28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
08 1510141504 1
மருத்துவ குறிப்பு

கவணம் விதைப்பை புற்று நோயின் ஆரம்ப கால அறிகுறி இப்படியும் தெரியலாம்!

லிம்ப் கிளாண்ட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? லிம்ப் கிளாண்ட் என்பது ஒரு சுரப்பி அது நம் உடல் முழுவதும் இருக்கும். நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியாக இது செயல்படுகிறது. சிறிய பட்டாணி அளவிலே இது இருக்கும். லிம்ப் ஃப்ளூயிட் என்கிற திரவத்தை இது கொண்டு செல்வதற்கு பயன்படுகிறது. அதோடு உடலில் இருக்கும் நச்சுக்கள், நியூட்டிரிசியன்கள், ஆகியவற்றை உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் சென்றடைய உதவுகிறது.

இந்த கிளாண்ட் பாக்டீரியா , வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும். சில நேரங்களில் இந்த சுரப்பி கூட்டாகவும் சேர்ந்து கட்டியாக மாறி தொந்தரவை ஏற்படுத்தும். தலை, கழுத்து,வாய் போன்ற பகுதிகளிலும் மார்பகம், நுரையிரல்,வயிறு போன்ற இடங்களிலும் இந்த சுரப்பி பாதிப்படைய வாய்ப்புகளுண்டு. வலி,காய்ச்சல்,தொண்டை வறட்சி போன்றவை இவற்றின் ஆரம்ப கட்ட அறிகுறிகளாகும். அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் தொண்டைப்புற்றுநோய், சருமப் புற்றுநோய் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் விதைப்பை புற்றுநோய்க்கு காரணியாக அமைந்திடும். இதனை வராமல் தவிர்க்கவும் புற்றுநோய் அளவிற்கு நோய் தீவிரமடையாமல் இருக்கவும் நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிய வீட்டு மருத்துவம்

வகைகள் : நம் உடலில் இருக்கும் லிம்ப் நோட்ஸ் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றினால் இன்ஃபெக்‌ஷனாகி வீங்கும். அதனை lymphadenitis என்று அழைப்பார்கள். இது இரண்டு வகைப்படும் ஒன்று ஜென்ரல் இன்னொன்று லோக்கலைஸ்ட் ஜென்ரலசைடு என்றால் இரண்டு சுரப்பியோ அல்லது பல சுரப்பிகள் கூட்டாக பாக்டீரியாவினால் பாதிக்கப்படுவது. இதே லோகலைஸ்டு என்றால் ஏதேனும் ஒரு உறுப்பு பாதிக்கப்படும் போது அருகில் இருக்கும் லிம்ப் நோட்ஸும் சேர்ந்து பாதிப்படைவது உதாரணமாக உங்களுக்கு டான்சில் பிரச்சனையிருந்தால் கழுத்துப் பகுதி வீங்குவதை கவனித்திருக்கலாம். 75 சதவீதம் லிம்ப் நோட்ஸ் இப்படித் தான் பாதிக்கப்படுகிறது.

காரணிகள் : காய்ச்சல், தொண்டை வலி போன்றவை ஏற்பட்டால் லேசாக இந்த சுரப்பியும் பாதிப்படையும். அதன் போது தாடைப்பகுதி, காதுக்கு பின்புறம், தொண்டையில் இருக்கும் லிம்ப் நோட்ஸ் பாதிப்படையும். கைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அக்குள் பகுதியில் இருக்கக்கூடிய லிம்ப் நோட்ஸ் பாதிக்கப்படும். வைரஸ் தொற்று, கால் பாதங்களில் ஏற்படும் தொற்று, போன்றவற்றால் பெண்களின் பிறப்புறுப்பிலும் ஆண்களுக்கு விதைப்பையிலும் இருக்ககூடிய லிம்ப் நோட்ஸ் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. உள்ளுருப்புகளில் ஏதேனும் கட்டி ஏற்பட்டிருந்தாலும் இந்த சுரப்பி பாதிப்படைய வாய்ப்புகளுண்டு .

அறிகுறிகள் : லேசான வலி, சருமம் தடித்திருப்பது போன்ற உணர்வு ஆகியை ஏற்படும். மூக்கு ஒழுகுதல், காய்ச்சல்,தொண்டடை வறண்டு போவது, இரவு நேரங்களில் அதிகமாக வியர்ப்பது ஆகியவை ஏற்படும். சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் கூட ஏற்படும். இவர்களுக்கு நுரையிரல் அருகில் இருக்கும் லிம்ப் நோட்ஸ் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

டீ பேக் : இதனை சரி செய்ய டீ பேக் பயன்படுத்தலாம். வலியையும் வீக்கத்தையும் குறைக்க டீ பேக் பெரிதும் உதவிடும். இரண்டு அல்லது மூன்று டீ பேக்குகளை சுடு தண்ணீரில் போடுங்கள். இரண்டு நிமிடங்கள் கழித்து அதனை வலியிருக்கும் இடத்தில் வைத்து லேசாக ஒத்தடம் கொடுங்கள். சுமார் பதினைந்து நிமிடம் வரை இப்படி கொடுக்க வேண்டும். இதனை தினமும் செய்யலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சிகப்பு மிளகாய் : சிகப்பு மிளகாய் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டது. இதனைக் கொண்டு டீ தயாரித்து ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். ஒரு கப் சூடான நீரில் அரை டீஸ்ப்பூன் சிகப்பு மிளகாய் தூளை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அது சூடு ஆறியதும் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகலாம்.

மஞ்சள் : மிகச் சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இது. இதிலிருக்கும் குர்குமின் என்ற மினரல் பாக்டீரியாவை அழித்திடுவதால் சுரப்பியின் வீக்கத்தை குறைத்திடும். பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாம்.

வாயை கொப்பளித்தல் : வாய் கொப்பளிப்பது கூட இதற்கு மிகச்சிறந்த தீர்வாக அமைந்திடும். வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து வாயை கொப்பளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இப்படிச் செய்யலாம்.

விளக்கெண்ணெய் : வீங்கிய லிம்ப் சுரப்பிகளுக்கு விளக்கெண்ணெய் மிகச்சிறந்த தீர்வாக அமைந்திடும். விளக்கெண்ணெயை இரண்டு ஸ்பூன் அளவு தனியாக எடுத்து சூடாக்குங்கள். பின்னர் அதனை வலியிருக்கும் இடத்தில் தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். பின்ன ஹாட் பேக்கினால் ஒத்தடம் கொடுக்கலாம்.

வெந்தயம் : வெந்தயத்தில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள். நம் சருமத்தையும், உடலையும் பராமரிக்க உதவுகிறது. ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அது ஆறியதும் அப்படி குடித்திடுங்கள் வேண்டுமானால் அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கலாம்.

இஞ்சி : இஞ்சி வலியையும் வீக்கத்தையும் குறைக்கும் கழுத்து மற்றும் தொண்டைப் பகுதியில் ஏற்படும் லிம்ப் நோட்ஸுக்கு இஞ்சி மிகச் சிறந்த தீர்வாக அமைந்திடும். ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் துருவிய இஞ்சியை சேர்த்து கொதிக்க வைத்திடுங்கள்.பின்னர் அதனை வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பருகலாம். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் வரை குடிக்க வேண்டும். இதே போல இஞ்சிக்கு பதிலாக இலவங்கப்பட்டையையும் சேர்த்து டீ தயாரித்து குடிக்கலாம்.

துளசி : துளசி மிகுதியான மருத்து குணங்களைக்கொண்டது. அதில் இருக்கும் ஆண்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆண்ட்டி வைரல் துகள்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். துளசி ஊற வைத்த தண்ணீரை குடிக்கலாம். அப்படியில்லை எனில் துளசி சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை பருகலாம்.

மிளகு : வீங்கிய லிம்ப் நோட்ஸினை சரி செய்ய மிளகு முக்கியப் பங்காற்றுகிறது. ஐந்தாறு கருப்பு மிளகை எடுத்து நன்றாக நசுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதில் அரை ஸ்பூன் தேன் கலந்து அப்படியே சாப்பிட்டு விட வேண்டும்.

டீ ட்ரீ ஆயில் : டீ ட்ரீ ஆயிலில் ஏகப்பட்ட ஆண்ட்டி பாக்டீரியா மற்றும் ஆண்ட்டிஸ்பாஸ்மோடிக், ஆண்ட்டிசெப்டிக் மற்றும் ஆண்ட்டி மைக்ரோபியல் துகள்கள் நிறைந்திருக்கிறது. இது லிம்ப் நோட்ஸில் ஏற்பட்டிருக்கும் பாக்டீரியா தொற்றினை அழிக்க வல்லது. சூடான தண்ணீரில் சில சொட்டுக்கள் டீ ட்ரீ ஆயிலை சேர்த்திடுங்கள். பின்னர் அந்த தண்ணீரில் ஆவி பிடிக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இப்படிச் செய்யலாம்.

தண்ணீர் : தண்ணீர் கூட அருமருந்தாகத்தான் செயல்படுகிறது. நம் உடலில் உருவாகும் நச்சுக்களை வெளியேற்ற நம் உடலில் போதுமான அளவு தண்ணீர் சத்து தேவை. அது நம் உடலில் உள்ள செல்களை துரிதப்படுத்துவது, ரத்த ஓட்டத்தை அதிகரிப்பது, போன்ற வேலைகளை கச்சிதமாக செய்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

முட்டைகோஸ் : முட்டைகோஸில் ஏராளமான நியூட்ரிசியன்கள், விட்டமின்ஸ், ஃபைபர் மற்றும் மினரல்ஸ் நிரம்பியிருக்கிறது. இது வீக்கத்தையும், வலியையும் விரைவில் குறைத்திடும். முட்டைகோஸ் இலையை ஒரு துணியில் கட்டி அதனை பாதிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து எடுத்து விடலாம். இப்படிச் செய்வதனால் உடனடி பலன் கிடைத்திடும்.

வேப்பிலை : ஆண்ட்டி பாக்டீரியா நிறைந்த வேப்பிலை, நம் உடலில் ஏற்பட்டிருக்கும் பாக்டீரியா தொற்றினை அழித்திடும். பாதிக்கப்பட்ட இடத்தில் வேப்பெண்ணையை தடவி மசாஜ் செய்திடலாம். வேப்பிலை பத்துப் போட்டு அரை மணி நேரம் கழித்து சூடான நீரினால் கழுவிட வேண்டும்.

தேன் : தேனும் இதற்கு பெரிதும் உதவிடும். ஒரு நாளைக்கு இரண்டு ஸ்பூன் குடித்து வந்தாலே போதுமானது. இதனால் தொண்டை வறட்சி ஆகியவை குறையும்.

பூண்டு : பூண்டில் ஆண்ட்டி வைரல், ஆண்ட்டி பாக்டீரியல், ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி மற்றும் ஆண்ட்டி மைக்ரோபியல் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. லிம்ப் நோட்ஸ் பாதிக்கப்பட்டிருக்கும் போது பூண்டு எடுத்துக் கொண்டால் அது உடனடி பலனைக் கொடுத்திடும். பூண்டினை பொடியாக நறுக்கி சுடு தண்ணீரில் போட்டு சாப்பிடலாம். அப்படியில்லையெனில் பூண்டை தேனில் இரண்டு மணி நேரம் ஊற வைத்து சாப்பிடலாம்.

கற்றாழை : கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சருமத்தை பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது. கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவிடுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை இப்படிச் செய்வதால் நல்ல பலன் கிடைத்திடும்.

புதினா : புதினாவில் இருக்கும் மென்தால் குளிர்சியை உண்டாக்க கூடியது. ஒரு கப் தண்ணீரை சூடாக்குங்கள். லேசாக சூடானதும் அதில் நான்கைந்து புதினா இலைகளை சேர்த்திட வேண்டும். இரண்டு நிமிடம் கொதித்ததும் இறக்கி விடலாம். சூடு குறைந்ததும் அப்படியே குடித்திடலாம். அப்படியில்லையென்றால் புதினா இலையை சாறாக்கி தினமும் ஒரு கிளாஸ் குடிக்க வேண்டும். சந்தையில் கிடைக்க கூடிய பெப்பர்மிண்ட் ஆயிலை தடவி மசாஜ் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

ஸ்பிருலினா : இதில் பி விட்டமின்ஸ், காப்பர், மினரல்ஸ், ப்ரோட்டீன், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நியூட்டிரிசியன்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன் தரக்கூடியது. இதில் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றினை அழித்திடும்.

பேக்கிங் சோடா : பேக்கிங் சோடாவுடன் அரை ஸ்பூன் கடல் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு கப் சூடான தண்ணீரில் நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அந்த தண்ணீரை அப்படியே குடித்திடுங்கள்.

உடற்பயிற்சி : இது கேட்க கொஞ்சம் விசித்திரமாக இருக்கலாம். ஆனால் இது மிகச்சிறந்த பலனை கொடுக்கும். உடற்பயிற்சி செய்வதனால் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதை வழக்கமாக வைத்திடுங்கள் .

வெங்காயம் : வெங்காயத்தில் அதிகப்படியான சல்ஃபர் மற்றும் ஃப்ளேவனாய்ட் இருக்கிறது, அதிகப்படியான நியூட்ரிசியன்கள் நிறைந்த வெங்காயத்தில் பயோட்டின், மக்னீசியம், காப்பர்,விட்டமின் பி 6, விட்டமின் சி,ஃபைபர், பாஸ்பரஸ், பொட்டாசியம், விட்டமின் பி 1 மற்றும் ஃபோலேட்ஸ் ஆகியவை நிறைந்திருக்கிறது. வெங்காயத்தை அரைத்து சாறெடுத்து அப்படியே குடித்திடுங்கள்.

கரித்தூள் : ஒரு ஸ்பூன் கரித்தூளுடன் ஆழி விதை தூளை சேர்த்து நன்றாக பேஸ்ட்டாகிக் கொள்ளுங்கள். இந்த கலவையை அக்குள் பகுதியில் தடவி பத்து நிமிடங்களில் கழுவி விடலாம். இதனை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

விட்டமின் இ : சரும ஆரோக்கியத்திற்கு விட்டமின் இ மிகவும் அவசியமாகும். உடலில் விட்டமின் இ பற்றாகுறை ஏற்பட்டால் சருமம் வறட்சியாவது, அலர்ஜி ஏற்படுவது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். விட்டமின் இ லோஷன் வாங்கி அதனை சருமத்தில் பயன்படுத்தலாம்.அதே போல விட்டமின் இ நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தர்பூசணி : தர்பூசணியில் அதிகப்படியான லைகோபென் இருக்கிறது. இதனை கரோடினாய்ட் ஃபைட்டோநியூட்ரியண்டாக செயல்படுகிறது. உடல் எடையை குறைக்கவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் தர்பூசணியை பயன்படுகிறது. இதில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட், விட்டமின் சி மற்றும் ஃப்ளேவனாய்ட் நிறைந்திருக்கிறது. இது நம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது லிம்ப் நோட்ஸுக்கு பெரிதும் உதவிடும்.

தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெயில் ஆண்ட்டி பாக்டீயல் ப்ராபர்டீஸ் நிறைந்திருக்கிறது. இதனை சூடாக்கி மசாஜ் செய்து வந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இப்படிச் செய்து வந்தால் வலியை குறைத்திடும். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் வீக்கமும் குறைந்திடும்.

ஆப்பிள் சிடர் வினிகர் : வினிகரில் இருக்கும் ஆல்கலைன் துகள்கள் நம் உடலில் பிஎச் அளவினை பராமரிக்க உதவுகிறது. ஒரு கப் தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகருடன் அதேயளவு தண்ணீரைக் கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனைக்கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட இதனைச் செய்யலாம். அப்படியில்லையென்னில் ஒரு கப் சூடான தண்ணீரில் ஒரு ஸ்பூன் வினிகர் மற்றும் அரை ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.

தேனுடன் எலுமிச்சை சாறு : உடல் எடை குறைக்க, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடான தண்ணீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் தேன் சிறிதளவு கலந்து குடிக்க வேண்டும். இதனை தினமும் குடித்து வந்தால் அது நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிடும். அதோடு இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திடும்.

08 1510141504 1

Related posts

ஆஸ்துமா பிரச்னையுள்ள கர்ப்பிணிகள் இன்ஹேலர் உபயோகிப்பது பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

ஏன் அக்கால ஆண்களுக்கு வயாகராவின் அவசியமே இருந்ததில்லை என்பதற்கான காரணங்கள்!

nathan

புது தாய்மார்கள், தங்களின் வயிற்று சதையை வேடிக்கையான முறையில் குறைப்பது எப்படி?தெரிந்துகொள்வோமா?

nathan

உறவுகளை சங்கடப்படுத்தும் இந்த பழக்கங்கள் உங்ககிட்ட இருந்தா மாத்திக்கங்க!

nathan

சூப்பர் டிப்ஸ் நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்…?

nathan

கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து: விஞ்ஞானிகள் தகவல்

nathan

இன்சுலினுக்கு மாற்றாக பி.சி.ஜி தடுப்பூசி! சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு காலமா?

nathan

மஞ்சள் காமாலை வருவதற்கு மிக முக்கிய காரணம் தண்ணீர்

nathan

தெரிஞ்சிக்கங்க… உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பது எப்படி?

nathan