28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
05 1512477025 1 oliveoilsd
தலைமுடி சிகிச்சை

உங்க தலைமுடி பலவீனமா இருக்கா? அப்ப இத முயன்று பாருங்கள்…

தலைமுடி பலவீனமாக இருந்தால், முடி கொட்டுதல், முடி வெடிப்பு மற்றும் தலைமுடி பொலிவிழந்தும் காணப்படும். அதோடு முடியின் அடர்த்தி குறைந்து, மெலிந்து எலி வால் போன்றும் காட்சியளிக்கும். இம்மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கும் போது, உடனே தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் பொருட்களால் போதிய பராமரிப்புக்களை அவ்வப்போது கொடுக்க வேண்டும்.

ஆரம்பத்திலேயே பலவீனமான தலைமுடிக்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், தலைமுடி மோசமாவதைத் தடுக்கலாம். அதற்காக கடைகளில் விற்கப்படும் விலை அதிகமான பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுக்க சொல்லவில்லை. நம் வீட்டில் உள்ள சில இயற்கைப் பொருட்களைக் கொண்டே பராமரிப்பு கொடுக்கலாம்.

இதனால் தலைமுடியின் வலிமை அதிகரிப்பதோடு, முடி ஆரோக்கியமாகவும், பொலிவோடும் இருக்கும். சரி, இப்போது பலவீனமான தலைமுடியை வலிமைப்படுத்த உதவும் இயற்கை பொருட்கள் என்னவென்றும், அவற்றை எப்படி உபயோகிப்பது என்றும் காண்போம்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் அடங்கியுள்ளது. ஆகவே இரவில் படுக்கும் முன் ஆலிவ் ஆயிலை ஸ்கால்ப்பில் படும்படி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், மயிர்கால்கள் ஊட்டம் பெற்று வலிமையடையும்.

அவகேடோ
அவகேடோ பழத்தில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் புரோட்டீன்கள், தலைமுடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து வலிமையடையச் செய்யும். ஆகவே அவகேடோ பழத்தை மசித்து தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள சிறந்த பலன் கிடைக்கும்.

வைட்டமின் ஈ எண்ணெய்
வைட்டமின் ஈ ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட். இது பலவீனமான மயிர்கால்களை வலிமையடையச் செய்வதோடு, முடி உடைவதையும் தடுக்கும். எனவே வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை தனியாக எடுத்து, அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 1 மணிநேரம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலச வேண்டும். ஒரு வாரத்தில் 2-3 முறை இந்த செயலை செய்து வந்தால், மயிர்கால்கள் வலிமைப் பெறும்.

தேன்
தேனில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், ஸ்கால்ப்பில் உள்ள கிருமிகளை நீக்கி, மயிர்கால்களுக்கு ஊட்டமளிக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து மயிர் கால்களில் படும்படி தடவி 30-35 நிமிடம் கழித்து, நீரில் அலச வேண்டும். இந்த முறையை மாதத்திற்கு 2 முறை மேற்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

வாழைப்பழம் வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், மயிர்கால்களை பலப்படுத்தும் மற்றும் தலைமுடி உடைவதைத் தடுக்கும். அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, தலை முழுவதும் தடவி 1 மணிநேரம் கழித்து, ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இந்த முறையை வாரம் ஒருமுறை மேற்கொள்ள வேண்டும்.

தேங்காய் க்ரீம் தேங்காய் க்ரீம்மை முடியின் வேர் முதல் முனை வரை தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இந்த முறையை மாதத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், தலைமுடி வலிமையடைந்திருப்பதை நன்கு காணலாம்.

பாதாம் எண்ணெய் பாதாம் எண்ணெயில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் மற்றும் இதர ஊட்டமளிக்கும் உட்பொருட்கள், மயிர்கால்களின் வலிமையை அதிகரிக்கும். எனவே இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

முட்டை மஞ்சள் கரு புரோட்டீன் அதிகம் நிறைந்த முட்டையின் மஞ்சள் கரு, தலைமுடியின் ஆரோக்கியத்தில் மாயம் செய்து, அழகான தலைமுடியைப் பெற உதவும். அதற்கு 1 முட்டையின் மஞ்சள் கருவுடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, மயிர்கால்களில் படும்படி தடவி, 20 நிமிடம் ஊற வைத்து பின் ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.
05 1512477025 1 oliveoilsd

Related posts

உங்க இளநரையை போக்கும் ஹென்னா ஆயில் !

nathan

தலைமுடி உதிர்வு காரணங்கள்… தீர்வுகள்?

nathan

முடி உதிர்வை தடுக்கும் குறிப்புகள்…!

nathan

உறுதியான தலைமுடிக்கு… 5 வழிகள்

nathan

அடர்த்தியான கூந்தல் வேண்டுமா?

nathan

ஒரே வாரத்தில் பொடுகைப் போக்கும் அற்புதப் பொருள் பற்றி தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உங்களுக்கு முடி நீளமா வளரனும்மா? அப்ப இந்த இந்திய ரகசியங்கள ஃபாலோ பண்ணுங்க…!

nathan

சூப்பரா கூந்தல் வளரணுமா? அப்போ இதெல்லாம் பண்ணுங்க

nathan

பொடுகு தொல்லையை போக்கும் வழிமுறைகள்…!

nathan