26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
23 1495538635 3 25 1511592163
முகப் பராமரிப்பு

சருமத்தில் உள்ள முகப்பருவினால் உண்டான குழிகளை நிமிடத்தில் சரி செய்யலாம்!

சருமத்தில் உள்ள துளைகள் உங்களது முகத்தை அசிங்கமாக வெளிப்படுத்தும். சரும துளைகளை எத்தனை நாட்கள் தான் மெக்கப் போட்டே மறைத்துக் கொண்டு இருப்பீர்கள்…? இந்த சருமத்துளைகளை மிக எளிமையான வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி தீர்க்கலாம்…

இங்கு கொடுக்கப்பட்டுள்ள இயற்கையான வழிமுறைகளை நீங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால், உங்களுக்கான நல்ல பலனை எளிதாகவும் விரைவாகவும் பெறலாம்… இந்த செயல்முறைகளால் உங்களது முகத்திற்குக் எந்த ஒரு தீமையும் உண்டாகது என்பது குறிப்பிடத்தக்கது…

1. வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் முகத்தில் இருக்கும் குழிகளை மறைக்க உதவும். அதற்கு அதன் குளிர்ச்சித் தன்மை தான் காரணம். எனவே வெள்ளரிக்காயை துருவி, அதில் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்கலாம்.

2. முட்டை முட்டையின் வெள்ளைக்கருவிற்கு முகத்தில் உள்ள குழிகளை மறைக்கும் சக்தி உள்ளது. அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள குழிகளை மறைக்கலாம்.

3. பப்பாளி பப்பாளி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க மட்டுமின்றி, முகத்தில் உள்ள குழிகளையும் தான் மறைக்கப் பயன்படுகிறது. எனவே நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவு வேண்டும்.

4. தக்காளி உண்மையில் முகத்தில் உள்ள குழிகள், சருமத்துளைகள் திறந்து, மீண்டும் மூடாமல் இருப்பதால் ஏற்படும். தக்காளி திறந்துள்ள சருமத்துளைகளை மூட உதவும் எனவே தக்காளியை அரைத்து முகத்தில் தடவி மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

5. ஆரஞ்சு தோல் ஆரஞ்சு தோல் பவுடர் இரண்டு டீஸ்பூன், பால் அல்லது பால் க்ரீம், தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஆகியற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆரஞ்சு தோல் பவுடரையும் பால் அல்லது பால் க்ரீமையும் கலந்து கொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து உங்களது முகத்தில் பரவலாக மசாஜ் செய்யுங்கள். இதனை 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

6. ஐஸ்கட்டிகள் ஐஸ்கட்டிகளை கொண்டு முகத்தில் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள சரும துளைகள் மறைந்து சருமம் சமநிலையை அடையும்.

7. தக்காளி, சர்க்கரை தக்காளியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள் சருமத்தில் உள்ள துளைகளை சுருங்க செய்வதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகளையும் வெளியேற்றும். முதலில் தக்காளியை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை சர்கரையில் தொட்டுக் கொள்ள வேண்டும். பின் அந்த தக்காளியை சருமத்தில் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். பின்னர் முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள துளைகள் மூடப்படும். சருமத்தில் உள்ள துளைகள் படிப்படியாக மறையும்.

8. பேக்கிங் சோடா பேக்கிங் சோடா சருமத்தில் உள்ள பருக்களை சுருங்கச் செய்வதோடு, சருமத்தில் உள்ள துளைகளையும் மூட செய்யும்.. பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். பின் பேக்கிங் சோடாவை சருமத்தில் 30 நிமிடங்கள் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உங்களது சருமம் சென்சிடிவ் சருமம் என்றால் இந்த முறையை தவிர்த்து விடுங்கள்.

9. எலுமிச்சை சாறு முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் விரிவடைந்த சரும் துளைகள் சுருங்க ஆரம்பிக்கும்.

10. அன்னாசி பழம் இரண்டு டீஸ்பூன் அன்னாசி பழ சாறுடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். இதனால் சருமத்தில் உள்ள துளைகள் நீங்கும்.

11. கடலை மாவு கடலை மாவில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், முகத்தில் உள்ள பள்ளங்கள் மெதுவாக மறைவதை நன்கு காணலாம்.

12. பாதாம் பேஸ்ட் பாதாமில் வைட்டமின் ஈ ஏராளமாக நிறைந்துள்ளது. இது திறந்துள்ள சருமத் துளைகளை மூட உதவும். அதற்கு சிறிது பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

13. தேன் மற்றும் சர்க்கரை தேன் மற்றும் சர்க்கரை கூட சருமத்தில் உள்ள பள்ளங்களை மறைக்க உதவும். அதிலும் தேன் சிறந்த டோனர் மட்டுமின்றி, சருமத்துளைகளை இறுக்கும். அத்தகைய தேனுடன் சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்குவதோடு, முகத்தில் உள்ள குழிகளும் மறையும்.

23 1495538635 3 25 1511592163

Related posts

உங்களுக்கு தெரியுமா மாம்பழத்தை பயன்படுத்தி முகத்தில் உள்ள பருக்கள் முதல் சுருக்கங்கள் வரை சரி செய்வது எப்படி..?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சென்சிடிவ் சருமத்தினருக்கான சில ஃபேஸ் ஸ்கரப்கள்!!!

nathan

மின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ் வீட்டிலேயே தயாரியுங்கள்!

nathan

கொரிய பெண்கள் ரொம்ப அழகாக இருக்க ‘இந்த’ விஷயங்கள தான் தெரியுமா?

nathan

கருவளையம் மறைய விளக்கெண்ணெயை எப்படியெல்லாம் யூஸ் பண்ணனும்னு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!

sangika

முகத்தின் அழகை தக்க வைக்க நாம் சில இயற்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தற்போது அவற்றை பார்ப்போம்.

nathan

சிறிய கண்களை அழகாக காட்ட டிப்ஸ்

nathan

உங்களுக்கு குளிர் காலத்தில் முகம் கருத்துப் போவதற்கு காரணம் என்ன தெரியுமா? சூப்பர் டிப்ஸ்….

nathan