29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
20 1511154255 4
மருத்துவ குறிப்பு

பெண்களை தாக்கும் ஆபத்தான சினைப்பைக் கட்டிகளை சரிப்படுத்தும் அற்புத வைத்தியம்

சமநிலையற்ற ஹார்மோன் சுரப்புகள் காரணமாக உடல் எடை அதிகரிக்கும். அதனால் உடல் பருமனான பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கொப்பளங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, 15 முதல் 40 வயது வரை உள்ள பெண்களுக்கு இப்பிரச்னை ஏற்படக்கூடும்.

பி.சி.ஓ.டி எனப்படும் சினப்பைக் கட்டிகள் ஒவ்வொரு 10 பெண்களுக்கு ஒருவரைத் தாக்குகிறது.

இந்த நோய்க்கான அறிகுறி உங்கள் வாழ்க்கையை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் உடலில் அக்கறை எடுத்து மருத்துவர் சிபாரிசு செய்யும் சிகிச்சைகளைப் பின்பற்றினால், இது மிகவும் சிறிய பிரச்சினை ஆகிவிடும். அதனை ஆரம்பத்திலேயே கவனிக்கத் தவறினால் பின்னல குழந்தையின்மைக்கு வழி வகுக்கும்.

பிசிஓடியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, அதாவது உடல் பருமனானவர்களுக்கு வரக்கூடியது. 60 சதவீத பெண்களுக்கு உடல் பருமனால் வரும் பிசிஓடி இருப்பது தெரியவந்துள்ளது. மற்றொன்று, ஒல்லியானவர்களுக்கு வரக்கூடியது. 25 சதவீத பெண்களுக்கு இந்த பிரச்னை உள்ளது. ஆக இது ஒல்லியாக இருப்பவர்களயும் தாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆகவேஆரம்பத்திலேயே ஒரு மருத்துவர நாடி அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம். அத்துடன் வீட்டிலேயே நீங்கள் சிகிச்சை முறையை பின்பற்றலாம். இதனால் பக்க விளைவுகள் இல்லை. ஆகவே அதன் அறிகுறிகளையும் வராமல் தடுக்கவும், வந்த பின் குணப்படுத்தவும் வீட்டிலேயே எப்படி குணப்படுத்தலாம் என பார்க்கலாம்.

பிசிஓடியின் அறிகுறிகள் : முகத்தில் முடி வளரும்: பெண்மைக்குரிய ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைந்து, ஆண் தன்மைக்கு காரணமான ஆன்ட்ரோஜன் சுரப்பு கொஞ்சம் அதிகரிக்கும். இதனால்தான் பிசிஓடி பிரச்னை உள்ள பெண்களின் முகத்தில் அதிகளவில் பருக்கள், முகத்தில் மெல்லிய ரோமங்கள் முளைத்தல் போன்ற பிரச்னைகள் உருவாகின்றன.

கழுத்தில் பட்டை உடல் பருமன், கழுத்தில் கருமையான பட்டை போன்றவை உண்டாகும். இதிலிருந்து ஒரு பெண்ணிற்கு இந்த பிசிஓடி உள்ளதா என கண்டுபிடித்துவிடலாம். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், பாதுகாப்பு கவசம்போல் செயல்படுகிறது.

இந்த நோயினால் வரும் பாதிப்புகள் : இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்து, ஆன்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால் அவர்களின் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்கிறது. இதனால் உடல் பருமன், மாத்வ்டாய் சிக்கல்கள், பஅகையவை உண்டாகும். பிற்காலத்தில் குழந்தையின்மைக்கு மிக மிக முக்கிய, முதன்மைக் காரணம் இந்த பிசிஓடிதான். இந்த நோயினால் அவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் கூட உள்ளன. ஆகவே அதனை உடனடியாக குணப்படுத்த வேண்டியது முக்கியம்.

வந்தபின் குணப்படுத்த செய்ய வேண்டிய பத்திய முறைகள் : மருத்துவர் தரும் சிகிச்சை சிலருக்கு பலன் தராது. அதற்கு முக்கிய காரணம் வாழ்க்கிய முறையும், டயட்டும்தன காரணம். நீங்கள் சாப்பிடும் உணவுகளைக் கொண்டே நீங்கள் இந்த நோயை குணப்படுத்தலாம். எப்படி என பார்க்கலாம்.

ஆளிவிதை : தேவையானவை : ஆளிவிதை – 1 டேபிள் ஸ்பூன் நீர் – 1கப்

எப்படி பயன்படுத்துவது? ஆளிவிதையை ஒரு கப் நீரில் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை வடிக்கட்டி குடிக்க வேண்டும். ஊறிய ஆளி விதையை நீங்கள் சாலட் அல்லது சுண்டால் போல் செய்து சாப்பிடலாம். தினமும் செய்தால் நல்ல மாற்றங்கள் பார்ப்பீர்கள்.

வெந்தய விதைகள் : தேவையானவை : வெந்தயம் – 1 ஸ்பூன் நீர் – 1 கப் தேன்- 1 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது? முதல் நாள் இரவில் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து மறு நாள் அதனுடன் தேன் கலந்து வெந்தயத்துடன் அப்படியே சாப்பிட வேண்டும். நீர் குடித்து , வெந்தயத்தை மென்று சாப்பிட்டு விடுங்கள்.

பட்டை : தேவையானவை : பட்டைப் பொடி – 1 ஸ்பூன் நீர் – 1 கப்

எப்படி பயன்படுத்துவது? நீரை நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் சிறிது பட்டைப் பொடியை கலந்து ஆற விடுங்கள். வெதுவெதுப்பாக ஆனவுடன் அந்த நீரை குடிக்க வேண்டும். இந்த வைத்தியம், சீரற்ற மாதவிலக்கை சரிப்படுத்துகிறது.

அதிமதுரம் : தேவையானவை : அதிமதுரம்- 1 ஸ்பூன் நீர்- 1 கப்

எப்படி பயன்படுத்துவது? அதிமதுரத்தை நீரில் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். பின்னர் வடிகட்டி அந்த நீரை குடிக்க வேண்டும். அல்லது அதிமதுரப் பொடி கடைகளில் கிடைத்தால் அதனை 1 ஸ்பூன் பயன்படுத்தி சுடு நீரில் கலந்து வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும்.

புதினா தேவையானவை : புதினா இலைகள் – 1 ஸ்பூன் நீர் – 250 மி.லி

எப்படி பயன்படுத்துவது? புதினா இலைகளை நீரில் கலந்து 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீர வடிகட்டி குடிக்க வேண்டும். தினமும் 2, 3 தடவை இப்படி குடிப்பது அவசியம். மேலே சொன்ன எல்லா குறிப்புகளையுமே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். (ஏதாவது ஒன்றை). இதனால் உடலிலுள்ள ஹார்மோன் சம நிலை பெற்று மாதவிடாய் பாதிப்புகளை குணப்படுத்தலாம். முயன்று பாருங்கள்.

வீட்டில் பின்பற்ற வேண்டிய உணவுப் பத்தியம் : கார்போஹைட்ரேட் கருப்பைக் கட்டிகள் வராமல் தடுப்பதற்கு மிக முக்கியமாக செய்ய வேண்டியது, குறைவான அளவு கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளையே சாப்பிட வேண்டும். ஏனெனில் கார்போஹைட்ரேட் உணவுகள் செரிமானம் ஆகின்றபோது, அதிலுள்ள மாவுப்பொருட்கள் வயிற்றில் ஒட்டிக் கொள்கின்றன. அதனால், அவற்றை தினசரி உணவில், மிகக் குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிக அளவு புரதம் தினசரி மூன்று வேளையும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக, புரோட்டீன் நிறைந்த உணவுகளான முட்டை, வறுக்கப்பட்ட பயறுகள், கொட்டைகள் போன்றவற்றை உணவுக்கு இடைபட்ட நேரங்களில் எடுத்துக்கொண்டால் அதன் மூலம், தேவையில்லாமல் எண்ணெய் நிறைந்த நொறுக்குத் தீனிகளை தவிர்க்க முடியும். மேலும் புரதச்சத்து அதிகமுள்ள உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அதனால் கொழுப்பில்லாத இறைச்சி, மீன், பீன்ஸ், பருப்பு வகைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

உடற்பயிற்சி செய்யுங்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் இன்சுலின் சுரப்பது சீராக்கப்படுகிறது. நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு உங்களுக்குப் போதுமான நேரம் கிடைக்கவில்லை என்றால், நாள் முழுவதும் அதிக சுறுசுறுப்புடன் இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

நார்ச்சத்துள்ள உணவுகள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினசரி உணவில் அதிகப்படுத்த வேண்டும். உணவில் அதிகம் காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் இருத்தல் அவசியம். குறிப்பாக, பீன்ஸ் நிறைய எடுத்துக் கொள்ளலாம். முழுக்க முழுக்க நார்ச்சத்துக்கள் நிரம்பியது பீன்ஸ். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 25 முதல் 30 கிராம் வரை நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டியது அவசியம்.

வைட்டமின் டி ரத்தத்தில் போதுமான அளவு வைட்டமின் டி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறைந்தது வாரத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை 10 – 15 நிமிடங்கள் வரையிலும் சூரிய ஒளியில் நில்லுங்கள். சூரிய ஒளி உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி -யை வழங்குகிறது

உணவு மாற்றங்கள் : எல்லாவற்றிலும் மிக முக்கியமானது சிறு வயதில் பெண்குழந்தைகளுக்கு கொழுப்பு மிக்க உணவுகள், துரித உணவுகள், கண்ட நொறுக்குத் தீனிகள், அடிக்கடி கார்பனேட்டட் உணவுகள் போன்றவற்றை பழக்கப்படுத்தாதீர்கள். ஏனெனால் இவையெல்லாம்தான் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை தௌட்மாறச் செய்கின்றன. நல்ல ஆரோக்கியமான உணவை சாப்பிடும் பெண் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
20 1511154255 4

Related posts

மாஸ்க் அணியும் செய்யக்கூடிய தவறுகள் என்ன ? இந்த தவறையெல்லாம் செய்யாதீங்க

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சில அற்புத உணவுகள்!

nathan

மாரடைப்பு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் கண்டிப்பாக கூடவே வைத்திருக்க வேண்டியவை!

nathan

பெண்களே! உங்க அந்தரங்க பகுதியை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்

nathan

குடும்பம் என்றால் பிரச்சினைகள் வருவது சகஜம்தான்

nathan

வயதானலும் உங்களுக்கு கண்கள் தெளிவா தெரியனும்னா, இப்போவே இதை முயன்று பாருங்கள்!

nathan

திருநீற்றுப்பச்சை மருத்துவ பயன்கள்

nathan

சளியை கரைத்து மலத்தில் அடித்து விரட்டும் மூலிகை கஷாயம்! சூப்பரா பலன் தரும்!!

nathan

வெளியுலகம் அறியாமலேயே நடந்தப்படும் குழந்தை திருமணங்கள்

nathan