23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
14 1510659060 12
மருத்துவ குறிப்பு

நீல நிற சங்குப் பூவை இந்த மாதிரி யூஸ் பண்ணினா இந்த பாதிப்பு உங்களுக்கு வரவே வராது தெரியுமா!!

சொல்லி எத்தனை நேரமாச்சு, இன்னும் முடிக்கவில்லையா?, அதிரும் பாஸின் குரல் கேட்டாலே, பதட்டத்தில், சிலருக்கு இரத்த அழுத்தம் எகிறிவிடும். இதுபோல எல்லா இடங்களிலும், இருக்கிறது. இலக்கை அடையவேண்டிய விற்பனைப் பிரிவுகளில், மார்க்கெட்டிங் பிரிவுகளில் உள்ளவர்கள், இந்த பாதிப்புகளை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் அனுபவித்தே, வருகிறார்கள்.

திட்டுபவர்களை, அவர்களின் பாஸ் திட்டுவதால், வாங்கிய திட்டை, கூடுதலாக ஒன்றிரண்டு சேர்த்து, அவர்களின் கீழே பணிபுரிபவர்களிடம் சேர்த்துவிடுகிறார்கள்.
இவர்கள், வாங்கிய அந்தத் திட்டை, இவர்களுக்கு வேலையை அளிக்கும் வாடிகையாளர்களிடம் காட்ட முடியாது, சமயங்களில், அவர்கள், விற்பனையின் பிற துறைகளில் உள்ள குறைகளை எல்லாம், இவர்களிடம் சொல்லி, சத்தம் போட்டாலும் இவர்கள் அதையும் அமைதியாக காதில் வாங்கிக் கொண்டு, நிமிடங்களில், தீர்வுகளை கொடுக்க வேண்டும், இவர்களின் கோபத்தை, பணி இடங்களில் எங்கும் காட்ட முடியாது.

விளைவு? பதட்டம்! மனக்குழப்பம்! சோர்வு! இவற்றால், தினமும் வேலைக்குப் போகும்போது, கொலைக்கூடத்துக்கு செல்லும் ஆடுகள் போல, நடுங்கிக் கொண்டே செல்வார்கள், சிலர்..

மன அழுத்தத்தால், ஏற்படும் பாதிப்புகள்:
தன்னுடைய வேதனைகளை வெளியே சொல்ல முடியாமல், தனக்குள் அடக்கிக் கொண்டு, அதனால், கொடிய வியாதியாக உருவெடுக்கும் “சுய பச்சாதாபம்” முதல் பாதிப்பு, இரண்டாவது, சீரற்ற சுவாசம், உடல் வலி, இரத்த அழுத்த பாதிப்பு, இதய வியாதிகள் வயிற்றுப்புண் போன்ற உடல் வியாதிகள் உடல் நலனைக் கெடுக்கும், மலச்சிக்கலும் ஏற்படும்.

எப்படி போக்குவது, மன அழுத்தத்தை?
மன பாதிப்புகளில், மனச் சோர்வும், மன அழுத்தம் முக்கியமானவை. இதில், மனச் சோர்வு ஒரு பாதிப்பாக இருந்தாலும், அதற்கு தனிப்பட்ட காரணங்கள் கிடையாது, அது பொதுவான ஈடுபாடின்மையைக் குறிக்கும்.

மன அழுத்தத்திற்கான காரணங்கள் :
ஆயினும், மன அழுத்தத்தின் காரணங்கள் நமக்குத் தெரியும், எனவே, அந்த காரணத்தின் தன்மை அறிந்து, அதற்கு தீர்வு காண்பது என்பது, எளிதாகும்.
மன வியாதிகளுக்கு மன நல நிபுணர்கள், ஒவ்வொருவரும், ஒவ்வொரு பாணியில் சிகிச்சை அளிக்கிறார்கள். பாதிப்பின் தீவிரத்தை அறிந்து, சுவாசப் பயிற்சி, மனதில் இனிய காட்சிகளை உருவாக்கி அதில் மகிழ்ச்சியுடன் பயணித்தல், தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொள்ளும் மூதுரைகளை, அடிக்கடி மனதிற்குள் சொல்லி வருதல், நல்ல இசையைக் கேட்பது, நடப்பது, தனிமையில் இருப்பதைத் தவிர்த்தல் போன்றவை.

மூச்சுப் பயிற்சி :
மன அழுத்தம் போன்ற பாதிப்புகளை சரி செய்ய, இது போன்ற ஏராளமான முறைகள் இருந்தாலும், பெரும்பாலானவை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, நம் முன்னோர்கள், நாம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிகளாக வைத்த முறைகள்தான். “மூச்சிலே இருக்குது, சூட்சுமம்”, மோசமான உடல் வியாதிகளையே போக்கும் முறையான சுவாசம், மனதின் இந்த தற்காலிக பாதிப்பை, விரைவில் சரி செய்யும்.

மன அழுத்தத்தை போக்கும் எளிய வழி!
நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் அமர்ந்துகொண்டு, மூச்சை அதிகபட்சம் எவ்வளவு நேரம் இழுக்க முடியுமோ அந்த அளவுக்கு, உள்ளிழுக்க வேண்டும், அதே அளவு மூச்சை உள்ளே வைத்திருக்க முயல வேண்டும், அதன் பின்னர், மூச்சை, உள்ளே வைத்திருந்த அளவில், மெல்ல வெளியேற்ற வேண்டும். அவ்வளவு தான், மூச்சு பழக, மனதை வாட்டிய வேதனைகள் மறைந்து, உடலும் மனமும், உற்சாகமாகும், திட்டினாலும், சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டு, வேலையில் கவனம் செலுத்தும் தன்மையைப் பார்த்து, ஆச்சரியத்தில் உறைவார், மேலதிகாரி.

தாரக மந்திரம்
“என் கடன் பணி செய்து கிடப்பதே!”, “இதுவும் கடந்து போகும்”, என்பது போன்ற மனதை இலகுவாக்கும் ஒரு ஊக்கமூட்டும் சொல்லை நாமே உருவாக்கிக் கொண்டு, அதையே, தினமும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், மனதில் உச்சரித்து வர, சிந்தனை அந்த வாக்கியத்தின் வீரியத்தில் ஒன்றிணையும் போது, மனதில் அதுவரை பாதிப்பு தந்து வந்த, மன அழுத்தமெல்லாம், காணாமல் போயிருக்கும்.

முடிவுகளைத் தள்ளிப்போடலாம்.
“பதறிய காரியம் சிதறிவிடும்” என்பது போல, மன அழுத்தத்தின் பாதிப்பால், எடுக்கும் பெரிய முடிவுகள், பிற்காலத்தில் வருத்தப்பட வைக்கும், எனவே, அந்த நேரத்தில், முடிவுகள் எதுவும் எடுக்காமல், இயல்பாக இருந்து வருவதே, நன்மையளிக்கும் செயலாகும்.

கற்பனையில் நன்மைகள் :
நாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் சுற்றுலா சென்ற, நமக்கு பிடித்த அந்த இடத்துக்கு மீண்டும் வந்திருப்பதாக எண்ணிக் கொண்டு, அங்கே நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போல, எல்லோரிடமும் உற்சாகமாக சிரித்து மகிழ்வது போல, அழகிய பூங்காக்களில் உற்சாகமாக நடந்து செல்வதைப்போல, எண்ணி, அந்த நிகழ்வின் ஒவ்வொரு வினாடியையும் மனதில் இறுத்தி இரசிப்பதாக, எண்ணி வர வேண்டும். இதன் மூலம், மனதிலும், உடலிலும் புது உற்சாகம் உண்டாகி, மனம் இலகுவாகும். துன்பங்கள் தந்து வந்த, மன அழுத்த பாதிப்புகள் எல்லாம், விலகி ஓடும்.

நல்ல இசையும், மயக்கும் நறுமணமும் :
நல்ல இசை மனதை வருடி தெம்பளிக்கக்கூடியது, மனதை ஊக்கப்படுத்தும் அரிகாம்போதி, கரகரபிரியா, முகாரி போன்ற இராகங்களில் அமைந்த பாடல்களைக் கேட்டுவரலாம். மனதிற்கு பிடித்த வாசனையை, சந்தனம், ஜவ்வாது போன்றவற்றை உடலில் தடவிக்கொள்வது, அல்லது நறுமண ஸ்பிரேக்களை தெளித்துக் கொள்வதும், மனதை இதமாக்கும்.

இயற்கையுடன் உறவாடு :
இதைப்போல, பறந்து விரிந்த ஆகாயத்தை, தோட்டங்கள் பூங்காக்களில் காணும் மரங்களில் உள்ள பசுமையான இலைகளை அல்லது நீர்நிலைகளில் காணும் கொக்கு, நாரை போன்ற வெண்ணிறப் பறவைகளை கண்டு, அவற்றுடன் நெருக்கமாக பேசுவது போல, சிறிது நேரம் தனக்குள் பேசி வர, மனதில் புது உற்சாகம் தோன்றும்.

மசாஜ் :
கைகளை இருபுறமும் சுழற்றுவது, கால்களை நீட்டி, கைகளால் தொடுவது போன்ற சிறிய உடற்பயிற்சிகளை செய்யலாம், கழுத்தை, நெற்றிப் புருவத்தை, தோள் பட்டைகளை மெதுவாக கைவிரல்களால் மசாஜ் செய்து வர, நல்ல மாற்றங்களை உணரலாம்.
இதைப்போல, பல முறைகளில், நாம் மன அழுத்தத்தை சரி செய்து, மீண்டும் உற்சாகமாகப் பணியாற்ற முடியும், சிலருக்கு இந்த முறைகளைக் கடைபிடிக்க வாய்ப்புகள் இல்லையெனில், இயற்கையின் தீர்வாக, மூலிகைகளில் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி, மன நலம் பெறலாம்.

மன அழுத்தம் போக்கும் சங்குப்பூ தேநீர்!
இறைவனுக்கு சூட்டும் தெய்வீக மலராகவும், காண்பதற்கு அழகான அடர் நீல நிறத்திலும் காணப்படும் சங்குப்பூ, மனிதர்களின் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை சரிசெய்யக்கூடியது, அதிலே, மன வியாதிகளுக்கு தீர்வளிக்கும் ஆற்றலும் ஒன்று.
சங்குப்பூவில் உள்ள வேதித்தாதுக்கள், மூளையின் செயல் நாளங்களை புத்துணர்வூட்டி, உடல் மன இயக்கங்களை, உற்சாகப்படுத்தும் தன்மை மிக்கது.
இத்தகைய ஆற்றல்மிக்க சங்குப்பூக்களை சிறிது எடுத்து, நிழலில் உலர வைத்து, அந்தப் பூக்களை நீரில் இட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, பனங்கற்கண்டு அல்லது வெல்லத்தூள் சேர்த்து பருகி வர, மனச்சோர்வுகள் விலகி ஓடும், மனம் இலேசாகும். தேவைப்பட்டால், தேன் கலந்தும் பருகி வரலாம்.14 1510659060 12

Related posts

பல் அழுக்குகள் நீங்கி பளிச்சென இருக்க இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

nathan

குழந்தை ஆணா பெண்ணா..?!

nathan

தலையில் அரிப்பா? குணப்படுத்த ஈஸி வழிகள்!!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்க முகம் ஹீரோயின் மாதிரி பிரகாசமா மின்னுமாம்…!தண்ணீரை நீங்க ‘இப்படி’ பயன்படுத்தினால்…

nathan

முருங்கைக்கீரை குழந்தையின்மை குறை போக்கும்!

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆயுர்வேதத்தின் படி சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்!

nathan

நாக்கில் வெண்படலம் தீர்வு என்ன?

nathan

அல்சரா… அலட்சியம் வேண்டாம்!

nathan

இந்த ஆபத்து வரலாம்!அடிக்கடி பட்ஸ் யூஸ் பண்றிங்களா?

nathan