெய் மஞ்சள் தூள், கோதுமை மாவு மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, அதனை முகத்தில் தடவி மாஸ்க் போட்டால், முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் அனைத்தும் நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

கேரட் ஜூஸ் தினமும் கேரட் ஜூஸை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவி வர, சருமத் துளை வெளிப்படுவது தடுக்கப்பட்டு, முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.

தேன் மற்றும் பட்டை பட்டை பொடியில் தேன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் போது அதனை பிம்பிள் உள்ள இடத்தின் மேல் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவினால், பருக்கள் நீங்குவதோடு, அதனால் தழும்புகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

கற்றாழை ஜூஸ் கற்றாழை ஜெல் சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை சரிசெய்யும் குணம் கொண்டது. எனவே அன்றாடம் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் உற வைத்து கழுவி வர, முகம் ஈரப்பசையுடன், பொலிவோடு இருக்கும்.

Pin It

Related posts

பெண்களுக்கு உண்டாகும் அழகு சார்ந்த பிரச்சனைகள் எவை?

nathan

நகங்களைப் பராமரித்து அழகைக் கூட்டிக் கொள்ள இவற்றை செய்யுங்கள்!…

sangika

மகத்துவம் பெற்ற மாதுளை..!

sangika

முகப்பருக்களை ஒழிக்க காளான்!…

sangika

முகத்தை அழகாக மாற்றும் கோப்பி

nathan

ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை சில உறுப்புகளின் அமைப்பை வைத்தே நம்மால் கண்டறிய இயலும்

nathan

அலியா பட்டின் அழகின் ரகசியம் யாருக்காவது தெரியுமா ?

nathan

ஃபிஷ் ஸ்பா அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும்

nathan

பிரபலங்களின் அழகு ரகசிய குறிப்புகள்

nathan