26 C
Chennai
Wednesday, Nov 13, 2024
24 1424776872 shutterstock 163874330 30 1514616283
தலைமுடி சிகிச்சை

அடிக்கடி தலையை சொறிய தோணுதா? அப்ப இத படிங்க!

தலை ஒரு சிலருக்கு அரித்துக் கொண்டே இருக்கும். பொது இடங்கள் என்று கூட பார்க்காமல் சொறிந்து கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தலை அரிப்பினால் வெண்மையாக மாவு போன்ற ஒரு பொருள் கொட்டும், இதனால் ஈறு, பேன் போன்றவை உருவாவது, பொடுகுத் தொல்லை, உடலில் அரிப்பு, சொரி போன்றவை உண்டாகும். எனவே இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இந்த தலை அரிப்பு நாம் பயன்படுத்தும் அதிக கெமிக்கல்கள் நிறைந்த ஷாம்புவினால் கூட உண்டாகலாம். எனவே இந்த தலை அரிப்பை இயற்கையான பொருட்களை கொண்டு நீக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த பகுதியில் தலையில் உண்டாகும் அரிப்பினை எப்படி விரைவில் சரி செய்யலாம் என்பது பற்றி காணலாம்.

ஆவாரம் பூ ஆவாரம் பூவை நன்றாக பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். அதனுடன் இலுப்பை எண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி இளஞ்சூடாக எடுத்து வாரம் இருமுறை தேய்த்து குளிப்பதால் தலையில் உண்டாகும் அரிப்பு, பொடுகு, சொரியாசிஸ் போன்றவை குணமாகும். உடல் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் உதவும் இந்த ஆவாரம் பூ பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இது சாலை ஓரங்களிலேயே கிடைக்க கூடிய ஒன்று. இது மஞ்சள் நிற பூக்களை கொண்டது.

அருகம்புல் அருகம்புல் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. அருகம்புல் சாறு இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இந்த அருகம்புல் சாறுடன் சிறிது மஞ்சள் பொடி, சித்தரத்தை பொடி சேர்த்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்தால் தலையில் ஏற்படும் அரிப்பு, பொடுகு தொல்லை நீங்கும்.

நல்லெண்ணெய் நல்லெண்ணெய் தலைக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. தலைமுடி நன்றாகவும் செழிப்பாகவும் வளர இது உதவுகிறது. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய்யை எடுத்துக் கொண்டு, இதனுடன் பூண்டு பற்களை லேசாக தட்டிபோடவும். வெள்ளை மிளகு பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் தலையில் உண்டாகும் அரிப்பு, பொடுகு தொல்லை நீங்கும். இதனை உடலுக்கு தேய்த்து குளிப்பதால் அரிப்பு பிரச்னை நீங்கும்.

தயிர் தயிர் நமது வீட்டிலேயே இருக்க கூடிய ஒரு பொருள் தான். இந்த தயிர் அழகு, ஆரோக்கியம் என இரண்டிற்குமே உதவுகிறது. வெள்ளை மிளகு பொடி கால் ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து தலையில் மசாஜ் செய்து குளித்துவர அரிப்பு குணமாகும். தலையில் அரிப்பு ஏற்பட்டால், சிறிது உப்பு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கரைத்து தலையில் தேய்த்து குளித்தால்

வெந்தயம் வெந்தயம் தலைமுடி பிரச்சனைகளுக்கும் பொடுகு பிரச்சனைகளுக்கும் மிகவும் சிறந்த ஒன்று. வெந்தயத்தை முந்தைய நாளே நன்றாக ஊற வைத்து, இதனை நன்றாக அரைத்து அதனை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும்.

வினிகர் தலைக்கு ஷாம்பு அல்லது சிகக்காய் போட்டு குளித்து முடித்த பிறகு நீங்கள் கடைசியாக வினிகர் கலந்த தண்ணீரில் உங்களது தலைமுடியையும், முடியின் வேர்க்கால்களையும் நன்றாக அலசிக் கொண்டால் தலையில் உண்டாகும் அரிப்பினை தடுக்கலாம்.

மருதாணி இலை மருதாணி இலை உங்களது கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கும் மிகச்சிறந்த ஒரு பொருளாகும். இந்த மருதாணி இலையை நன்றாக அரைத்து அதனுடன் தயிர், நெல்லிக்காய் பொடி, வெந்தய பொடி ஆகியவற்றை சேர்த்து தலைக்கு மாஸ்க் போன்று போடுவதன் மூலமாக உங்களது தலையில் உள்ள பொடுகு பிரச்சனைகள் போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.

தேங்காய் தேங்காய் எண்ணெய்யை போலவே தேங்காய் பாலும் தலைமுடி பிரச்சனைகளைக்கு ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. இந்த தேங்காய் பாலை தலைக்கு பேக் போட்டு, தலை முடியை அலசி வந்தால், தலை முடியும் ஆரோக்கியமாக இருக்கும். தலையில் அரிப்பு, பொடுகு போன்ற தொல்லைகள் வராமலும் இருக்கும்.

பாசிப்பயறு பாசிப்பயிரை நன்றாக முளைவிடும் வரையில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் முளைக்கட்டிய இந்த பாசிப்பயறை எடுத்து நன்றாக அரைத்து, அதில் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு மாஸ்க் போட்டு, 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை மையில்ட் ஷாம்பு போட்டு நன்றாக அலசிக் கொள்ளுங்கள். இதனால் தலையில் அரிப்பு உண்டாகாமலும், தலைமுடி பளபளப்பாகவும் இருக்கும்.

வசம்பு வசம்பு தலைமுடி பிரச்சனைகளுக்கும், தலை அரிப்பிற்கும் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. வசம்பை நன்றாக அரைத்து பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலையில் உள்ள பொடுகு தொல்லைகள் மற்றும் அரிப்புகள் நீங்கும்.

அரிசி நீர் அரிசி கழுவிய நீர் அல்லது சாதம் வசித்த கஞ்சி போன்றவற்றை வீணாக்கி விடாமல், அதனை தலைக்கு ஷாம்பு போட்டு குளித்த உடன் தலையை அலச பயன்படுத்துங்கள். இதனால் உங்களது தலைமுடி ஆரோக்கியமடைவதோடு மட்டுமல்லாமல், முடியின் வேர்க்கால்கள் வலிமையடையும். அதோடு கூந்தலும் கண்டிஸ்னர் போட்டது போல மென்மையாகவும், சிக்கல்கள் இல்லாமலும் இருக்கும். முடியும் சீக்கிரமாக வளரும்.

வேப்பில்லை தலைக்கு வேப்பில்லையை அரைத்து அதன் பேஸ்டை போட்டு குளித்து வந்தால் உங்களது தலையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் விரைவிலேயே குணமாகும். பொடுகு தொல்லை இருக்காது. தலையில் அரிப்பும் உண்டாகது. பேன், ஈறு தொல்லைகளும் முற்றிலும் அழியும்.

துளசி துளசி உங்களது கூந்தல் பிரச்சனைகளான பொடுகு தொல்லை, பேன் தொல்லை போன்றவற்றிற்கும் தலை அரிப்பிற்கும் மிகச் சிறந்த மருந்தாகிறது. இந்த துளசியை பேஸ்ட் ஆக செய்து அதனுடன் கருவேப்பில்லை பேஸ்டையும், எலுமிச்சை சாறையும் கலந்து பேக் ஆக போட்டால் உங்களுக்கு பொடுகு தொல்லை இருக்கவே இருக்காது. தலையில் அரிப்பும் இருக்காது.

24 1424776872 shutterstock 163874330 30 1514616283

Related posts

உங்க முடி நீளமா அடர்த்தியா பளபளன்னு கருகருன்னு வளர…

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த புதிய வழிகள் முடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் தெரியுமா?

nathan

இழந்த முடியை மீண்டும் பெற வழிகள்

nathan

கூந்தல் பிரச்சனைகளை தீர்வு காணும் உருளைக் கிழங்கு

nathan

சூப்பர் டிப்ஸ்! பொடுகைப் போக்கி முடி வளர்ச்சியை வேகமாகத் துண்டும் முள்ளங்கி…

nathan

உங்க தலைமுடி அளவுக்கதிகமா உதிர்ந்து சொட்டையாகுதா?

nathan

முடி உதிரலை தடுத்து அடர்த்தியாக புதிய முடிகளை வளர செய்ய ஒரே தீர்வு எலுமிச்சை!முயன்று பாருங்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பளபளப்பான பட்டுப் போன்ற உறுதியான கூந்தலுக்கு 10 எளிய வழிகள்!!!

nathan

வலுவான முடி வளர்ச்சிக்கு ஹென்னா முடி எண்ணெய் எவ்வாறு பயன்படுத்துவது

nathan