24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
coer 10 1515575576
எடை குறைய

உங்களுக்கு தெரியுமா இந்த பொருளை நாக்கின் அடியில் வைத்தால் உடல் எடை வேகமாக குறையும்!

உங்கள் உடல் எடைதான் உங்களுக்கு பெரிய பிரச்சனையா இருக்கிறதா? எப்பாடி பட்டாவது குறைக்க வேண்டும் என்று நினைத்தாலும் உடல் எடை ஏறுகிறதே தவிற குறையவில்லை என புலம்புபவர்களில் ஒருவரா நீங்கள்? இன்னும் சிலருக்கு வேறு மாதிரியாக இருக்கும். ஒரு சிலவாரங்களில் கஷ்டப்பட்டாவது உடல் உடையை குறைத்திருப்பார்கள். அடுத்த பத்து நாட்களில் மீண்டும் உடல் எடை விஸ்வரூபம் எடுக்கும்.

இப்படி எல்லா இடங்களும் ப்ளாக் செய்யப்பட்டு, தோல்வி அடைந்திருந்தால் கொஞ்சம் இந்த மூலிகைகள் பக்கம் வாங்க. இவை உடல் எடை குறைப்பதில் எதுவும் மாய மந்திரம் செய்வதில்லை. மாறாக உங்கள் கடுமையான கொழுப்பை குறைக்கிறது. மெட்டபாலிசத்தை தூண்டுகிறது. கலோரியை வேகமாக எரிக்கிறது. எப்படி என தெரிய ஆவலாக இருந்தால், அந்த மூலிகைகள் பற்றியும், அவற்றை பயன்படுத்தும் விதத்தையும் தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.

குக்குலு : குக்குலு ஒரு இந்திய மூலிகை பிசின். அற்புத மருந்து. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். பெருங்காயம் போல் இருக்கும். இது புற்று நோயை எதிர்க்கும். கொலஸ்ட்ராலை கரைக்கும். இது தைராய்டு ஹார்மோனை ஒழுங்குபடுத்துவதால் மொத்த உடல் இயக்கமும் சீரடைகிறது.

பயன்படுத்தும் முறை : கால் ஸ்பூன் குக்குலு எடுத்து நாக்கின் அடியில் வைத்திருங்கள். அது மெதுவாக கரைய ஆரம்பிக்கும். ஒரு நாளைக்கும் 3-4 நான்கு முறை இப்படி சாப்பிடவும். அல்லது முந்தைய நாள் கால் ஸ்பூன் அளவு எடுத்து அரை கப் நீரில் ஊற வையுங்கள். மறு நாள் இந்த நீரை வடிக்கட்டி குடிக்க வேண்டும்.

செம்பருத்தி : செம்பருத்தியின் எண்ணற்ற சத்துக்கள் கிடைக்கின்றன. உடல் எடையை குறைக்க உதவுகின்றது. அதிலுள்ள அமைலேஸ் குளுகோஸை உடைத்து செரிமானம் செய்ய உதவுகிறது. கலோரியை வேகமாக குறைப்பதால் உடல் எடை கணிசமாக குறையும்.

பயன்படுத்தும் முறை : தேவையானவை : காய்ந்த செம்பருத்தி இதழ்கள் – 2 ஸ்பூன் நீர்- 2 கப் தேன்- 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை : ஒரு ஜாரில் காய்ந்த இதழ்களை போட்டு அதில் 2 கப் நீரை ஊற்றி மூடி வைத்திருங்கள். 6 நிமிடம் கழித்து நீரை வடிகட்டி வெதுவெதுப்பாக தேன் கலந்து குடிக்க வேண்டும். காலை மாலை என இரு வேளை குடிக்க வேண்டும். நலல் பலன் தெரிய ஆரம்பிக்கும்.

கற்றாழை : கற்றாழை தண்டில்லாத செடி. இந்திய அரிய மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகளில் இது முக்கியமானது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. தினமும் -2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை நீங்கள் பயன்படுத்தலாம். ரத்தத்தில் படியும் கொழுப்பை கரைத்து, சுத்தகரிக்கின்றது. இதய நோய்களை தடுக்கும். செரிமான சக்தியை அதிகரிக்கும்.

பயன்படுத்தும் முறை : கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து நீரில் கலந்து நன்றாக கலக்கி தினமும் காலையில் குடிக்க வேண்டும். இப்படி செய்தால் வயிற்றில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி சுத்தப்படுத்தும். உடல் எடை குறைவதில் ஆச்சரியமான மாற்றங்கள் கிடைக்கும்.

பட்டை : பட்டைப் பொடி அற்புதமான மசாலா பொருள். புற்று நோயை எதிர்க்கும் . கெட்ட கொலஸ்ட்ராலை செரிமானத்திற்குட்படுத்துகிறது. அதோடு குளுகோஸ் அளவை ரத்தத்தில் குறைக்கிறது.

தேவையானவை : பட்டைப் பொடி – 1 ஸ்பூன் நீர் – 1 கப்

பயன்படுத்தும் முறை : நீரை கொதிக்க வைத்து அதில் பட்டைபொடியை போட்டு 2-3 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனை வடிக்கட்டி குடிக்க வேண்டும். பசியை தூண்டும். வெறும் வயிற்றில் இதனை குடிக்க வேண்டாம். சாலை உணவு மற்றும் இரவு உணவிற்குப் பின் குடியுங்கள்.

ஏலக்காய் : ஏலக்காய் சுவை மட்டுமல்ல உடல் எடையையும் குறைக்கும் என்பது தெரியுமா? இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. வயிற்றில் வாய்வு உண்டாவதை தடுக்கிறது. அதிக வாய்ப் பிடிப்பினாலும் உடல் எடை கூடும் என்பதை நினைவில் கொள்க.

தேவையானவை : ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன் நீர்- 1 கப் க்ரீன் டீ பொடி – 1 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை : நீரை கொதிக்க வைத்து அதில் ஏலக்காய் பொடி போடுங்கள். 2 நிமிடம் கொதிக்க வைத்து பின் இறக்கி, அதில் க்ரீன் டீப் பொடியை போட்டு மூடி வைத்திருங்கள். அதன் பின் வடிகட்டி அந்த நீரை குடிக்க வேண்டும்.

பூண்டு : பூண்டு ஒரு அற்புதமான மூலிகை. உடலில் கொழுப்பை கரைக்கும் முக்கிய வேலை செய்வதில் பூண்டு முதன்மையானது. புற்று நோய்க்கு எதிரானது. உடலில் கொழுப்பை ஏறாமம் தக்க வைப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. உடல் எடையை குறைக்கும் ஒரு மேஜிக் மூலிகை இது.

தேவையானவை : பூண்டு – 1 பல் நீர்- 1 கப் எலுமிச்சை சாறு – அரை மூடி.

தயாரிக்கும் முறை : பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நீரை கொதிக்க வைத்து அதில் பூண்டு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள். அதனை ஆறியபின் வடிக்கட்டி எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்

coer 10 1515575576

Related posts

வீட்டில் இருந்தே உடல் எடையை குறைக்கும் வழிகள்

nathan

பேரிச்சம் பழம் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது?

nathan

ஒல்லியாகனும் என்று ஆசையா 9 முறை சாப்பிட்டு பாருங்களேன்

nathan

உடல் எடை குறைய என்ன உணவுகளை சாப்பிடலாம்

nathan

உங்களுக்கு எட்டே வாரங்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா?

nathan

உடல் எடையை குறைப்பதற்கான சில எளிய ஆயுர்வேதத்த வழிமுறைகள்!

nathan

விரைவில் உடல் எடையை குறைக்கும் 3 உடற்பயிற்சிகள்

nathan

உடல் எடை குறைய வேண்டுமா ? சிம்பிள் டயட் ..

nathan

உடல் எடையை மிக வேகமாக குறைக்க வெல்லம்!….

sangika