28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 25 1511615835
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு நம் உடலில் இருக்கும் அமிலங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் தெரியுமா!!

நாம் ஆரோக்கியத்திற்கு சத்துக்கள் மட்டுமல்ல சில வகை அமிலங்கள் மிகவும் அவசியமான ஒன்றாகும். நமக்கு என்னென்ன அமிலங்கள் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம். நாம் உண்ணும் அன்றாட உணவை காரம், அமிலம் எனும் இரு பிரிவில் பிரிக்கலாம். அது என்ன அமிலம், காரம்? அமிலம், காரம் இவை இரண்டும் உணவின் சுவையைக் குறிப்பவை அல்ல. மாறாக, அதன் தன்மையை குறிப்பவை.

நாம் உண்ணும் உணவில் அமில, காரத்தன்மைகள் சமநிலையில் இருக்கவேண்டியது அவசியம். ஆனால், இன்று மக்கள் அதிகமாக விரும்பும் துரித உணவில் அமிலத்தன்மைதான் அதிகம் இருக்கிறது. இதனால் இதயம், கல்லீரல், சிறுநீரகம் தொடர்பான பலவித நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. காரத்தன்மையுள்ள உணவுகள் நம் உடலில் இருக்கும் அதிகப்படியான அமிலத்தை நீக்கி, சமநிலையை உருவாக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுடன் போராடவும் உதவுகின்றன.

ஹைட்ரோக்ளோரிக் ஆசிட் : நம் வயிற்றில் இருக்கும் செல்கள் ஹைட்ரோக்ளோரிக் அமிலத்தை உருவாக்கிடும். இவை நாம் சாப்பிடும் உணவினை செரிக்க வைக்க பெரிதும் உதவுகிறது. இது மனித உடலில் இருக்கிற மிக முக்கியமான அமிலங்களில் ஒன்று. இது நாம் சாப்பிடும் உணவினை சிறிது சிறிதாக உடைத்து செரிமானம் எளிதாக நடைபெற உதவுகிறது.

வயிற்றில் என்ன செய்கிறது? : நாம் சாப்பிடும் உணவு இரைப்பைக்குச் சென்றதும் இரைப்பை யில் உள்ள ஹைட்ரோக்ளோரிக் அமிலமும், பெப்சின் எனும் நொதிநீரும், இன்ன பிற நொதிகளும் இணைந்து உணவைக் கூழாக்குகின்றன. அந்த இரைப்பைக் கூழுக்கு Chyme என்று பெயர். அந்தக்கூழ் சிறுகுடலுக்கு சென்று தேவையான சத்துகள் உறிஞ்சப்பட்டு கழிவுகள் பெருங்குடல் வழியே வெளியேறுகின்றன. அமிலம் உணவை கூழாக்குவதோடு, உணவில் உள்ள தீமை செய்யும் பாக்டீரியாக்களையும் அழித்து விடுவதால், ஃபுட் பாய்ஸன் ஏற்பட வாய்ப்பில்லை. இயற்கையாக நம் உடலின் இயக்கம் இதுதான்.

அசிடிட்டி : நமது உணவுக்குழல், குழாய் போன்றவை நேராக இல்லாமல் பல அடுக்குகளைக் கொண்டவை. இதனால் தலைகீழான நிலையில் கூட நம்மால் உணவை உட்கொள்ள முடியும். உணவு செரிமானமான பிறகு இரைப்பையில் இருக்கும் வெற்றிடத்தை காற்று நிரப்பிக் கொண்டிருக்கும்.நாம் உணவு உட்கொள்ளும்போது நீரும் உணவும் இரைப்பையை நிரப்பி விடுவதால் காற்று எதிர் வழியில் சென்று ஏப்பமாக வெளி வருகிறது. காற்று எதிர்வழியில் வருவது போல் நொதிநீரோ, அமிலத்தால் நொதித்த உணவோ எதிர்வழியில் எதுக்களிக்கும்போது உணவுக்குழாயில் எரிச்சல் ஏற்படுகிறது. இதுவே அசிடிட்டி.

லேக்டிக் அமிலம் : தீவிரமான உடற்பயிற்சி மற்றும் உடலுழைப்பு செய்யும் போது தசைகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் குறைந்திடும்.லாக்டிக் அமிலம் நாம் உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுத்திடும் மிட்டோசோண்டிரியாவை உருவாக்கிடும்.

லேக்டிக் உணவுகள் : பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான சீஸ், தயிர் ஆகியவற்றில் அதிகப்படியான லேக்டிக் அமிலம் நிறைந்திருக்கிறது. பாலில் அதிகப்படியான லேக்டிக் அமிலம் இருக்கிறது. அதே சமயம் ஊறுகாய் வகைகளிலும் லேக்டிக் அமிலம் இருக்கிறது. வொயிட் பிரட், பிஸ்கட் மற்றும் பேன் கேக் ஆகியவற்றிலும் லேக்டிக் அமிலம் நிறைந்திருக்கிறது.

Deoxyribonucleic acid : இதனை டி என் ஏ என்று அழைப்பார்கள். இதில் தான் ஜெனிடிக் கோட் இருக்கும். சில வகை ப்ரோட்டீன்கள் உருவாக்கவும் காரணமாக அமைந்திடும். இவற்றால் தான் வழி வழியாக வரக்கூடிய மரபணு குணாதிசயங்கள், குறைபாடுகள் ஆகியவை வருகின்றன. இந்த மரபணுக்கள் க்ரோமோசோம்களில் இடம்பெற்றிருக்கும்.

எதிலிருக்கிறது தெரியுமா? மீன்களில் இந்த வகை அமிலங்கள் நிறையவே இருக்கிறது. மீன்களில் அதிகப்படியான செல்கள் இருக்கிறது, ஒவ்வொன்றிலும் எக்கச்சக்கமான நியூக்லிக் அமிலம் இருக்கிறது அதை விட மீன்களின் மூலமாக நாம் ஆரோக்கியமான ப்ரோட்டீன் பெறலாம். அதே போல பழங்களிலும் இந்த அமிலம் அதிகமிருக்கிறது. அதோடு பழங்களில் இயற்கையாகவே இருக்கக்கூடிய குலுக்கோஸினால் நம் உடலில் இருக்கும் செல்கள் மற்றும் மூளைக்கு சக்தி கிடைத்திடும். காய்கறிகளில் பீன்ஸ் வைகளில் இந்த அமிலம் நிறைந்திருக்கிறது.

ribonucleic acid : ஆர் என் ஏ ப்ரோட்டின் உற்பத்தி செய்யவும் சில ஜெனிடிக் விஷயங்களையும் வழி வழியாக கடத்துகிறது. இது மனிதர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். கடல் உணவுகள், நட்ஸ், காய்கறிகள், காளான், மாட்டுக்கறி ஆகியவற்றில் இது அதிகமிருக்கிறது.

அமினோ ஆசிட் : செல்களின் வளர்ச்சிக்கு அமினோ அமிலம் உதவிடுகிறது. இதன் மூலமாக தயாரிக்கப்படும் ப்ரோட்டீன் நம் உடலில் நிகழ்கிற ரசாயன மாற்றங்களுக்கு மிகவும் உதவிடும். இது ஓர் மனிதன் உயிர் வாழ மிகவும் அவசியமாகும். கிட்டதட்ட 20 வகையான அமினோஅமிலங்கள் இருக்கின்றன.இவற்றில் பத்து வகைகளை நம் உடல் தானாகவே தயாரித்துக் கொள்ளும் மீதம்ருப்பவற்றை மட்டுமே நாம் உணவுகளின் வழியாக எடுத்துக் கொள்கிறோம். அசைவ உணவுகளில் அமினோ அமிலங்கள் நிறைய இருக்கிறது. அசைவ உணவு சாப்பிடாதவர்கள் தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்

அமினோ அமிலம் நிறைந்த உணவுகள் : நமக்குத் தேவையான அமினோ அமிலங்களைப் பெறுவதற்குப் பல வகைப் புரத உணவுகளைக் கலந்து சாப்பிட வேண்டும். பால், தயிர், நெய், வெண்ணெய், பாலாடை கட்டி போன்றவற்றில் புரதம் மிகுந்துள்ளது. இவற்றை அதிகமாகச் சாப்பிடலாம். முட்டை, மீன், இறைச்சி, நிலக்கடலை, சோயா, பருப்பு, முந்திரிப் பருப்பு, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், அவரை, துவரை, உளுந்து, மொச்சை, சுண்டல், முளைகட்டிய பயறுகள் போன்றவை புரதம் நிறைந்த உணவு வகைகள். அரிசி, கோதுமை, சோளம் போன்ற தானியங்களிலும் ஓரளவு புரதம் உள்ளது.

ஃபேட்டி ஆசிட் : மனித உடலுக்கு ப்ரோட்டீன் மற்றும் ஹார்மோன் உற்பத்தி செய்வதற்கு ஃபேட்டி அமிலம் மிகவும் தேவையானது. நம் உடலில் இருக்கும் செல்களில் மெல்லிய மெம்பரைன் இருக்கும் . இவை தான் செல்களுக்கு வெளியில் இருக்கும் பிற புரதங்கள் மற்றும் அமிலங்களிலிருந்து செல்களை பாதுகாக்கிறது. ஃபேட்டி ஆசிட் ப்ரோட்டின் மற்றும் ஹார்மோன் உற்பத்திக்கு உதவிடுகிறது. இவற்றில் முக்கியமானது ஃபேட்டி ஆசிட்டை சரியான உணவிலிருந்து நீங்கள் பெற வேண்டியது அவசியம். மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி சாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் கொலஸ்ட்ரால் அளவினை குறைக்க உதவிடும் அதே சமயம் டைப் 2 வகையிலான சர்க்கரை நோய் வராமல் தவிர்க்கச் செய்திடும். ட்ரான்ஸ் ஃபேட் மற்றும் சாச்சுரேட்டட் ஃபேட் நிறைந்த உணவுகளை தவிர்த்திடுங்கள். இது கெட்ட கொழுப்பினை அதிகரித்திடும்.

பயன்கள் : முதலில் இது ஒரு வலி நிவாரணியாகவும் செயல்படும். உடலில் தேவையான அளவு ஒமேகா 3 இருந்தால் உடல் வலிகள் குறையும். உடலில் எரிச்சல்,சிவப்பாவது,ரொம்ப சென்சிடிவ் ஆவது போன்ற பிரச்சினைகளெல்லாம் காணாமல் போய்விடும். ஆர்திரிடிஸ்,புரோஸ்டாடிடிஸ்,சிஸ்டிடிஸ் என ஏகப்பட்ட நோய்களுக்கு ஒமேகா 3 ரொம்ப ரொம்ப நல்லது.அந்த நோய்களுடைய தீவிரத்தைக் குறைத்து விடும். இதைத் தவிர இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும், ரத்தம் உறைதலை கட்டுப்படுத்தும்.

மீன்கள் : பொதுவாக ஒமேகா 3 மீன்களில் தான் அதிகமிருக்கிறது. Omega 3 சால்மன், நெத்தலி, கானாங்கெளுத்தி, மற்றும் மத்தி போன்ற குளிர் நீர் எண்ணெய் மீன்களே EPA மற்றும் DHA ஆகியவற்றின் மிகவும் பரவலாகக் கிடைக்கும் மூலங்களாகும். இந்த வகை மீன்களிலிருந்து பெறும் மீன் எண்ணெய்கள் n -3 மற்றும் n -6 ஆகியவற்றிலுள்ளது போல சுமார் ஏழு மடங்கு சக்தியைப் பெற்றுள்ளன.

ஒமேகா 3 உணவுகள் : இதைத் தவிர ஒமேகா 3 பாதாம், வால்நட் போன்றவற்றிலும் சோயா, பீன்ஸ்,சணல் விதைகள், பசலைக்கீரை,கோதுமை மற்றும் கடுகு கீரை ஆகியவற்றிலும் ஒமேகா 3 நிறைந்திருக்கிறது.
1 25 1511615835

Related posts

கண் கட்டி மற்றும் விஷத்தை விரட்டும் நெல்லிக்கனியின் அருமை உங்களில் எதனை பேருக்கு தெரியும்?

nathan

வீட்டு உபயோகத்துக்கு சோலார் சக்தியை பயன்படுத்த வழி உண்டா?

nathan

முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துகொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் குணமாகுமாம்!

nathan

சிக்கனமாக பணம் சேமிக்கும் வழிமுறைகள்

nathan

நண்பர்கள் முதல் நல்ல வேலை அமைவது வரை இது முக்கியம் ப்ரோ…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத மசாலா பொருட்கள்!!!

nathan

பெண்களின் முன்அழகை மேம்படுத்தும் தண்ணீர் விட்டான் கிழங்கு

nathan

மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்களுக்கு வரும் நோய்கள்

nathan

உங்களுக்கு மூலநோய் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்

nathan