29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
ci 21 1503276155 01 1514794645
நகங்கள்

நகங்களை சீக்கிரமாக வளர செய்யவும், அழகாக்கவும் இதை முயன்று பாருங்கள்!

நகங்கள் என்பவை நமது அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல.. நகங்கள் நமது உடலின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் ஒரு விஷயமும் தான்.. உங்களது நகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உங்களது ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

ஒரு சிலருக்கு ஹார்மோன் குறைபாடுகள், ஊட்டச்சத்து குறைபாடுகள், சாப்பிடும் சில மருந்துகளின் மூலமாகவும் ஆரோக்கியம் பாதிப்படைய கூடும். நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்களது உணவு பழக்க முறையானது சீரானதாக இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் சில அன்றாட விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியமாகிறது. இந்த பகுதியில் நகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னென்ன விஷயங்களை எல்லாம் செய்ய வேண்டியது அவசியம் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

நகம் கடிக்கும் பழக்கம்
நகம் கடிக்கும் பழக்கமானது நகங்களின் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் உங்களது உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் தன்மை கொண்டது. எனவே இந்த நகம் கடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.

நெயில் பாலீஷ் உங்களுக்கு நெயில் பாலீஷ் போடும் பழக்கம் இருந்தால், நீங்கள் முதல் கோட்டிங்கிற்கும் இரண்டாவது கோட்டிங்கிற்கும் இடையில் ஒன்று அல்லது இரண்டு நிமிட இடைவெளியாவது விட வேண்டியது அவசியமாகும்.

வேலை செய்யும் போது, துணி துவைக்கும் போது பாத்திரங்கள் கழுவும் போது சோப்புகள் உங்களது கைகளில் படுவதால் நகங்கள் வலிமையிழந்து போக கூடும். எனவே முடிந்தவரை வீட்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடும் போது நீங்கள் கை உறைகளை அணிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தரம் முக்கியம் நெயில் பாலிஷ்கள் குறைந்த விலையிலும் கூட கிடைக்கின்றனவே என்று தரமற்ற நெயில் பாலிஷ்களை பயன்படுத்தக் கூடாது. தரமான பொருட்களையே நகங்களை அழகுப்படுத்த பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அழுக்குகள் நகங்களை நீளமாக வளர்த்தால் அது அழகாக தான் இருக்கும். அதற்காக நகங்களில் அழுக்குகள் சேர விட கூடாது. நகங்களில் அழுக்குகள் சேர்ந்தால் அது நகங்களின் அழகினை மட்டுமல்ல.. உங்களது ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக இருக்கும். எனவே நகங்களில் அழுக்குகள் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மெனிக்கியூர் உங்களது நகங்கள் சின்னதாக இருந்தாலும் கூட நீங்கள் மெகிக்கியூர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். நீங்கள் இந்த மெனிக்கியூர் அழகு சிகிச்சையை வீட்டிலேயே கூட எடுத்துக் கொள்ளலாம். நேரம் இல்லாதவர்கள் பார்லர்களில் கூட எடுத்துக் கொள்ளலாம்.

எலுமிச்சை எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் நகங்களின் நிறத்தை பாதுகாக்கும். தேங்காய் எண்ணையில் உள்ள ‘லாரிக் அமிலம்’ புறத்தோலின் தன்மையை உறுதியாக்கும் . ஒரு தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணையுடன் 5 சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை மிதமாக சூடாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் உங்கள் நகங்களை அதில் பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் நன்கு மசாஜ் செய்து விட வேண்டும். இதனை தினமும் ஒருமுறை பின்பற்ற வேண்டும்.

ஆரஞ்சு சாறு ஆரஞ்சு சாற்றில் உள்ள போலிக் அமிலமும் வைட்டமின் – சி வகையும் நகங்களின் வளர்ச்சிக்கு உதவும். உங்கள் நகங்களை 5 நிமிடத்திற்கு ஆரஞ்சு சாற்றில் நனைத்து பின்னர் கழுவி விடவும். பின்னர் நகங்களை உலர வைத்து விடவும்.

பூண்டு பூண்டில் உள்ள சல்பர் சத்து நகங்கள் நொறுங்காமல் நன்கு வளர உதவுகிறது. ஒரு கப் தண்ணீரில் நன்கு மசித்த பூண்டும் ஒரு தேக்கரண்டி லெமன் சாறும் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அது நன்கு ஆறிய பின் அதனை ஒரு நகப்பூச்சு பாட்டிலில் ஊற்றி நகங்களில் தினமும் இரவு தூங்கும் முன் தேய்க்க வேண்டும்.

ஆலிவ் ஆயில் ஆலிவ் எண்ணையில் உள்ள வைட்டமின் ஈ இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி நகங்களை நன்கு வளரச் செய்யும். இரவு தூங்கும் முன் உங்களுடைய நகங்களையும் புறத்தோல் பகுதிகளையும் சூடான ஆலிவ் எண்ணையைக் கொண்டு தேய்த்து கொள்ளவும். இதனை தினமும் கடைபிடிக்க வேண்டும்.

தேன் தேங்காய் எண்ணையில் உள்ள லாரிக் அமிலமும் தேனில் உள்ள அமினோ அமிலமும் நகங்களின் பளபளப்பிற்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இந்த இரண்டு பொருட்களையும் கலந்து நகங்களின் மேல் 5 நிமிடம் தேய்க்க வேண்டும். சுமார் 15 நிமிடம் கழித்து அதனை கழுவி உலரச் செய்ய வேண்டும். இதனை வாரம் இருமுறை கடைபிடிக்க வேண்டும்.

தக்காளி தக்காளியில் உள்ள பையோடின் மற்றும் வைட்டமின் – ஏ நகங்களின் வளர்ச்சிக்கு உதவும். ஒரு தேக்கரண்டி தக்காளி சாற்றிணை அதே அளவு ஆலிவ் எண்ணையுடன் கலக்க வேண்டும். உங்கள் நகங்களை அதில் 10 நிமிடம் நனையச் செய்ய வேண்டும். ஒரு வாரத்தில், தேவையான நேரங்களில் இதனைச் செய்து பயன்பெற வேண்டும்.

ஆளிவிதை ஆளி விதையில் உள்ள லெசிதின் மற்றும் ‘ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் நகங்களின் தன்மையைப் பாதுகாக்கும். ஆளிவிதை எண்ணையை நகங்களில் தேய்க்க வேண்டும். ஈரப் பதத்துடன் இருக்க கையுறைகளைப் பயன்படுத்தவும். இதனை ஒரு நாளுக்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

ஆரோக்கியத்திற்கு ஒரு தேக்கரண்டி ஆரஞ்சு சாறு, 3 சொட்டு பூண்டு சாறு மற்றும் 5 சொட்டு ஆலிவ் எண்ணையைக் கலந்து நகங்களில் தடவ வேண்டும். பின்னர் அதனை தண்ணீரில் கழுவி விடவேண்டும். இதனை தினமும் செய்ய வேண்டும்.

கிரீன் டீ கிரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நகங்களின் வளர்ச்சிக்கு உதவும். பிரஷ் ஆன கிரீன் டீ தயாரித்து அதனை ஆற வைக்க வேண்டும். உங்களுடைய நகங்களை அதில் ஊறவைக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவேண்டும். பின்னர் கைகளுக்கான க்ரீம் கொண்டு தேய்த்துக்கொள்ள வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்ய வேண்டும்.

கல் உப்பு கல் உப்பில் உள்ள 20 மினரல்கள் நகங்களின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். கொதிக்க வைத்த நீரில் 1 தேக்கரண்டி கல் உப்பினையும் 3 சொட்டு ரோஸ்மேரி எண்ணையையும் கலந்து கொள்ளவும். உங்கள் நகங்களை அதில் 10 நிமிடம் ஊற வைத்துப் பின்னர் உலர்த்தி விடவும். இதனை வாரத்தில் 3 முறை செய்யவும்.

விட்டமின் ஈ வைட்டமின் ஈ சத்து நகங்களுக்குப் புத்துணர்ச்சியையும் அழகையும் கொடுக்கும். இரண்டு வைட்டமின்-ஈ கேப்சூல்களை எடுத்து அதில் உள்ள எண்ணெய்யை மட்டும் துளையிட்டு எடுத்துக் கொள்ளவேண்டும். அதனுடன் இரண்டு சொட்டு லாவண்டர் அத்தியாவசிய எண்ணையைக் கலந்து கொள்ள வேண்டும். இதனை நகங்களுக்குப் பூசினால் காலையில் அவை பளபளப்பாகவும் உறுதியாகவும் தென்படும்.

ci 21 1503276155 01 1514794645

Related posts

மஞ்சள் நிற நகங்களை சரி செய்யமுடியுமா?nail care tips in tamil

nathan

நகங்களும் சுவாசிக்கும் உங்கலுக்கு தெரியுமா?

nathan

நகத்தைச் சுற்றி தோல் உரிவதை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்

nathan

அழகான நகங்களைப் பெற

nathan

மஞ்சள் நிற நகங்களை சரி செய்யமுடியுமா?

nathan

நகங்கள் அழகாக எளிய வீட்டுக் குறிப்பு!….

sangika

நகங்களின் பளபளப்பிற்கும் வளர்ச்சிக்கும்

nathan

சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய்!….சூப்பர் டிப்ஸ்

nathan

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!

sangika