29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
24 1429851465 8 pregnant2
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு ஆண்குழந்தை பிறப்பதற்கான பத்து அறிகுறிகள் தெரியுமா.!

பதினாறு செல்வங்களில் குழந்தை செல்வமும் ஒன்று. இப்படி வரமாக கிடைக்கும் குழந்தைகளை அழகான பெண் குழந்தையாக இருந்தாலும் , வீரமான ஆண் குழந்தையாக இருந்தாலும் நாம் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். வெளி நாடு நிறுவனம் ஒன்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களின் உடல் நிலையை ஆராய்ச்சி செய்து, ஆண் குழந்தை பிறப்பதற்கான 10 முக்கிய அறிகுறிகளை வெளியிட்டுள்ளது.

இயல்பாகவே கருவுற்ற பெண்ணின் சிறுநீரின் நிறம் மாறுபடும். உங்கள் சிறுநீர் அடர்ந்த மஞ்சள் நிறமாக மாறியுள்ளதா ? நீங்கள் ஆண் குழந்தையை பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாகவே கருவுற்ற பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக ஆரம்பிக்கும் . ஏனெனில், குழந்தைக்கு தேவையான பால் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் தாயின் மார்பகத்தில் உருவாகும். உங்களின் வலது மார்பகம் இடது மார்பகத்தை விட பெரிதாக உள்ளதெனில் நீங்கள் ஆண் குழந்தையை பெற்றெடுக்க போகிறீர்கள்.

தொடர்ந்து கால்களின் பாதங்கள் விறைப்பாக மற்றும் குளிச்சியாக உள்ளதா ? உங்களுக்கு நிச்சயமாக ஆண் குழந்தை தான்.

கருவுற்ற பெண்கள் இயல்பாகவே சோர்வாகவும், களைப்பாகவும் இருப்பார்கள் . அவர்கள் அதிகம் உறங்குவதையே விரும்புவார்கள். அப்படி தூங்கும் போது அவர்கள் அதிகமாக இடது பக்கம் தூங்க விரும்பினால் , அந்த பெண்ணனிற்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பெண் கருவுற்றிருக்கும் போது கூந்தலின் வளர்ச்சி அதிகப்படியாக மற்றும் வேகமாகவும் இருந்தால் அந்த பெண் , ஆண் குழந்தையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாகவே ஒரு பெண் கருத்தரித்திருந்தால் அந்த பெண்ணின் உடல் அதிகரிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ! உங்களின் உடல் எடை சரிசமமாக உடலின் எல்லா பகுதிகளிலும் பரவியிருந்தால் நீங்கள் பெண்குழந்தையை கருவில் சுமப்பதாக அர்த்தம். இதுவே உங்களின் வயிற்று பகுதில் மட்டும் அதிகப்படியான சதை இருந்தால் நீங்கள் ஆண் குழந்தையை கருவில் சுமப்பதாக அர்த்தம்.

வழக்கத்தை போல் அல்லாமல் உங்களுக்கு அதீத பசி உள்ளதா ? நீங்கள் புளிப்பு மற்றும் உப்பு அதிகமுள்ள உணவுகளையே அதிகம் விரும்புகிறீர்களா ? உங்களுக்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

உங்கள் முகம் மிகவும் பொலிவுடன் உள்ளதெனில் உங்களுக்கு பெண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் உங்கள் முகத்தில் பருக்கள் மற்றும் கலையிழந்து காணப்பட்டால் உங்களுக்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

நீங்கள் காலையில் எழுந்தவுடன் குமட்டல் மற்றும் சோம்பேறித்தனமாக உள்ளதா? அப்படியென்றால் நீங்கள் ஆண் பிள்ளையை பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் 95% சதவிகிதம் அதிகம் .

பொதுவாவாகவே கருவுற்ற குழந்தையின் இதய துடிப்பு நிமிடத்திற்கு 120லிருந்து 160க்குள்ளாக இருக்கும் . உங்கள் கருவில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 140க்கும் கீழே உள்ளதா? நீங்கள் ஆண் பிள்ளையை பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் 90% சதவிகிதம் அதிகம். 140க்கும் மேலாக இருந்தால் பெண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.24 1429851465 8 pregnant2

Related posts

அவசியம் இல்லாமல் அவசரம் வேண்டாம்!

nathan

சளி, இருமல் விரட்ட உதவும் எளிய வீட்டு வைத்தியம்!

nathan

நீங்கள் சைனஸால அவதிப்படறீங்களா? அப்ப இத படிங்க!

nathan

கர்ப்ப காலத்தில் ஆன்டி பயாடிக் மருந்துகளை சாப்பிடலாமா?

nathan

கார்போஹைட்ரேட் உணவுகள் சாப்பிடுவதை குறைப்பதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!

nathan

பெண்ணுறுப்பில் மட்டும் அடிக்கடி ஏன் அரிப்பு ஏற்படுகிறது? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா குப்பையென தூக்கி வீசும் இந்த பொருள் தான் உயிரை பறிக்கும் புற்றுநோய்க்கு மருந்து!

nathan

அல்சரா… அலட்சியம் வேண்டாம்!

nathan

பற்களில் கறை படிந்துள்ளதா?

nathan