23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
vaginal discharge 06 1515215737
மருத்துவ குறிப்பு

வெள்ளைப்படுதல் அதிகமா இருக்கா உங்களுக்கு? அது ஏன் தெரியுமா?அப்ப இத படிங்க!

வெளியே வெளிப்படையாக சொல்ல முடியாமல் பெண்கள் தவிக்கும் ஒரு பிரச்சனை தான் வெள்ளைப்படுதல். சில பெண்களுக்கு இந்த வெள்ளைப்படுதலானது உடுத்திய உடை நனைந்து போகும் அளவில் அதிகமாக இருக்கும். அத்துடன் அந்தரங்க பகுதியில் அரிப்பு மற்றும் துர்நாற்றமும் வீசும். அதை லுகோரியா என்று அழைப்பர்.

வெள்ளைப்படுதல் நீர்மமாக மற்றும் துர்நாற்றமின்றி இருந்தால், அது ஆரோக்கியமான உடலைக் குறிக்கும். ஆனால் அதுவே அந்த வெள்ளைப்படுதல் கெட்டியாக அல்லது மஞ்சளாக, கடுமையான துர்நாற்றத்துடன் இருந்தால், அந்தரங்க பகுதியில் கடுமையான தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு முக்கிய காரணம் ஈஸ்ட்ரோஜென் ஏற்றத்தாழ்வு, பாலியல் தொற்று போன்றவைகள் தான். இப்படிப்பட்ட வெள்ளைப்படுதல் பிரச்சனையை மருந்து மாத்திரைகளின் உதவியின்றி, இயற்கை வழியிலேயே சரிசெய்ய முடியும். இக்கட்டுரையில் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வழி #1 கருவேல மரத்தின் காய்கள் பாலியல் குறைபாடுகளுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக இது பெண்கள் சந்திக்கும் வெள்ளைப்படுதலுக்கும், ஆண்கள் சந்திக்கும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கும் நல்லது.

வழி #2 மாதுளம் பூவை உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த மாதுளம் பொடி, குங்குமப்பூ மற்றும் நாட்டுச் சர்க்கரையை சரிசம அளவில் எடுத்து, ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு தினமும் காலையில் வெறும் வயிற்றில், 1/2 டீஸ்பூன் சாப்பிட வேண்டும். ஒருவேளை வெள்ளைப்படுதல் தீவிரமாக இருந்தால், ஒரு நாளைக்கு 2-3 முறை உட்கொள்ள வேண்டும்.

வழி #3 தினமும் ஒரு பச்சை வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், லுகோரியா பிரச்சனை நீங்கும். இல்லாவிட்டால், வாழைமரத்தின் வேரை 5-6 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து இறக்கி, வெதுவெதுப்பான பின் அந்நீரில் 20-25 நிமிடம் உட்காருங்கள். இதனால் யோனியில் ஏற்பட்ட தொற்றுகள் நீங்கும்

வழி #4 தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1-2 துண்டு கடுக்காயை சாப்பிட்டால், பெண்கள் சந்திக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளும் சரியாகும். மேலும் இது மலச்சிக்கலையும் தடுக்கும்.

வழி #5 1/2 டீஸ்பூன் சர்பகந்தா பொடியை நீரில் கலந்து குடியுங்கள். இப்படி தொடர்ந்து 4-5 நாட்கள் குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும் இந்த பொடி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

வழி #6 2-3 உலர்ந்த அத்திப் பழத்தை ஒரு டம்ளர் நீரில் இரவில் படுக்கும் முன் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து சாப்பிடுங்கள். இது யோனியில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தையும் சரிசெய்யும்.

வழி #7 அஸ்பாரகஸ் பொடியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளது. இவை வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதற்கு இந்த பொடியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

வழி #8 1/2 டீஸ்பூன் நெல்லிப் பொடியை நீரில் கலந்து குடித்து வந்தால், வெள்ளைப்படுல் பிரச்சனை நீங்கும். இல்லாவிட்டால் மஞ்சள் தூள் மற்றும் நெல்லிப் பொடியை சரிசம அளவில் எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, யோனிப் பகுதியில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீர் அல்லது வேப்பிலை நீரால் கழுவுங்கள்.

வழி #9 கொட்டைப் பாக்கு பொடி வெள்ளைப்படுதல் அல்லது லுகோரியா பிரச்சனைக்கு தீர்வளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே வெள்ளைப்படுதல் பிரச்சனை உள்ள பெண்கள் வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கத்தைக் கொள்வது நல்லது.

வழி #10 பச்சை வாழைப்பழம் மற்றும் அத்திப்பழ காயை வெயிலில் உலர்த்தி, இரண்டையும் ஒன்றாக சேர்த்து பொடி செய்து கொள்ளுங்கள். பின் தினமும் ஒரு டம்ளர் நீரில் 5-10 கிராம் பொடியை சேர்த்து கலந்து இரண்டு வேளை குடியுங்கள். இப்படி செய்தால், 4-5 நாட்களில் வெள்ளைப்படுதல் பிரச்சனை முற்றிலும் குணமாகும்.

வழி #11 பெண்கள் தினமும் பச்சை வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், ஒரே வாரத்தில் வெள்ளைப்படுதல் பிரச்சனை முற்றிலும் நின்றுவிடும். வேண்டுமானால் முயற்சித்து தான் பாருங்களேன்.

வழி #12 அளவுக்கு அதிகமாக உடலுறவில் ஈடுபடுவது அல்லது சுய இன்பம் காண்பது, நிலைமையை மோசமாக்கும். எனவே இதை குறைத்துக் கொள்வதன் மூலம் வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம்.

வழி #13 மாதவிடாய் காலத்தில் 5-6 மணிநேரத்திற்கு ஒருமுறை பேடுகளை மாற்ற வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், அது அவ்விடத்தில் தொற்றுக்களின் பெருக்கத்தை அதிகரித்து, வெள்ளைப்படுதலை அதிகரிக்கும்.

வழி #14 வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும் பெண்கள், தினமும் ஒரு பௌல் தயிரை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதனால் இனப்பெருக்க உறுப்பின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, வெள்ளைப்படுதல் பிரச்சனையும் நீங்கும்.

வழி #15 தினமும் குடிக்கும் நீரின் அளவை அதிகரிப்பதன் மூலம் உடல் வறட்சி தடுக்கப்படுவதோடு, யோனியில் இருந்து வெளிவரும் துர்நாற்றமிக்க திரவ வெளியேற்றமும் சரியாகும்.

வழி #16 தினமும் உடுத்தும் உள்ளாடை மற்றும் யோனிப் பகுதியை நீரில் நன்கு சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஆன்டி-செப்டிக் சோப்பு அல்லது திரவத்தைக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.

வழி #17 நற்பதமான காய்கறிகள், பழங்கள் மற்றும் ஈஸ்ட்ரோஜென் உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள். இதனால் வெள்ளைப்படுதல் பிரச்சனையை இயற்கையாகவே சரிசெய்துவிட முடியும்.

வழி #18 வெள்ளைப்படுதல் பிரச்சனை உள்ளவர்கள், மைதா உணவுகள், புரோட்டீன் உணவுகள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ளாதீர்கள். இவை நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

vaginal discharge 06 1515215737

Related posts

35 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சில ஆரோக்கிய குறிப்புகள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்களுக்கு ‘கக்கா’ இந்த நிறத்தில் வெளியேறுகிறதா? அப்ப உங்க உடலில் என்ன பிரச்சன இருக்குனு தெரியுமா?

nathan

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கனுமா?

nathan

கொளுத்தும் கோடையில் வியர்குரு பிரச்சனையை வேரோடு விரட்ட சில எளிய வழிகள்!!!

nathan

எலும்புகளை பாதுகாக்க தினசரி இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்…

nathan

தெரிஞ்சிக்கங்க…பற்களின் பின்புறத்தில் உள்ள மஞ்சள் கறையை கவனித்துள்ளீர்களா? அதை போக்க இதை செய்தால் போதுமே

nathan

அலுவலகப் பணியும் குடும்பப் பொறுப்பும் இரண்டையும் எப்படி சமாளிப்பது?

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த செடி மட்டும் இருந்தா கொசு உங்க வீட்டு பக்கமே வராது…

nathan

லவ்வர் வேணுமா… மருந்து சாப்பிடுங்க…

nathan