26.7 C
Chennai
Sunday, Feb 23, 2025
1421
மருத்துவ குறிப்பு

நக சுத்தியை குணப்படுத்த இதோ எளிய பாட்டி வைத்திய முறைகள்..!சூப்பர் டிப்ஸ்

நக சுத்தி என்பது பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நகம் பாதிக்கப்படுவது ஆகும். இதை உடனடியாக சரி செய்யாவிட்டால், செப்டிக் ஆகி விரலுக்கே ஆபத்தாக முடியும். இங்கு அதற்கான எளிய தீர்வுகளை காணலாம்

மிக எளிதாக கிடைக்கக் கூடிய கற்றாழைக்கு நக சுத்தை ஆற்றும் சக்தி உள்ளது. கற்றாழை சாறுடன் மஞ்சள் தூள் அரைத்து, விளக்கெண்ணைய் விட்டு சுட வைத்து, அதை நகத்தில் பூசினால் நகசுத்தி குணமாகும்

அதை விட எளிமையான சிகிச்சை ஒன்று உள்ளது. அது தான் வினிகர். ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது வெள்ளை வினிகரை நீரில் கலந்து, அந்த நீரில் விரலை 30 நிமிடங்களுக்கு வைக்க வேண்டும். இப்படி தினமும் 3 வேளை வைத்து, வைட்டமின் ஈ எண்ணெயை தேய்த்தால் உடனடி தீர்வு கிடைக்கும்

உப்பு நீரில் பாதிக்கப்பட்ட விரலை வைத்தாலும், நக சுத்தி சரியாகும். சாதாரண கல் உப்பை கரைத்து அந்த நீரையே இதற்கு பயன்படுத்தலாம். கடல் நீரில் கால் நனைத்தாலும் நக சுத்தி சரியாகும். பின்னர். காலைத் துடைத்து விட்டு அந்த இடத்தில் வினிகரை தடவ வேண்டும்.

சோடா உப்பு பசையை நக சுத்தி வந்த இடத்தில் தடவினால், அதில் உள்ள அலகலைன் பூஞ்சைகளை வளரவிடாமல் தடுத்து நக சுத்தியை குணமாக்குகிறது.

எலுமிச்சை பழத்தை இரு துண்டாக வெட்டி நகத்தை புகுத்தினாலும் நக சுத்தி வராது. மருத்துவ ரீதியாக இது நிரூபணம் ஆகவில்லை என்றாலும், அனுபவத்திற்கு நிரூபணமாகியுள்ளது.

மஞ்சளை விட மருத்துவம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். நக சுத்திற்கு எளிமையான ஒரு மருத்துவம் என்னவென்றால், நீரில் மஞ்சள் எண்ணெயை கரைத்து, நகத்தில் தடவினால் போதும்.

இதே போல் வேப்ப எண்ணெயை பாதிக்கப்பட்ட நகத்திலும், விரலை சுற்றிலும் தேய்த்து வர, நக சுத்தி விரைவில் குணமாகும்1421

Related posts

பெண்கள் மார்பக சுய பரிசோதனை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!

nathan

கர்ப்பப்பை கட்டி (fibroids), மற்றும் என்டோமேட்ரியோசிஸ், ஏன் எதனால் எப்படி வருகிற…

nathan

சித்தர்களின் ஹைக்கூ… சித்தரத்தை!

nathan

வாய் துர்நாற்றம் – (Bad Breath or bad Smell in Mouth)

nathan

குழந்தைகளுக்கு நீரிழிவுநோய் ஏற்படுத்தும் பாதிப்புகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்?

nathan

எளிதாக கட்டுபடுத்தக்கூடியதே நீரிழிவு நோய்!

nathan

உங்களுக்கு தெரியுமா பூண்டை காதில் வைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ?

nathan

இன்சுலினுக்கு மாற்றாக பி.சி.ஜி தடுப்பூசி! சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு காலமா?

nathan