பெண்களை விட ஆண்களுக்கு தான் இந்த எண்ணெய் பசை சருமம் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த எண்ணெய் பசை சருமத்துடன் ஆண்கள் வியர்வை வழிந்தோட வெளியில் சுற்றும் போது, அங்குள்ள மாசுக்கள், புகை, தூசிக்கள் போன்றவை உங்களது முகத்தில் பட்டு அவை முகப்பருக்களாக உருமாறுகின்றன..
இந்த பிரச்சனையானது முகப்பருக்களுடன் முடிவதாக இல்லை.. முகப்பருக்கள் தழும்புகள் ஆகின்றன. மேலும் இந்த முகப்பருக்கள் உங்களது முகத்தில் குழிகளாகும் மாறி உங்களது அழகுகான முகத்தை சீரழிப்பதாக உள்ளது. அழகுக்குறிப்புகள் என்றால் அது பெண்களுக்கானது மட்டுமல்ல.. ஆண்களும் தங்களது அழகை பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது.
இன்று ஆண்களும் பெண்களுக்கு நிகராக தங்களது முகத்தை அழகுப்படுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர். இந்த பகுதியில் ஆண்கள் தங்களது முகத்தை எப்படி அழகுப்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
சோப்பு வேண்டாம் எண்ணெய் பசை சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால் எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும். சருமத்திற்கு எப்போதும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தும் போது, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
மோர் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும். சோளமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய் பசை நீங்கும்.
வினிகர் வெள்ளை வினிகரை நீரில் சரிசமமாக கலந்து, காட்டனில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும். அல்லது எலுமிச்சை சாறு தடவி சிறிது நேரம் காயவைத்து கழுவினால் முகம் பளிச்சிடும்.
புதினா சிறிது புதினா இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து, பின் அதனை காட்டன் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்கலாம். இதுவும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.
கற்றாழை கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ, முகம் பளிச்சென்று இருக்கும்.
வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயை துருவி, அதில் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி, அழுக்குகளும் முழுவதுமாக நீக்கப்படும்.
ஐஸ் கட்டிகள் ஐஸ் நீர் அல்லது ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து வர, முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்படுவதோடு சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, எண்ணெய் பசை வெளிவருவதைத் தடுக்கலாம்.
தக்காளி தக்காளி சாறு மற்றும் தேனை சரிசமமாக எடுத்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ, முகம் எண்ணெய் பசையின்றி பளிச்சென்று இருக்கும்.
எலுமிச்சை சாறு எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.
புரோட்டின் குறைவான உணவுகள் வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது மிக நல்லது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத்தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது. எனவே உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் இயற்கை முறைகளை பின்பற்றுங்கள்.
பால் மற்றும் முட்டை பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், கேரட் துருவலை கலந்து கத்தில் தடவினால் அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.
வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைகிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வந்தால் எண்ணெய் வழிவது குறையும்.
தயிர் சோளமாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து கத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய்ப்பசை நீங்கும்.
எலுமிச்சை சாறு எண்ணெய்ப் பசை சருமத்தினர் வெயிலில் சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்
திராட்சை எலுமிச்சைச் சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சைச் சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.
பப்பாளி பப்பாளிச் கூழ், முல்தானி மட்டி, வேப்பிலைப் பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.