உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருமா? தலைவலி ஒருவருக்கு வந்துவிட்டால், அது சரியாகும் வரை எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட முடியாது. அதிலும் ஒருவருக்கு காலையிலேயே தலைவலி வந்துவிட்டால், அன்றைய தினமே மோசமாக இருக்கும். தலைவலியில் ஒரு வகை தான் ஒற்றை தலைவலி. இது மிகவும் மோசமானது. இந்த வகை தலைவலியால் தலையின் ஒரு பக்கம் மட்டும் கடுமையான வலியை சந்திக்க வைக்கும். இந்த பிரச்சனையை சரிசெய்ய பலரும் வலி நிவாரணி மாத்திரைகள், தலைவலி மருந்துகளைப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் இவை தற்காலிக நிவாரணியைத் தான் வழங்குமே தவிர, முற்றிலும் போக்காது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணத்தை வழங்கும் ஓர் அற்புத இயற்கை வழியைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.
இயற்கை சிறந்த தீர்வு
நம் உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு இயற்கை வழிகளின் மூலம் நிச்சயம் சரிசெய்ய முடியும். முக்கியமாக ஒற்றைத் தலைவலிகளுக்கு கட்டாயம் நிவாரணம் கிடைக்கும். கீழே தலைவலி மற்றும் ஒற்றை தலைவலியைப் போக்கும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானத்தை தலைவலி பிரச்சனையின் போது பருகினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்: தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுவிக்க உதவும் இயற்கை பானம் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களாவன, * தண்ணீர் – 1 கப் * எலுமிச்சை – 1 * கல் உப்பு – 2 டேபிள் ஸ்பூன்
தயாரிக்கும் முறை: ஒரு பௌலில் எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின் அதில் நீரை சேர்த்து, அத்துடன் கல் உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த பானத்தை பருகுங்கள்.
இஞ்சி இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் ஒன்றாக கலந்து குடிக்கலாம் அல்லது இஞ்சி பவுடரை நீரில் கலந்து பேஸ்ட் செய்து நெற்றியில் தடவுவதன் மூலமும் நொடியில் தலைவலியில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
புதினா எண்ணெய் 3 துளிகள் புதினா எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, நெற்றியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்வதன் மூலம், தலைவலியில் இருந்து விரைவில் விடுபடலாம்.
பட்டை தலைவலியில் இருந்து பட்டையும் உடனடி நிவாரணம் அளிக்கும். அதற்கு பட்டை பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, நெற்றியில் தடவி 30 நிமிடம் உறங்குங்கள். பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் தலைவலி பறந்தோடிடும்.
கிராம்பு 2 துளி கிராம்பு எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அத்துடன் சிறிது கல் உப்பையும் சேர்த்து கலந்து, பின் அந்த கலவையால் நெற்றிப் பகுதியை மசாஜ் செய்யுங்கள். இதனால் தலைவலி விரைவில் போய்விடும்.