25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
asthma 04 1515044164
மருத்துவ குறிப்பு

இந்த ஒரு பொருள் ஆஸ்துமா பிரச்சனைக்கு குட்-பை சொல்ல வைக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

வெங்காயத்தாள் கிடைக்கும் நன்மைகள்…

அனைவரது சமையலறையிலும் இருக்கும் ஒரு பொதுவான உணவுப் பொருள் தான் வெங்காயம். இது உணவின் சுவையை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமின்றி, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் தன்னுள் கொண்டது. இதற்கு வெங்காயத்தில் அடங்கியுள்ள மருத்துவ பண்புகள் தான் முக்கிய காரணம்.

  ஆனால் வெங்காயத்தைக் கொண்டு ஆஸ்துமா பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பது தெரியுமா? வெங்காயத்தில் 2 வகைகள் உள்ளன. அவை வெள்ளை மற்றும் சிவப்பு. இவற்றில் சிவப்பு வெங்காயம் தான் ஆஸ்துமாவை சரிசெய்வதில் சிறந்தது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

அதோடு சிவப்பு வெங்காயத்தில் வைட்டமின் சி, சல்பர், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகளும் அடங்கியுள்ளன. பல்வேறு ஆய்வுகளிலும் சிவப்பு வெங்காயத்தில் உள்ள தியோசல்பினேட், க்யூயர்சிடின், ஆந்தோசையனின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் ஆஸ்துமா மற்றும் அலர்ஜியை சரிசெய்வதாக் கண்டறியப்பட்டுள்ளது.

இப்போது ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட சிவப்பு வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது என்று காண்போம். அதைப் படித்து முயற்சித்து, ஆஸ்துமாவில் இருந்து விடுபடுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சிவப்பு வெங்காயம் – 1/2 கிலோ

* தேன் – 6-8 டேபிள் ஸ்பூன்

* நாட்டுச்சர்க்கரை – 300-350 கிராம்

* எலுமிச்சை – 2

* தண்ணீர் – 5-6 டம்ளர்

 

செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து உருக வைக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயத்தை நறுக்கிப் போட வேண்டும்.

* அடுத்து அதில் நீர் சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

* நீர் கொதித்து நன்கு சுண்டிய நிலையில், அடுப்பை அணைத்து கலவையை இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின் அதில் எலுமிச்சைகளைப் பிழித்து, தேன் சேர்த்து கலந்து, ஒரு கண்ணாடி பாட்டியில் போட்டுக் கொள்ளுங்கள்.

உட்கொள்ளும் முறை:
பெரியவர்களுக்கு ஆஸ்துமா என்றால், ஒவ்வொரு வேளை உணவு உட்கொள்வதற்கு முன்பும் 1 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும். அதுவே குழந்தைகளுக்கு என்றால் 1 டீஸ்பூன் சாப்பிட வேண்டும். இப்படி ஆஸ்துமாவிற்கான அறிகுறிகள் போகும் வரை பின்பற்ற வேண்டும்.

இப்போது வெங்காயத்தால் கிடைக்கும் இதர நன்மைகள் குறித்துக் காண்போம்.

நன்மை #1
வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அதனால் இரத்த செல்கள் உறைவது தடுக்கப்பட்டு, இரத்தம் மெலிவடையும். இதனால் இதயத்தில் அடைப்புக்கள் ஏற்படுவது நீங்கி, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.

நன்மை #2
வெங்காயத்தை அடிக்கடி உணவில் பயன்படுத்தினால் பல் சொத்தை மற்றும் வாயில் தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்படும். அதிலும் தினமும் பச்சை வெங்காயத்தை வாயில் போட்டு 2 நிமிடம் மெல்லுவதன் மூலம், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அனைத்தும் அழிக்கப்படும்.

நன்மை #3
முகத்தில் பருக்கள் அதிகம் உள்ளதா? உங்கள் அழகு பருக்களாலேயே பாழாகிறதா? அப்படியெனில் வெங்காய சாற்றினை தேன் அல்லது ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவுங்கள். இதனால் பருக்கள் விரைவில் மறையும்.

நன்மை #4 இருமல் மற்றும் தொண்டைப்புண் இருக்கிறதா? அதிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்க வேண்டுமானால், வெங்காய சாறு மற்றும் தேனை சரிசம அளவில் எடுத்து கலந்து குடியுங்கள். இதனால் வெங்காயத்தில் உள்ள பண்புகள் கிருமிகளை அழித்து விரைவில் நல்ல பலனைத் தரும்.

நன்மை #5 வெங்காயம் பாலியல் வாழ்க்கையை சிறக்க உதவும். எனவே பாலுணர்ச்சி குறைபாட்டினால் கஷ்டப்படுபவர்கள், 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றுடன், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலந்து, தினமும் 2 வேளை உட்கொள்ளுங்கள். இதனால் பாலுணர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு, பாலியல் வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்.

நன்மை #6 வெங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், வயிற்று வலி, வயிற்று உப்புசம் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைப் போக்கும். ஆகவே வெங்காயத்தை தவறாமல் உணவில் சேர்த்து வாருங்கள்.

நன்மை #7 புற்றுநோயின் அபாயத்தைத் தவிர்க்க வேண்டுமா? அப்படியானால் வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள உட்பொருட்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தைத் தடுத்து, புற்றுநோய் தாக்குவதைத் தடுக்கும்.

நன்மை #8 சிறுநீரக பாதையில் பிரச்சனைகளைக் கொண்டவர்கள், வெங்காயத்தை சாப்பிடுவது நல்லது. அதிலும் 6-7 கிராம் வெங்காயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரை குடித்து வந்தால், விரைவில் குணமாகும்.

நன்மை #9 காது வலிக்கிறதா? அப்படியானால் சில துளிகள் வெங்காய சாற்றினை காதில் விடுங்கள. இதனால் உடனே காது வலி சரியாகிவிடும். மேலும் காதுகளில் இருந்து ஏதேனும் சப்தம் வருகிறதா? இதற்கு பஞ்சுருண்டையில் வெங்காய சாற்றினை நனைத்து காதுகளில் வையுங்கள். இதனால் காதுகளில் இருந்து வரும் சப்தம் சரியாகும்.

asthma 04 1515044164

Related posts

உங்க கால் விரல் சொத்தையா? குணப்படுத்த சூப்பர் டிப்ஸ்..

nathan

உங்களுக்கு தெரியுமா வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்ணை குணமாக்கும் கோவைக்காய்…!

nathan

கழுத்துவலி மூட்டுவலி தீர இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வாருங்கள்…..

sangika

எலும்புகளை பலப்படுத்தும் மருத்துவம்

nathan

மூலநோயைக் குணப்படுத்தும் துத்திக்கீரை! மூலிகைகள் கீரைகள்!!

nathan

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க பாதுகாப்பான வழிமுறைகள் மற்றும் முதலுதவி

nathan

பெண்களே மிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா?இதை முயன்று பாருங்கள்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் பற்றி மக்களிடையே நிலவும் சில தவறான எண்ணங்கள்!

nathan

பெண்களே ஆண் குழந்தை வேண்டுமா? அப்ப இதை முயன்று பாருங்கள்….

nathan