24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
21 1511242331 4
சரும பராமரிப்பு

வீட்ல சோளமாவு இருந்தா போதும்! உங்க வியர்வை துர்நாற்றத்துக்கு குட்பை சொல்லலாம்!!சூப்பர் டிப்ஸ்

டியோடரென்ட், பெர்ஃப்யூம், போன்றவை எல்லாம் இல்லாமல் யாரும் வெளியில் செல்வதில்லை. ஆனால் அவற்றின் ஆபத்தான பக்கவிளைவுகளைப் பற்றி அலட்சியமாக கடந்து செல்கின்றோம். அவற்றில் பயன்படுத்தக் கூடிய நச்சு மிக அதிகம் மிகுந்த ரசாயனங்கல் சரும செல்களை ஊடுருவி அங்கேயே தங்கிக் கொள்கின்றன.

யோசித்துப் பாருங்கள். இப்படி தினமும் அவற்றை அடித்துக் கொள்வதால் லட்சக்கணக்கான நச்சுக்கள் உங்கள் சருமத்தை ஊடுவி ஆபத்தான நோய்களை உருவாக்குகின்றன.

வியர்வைக்கு காரணம் கிருமிகள்தான். அவற்றை வெளியேற்ற நமது வியர்வை சுரப்பிகள் வியர்வையை சுரக்கும்போது ஒவ்வொரு உடலுக்குள்ளும் இருக்கின்ற ப்ரத்யோக வாசனையுடன் கிருமிகளும் சேர்ந்து வியர்வை நாற்றத்தை உண்டாக்குகின்றன.

வியர்வை நாற்றத்தைப் போக்க நீங்கள் டொயோடரன்ட் அடித்துக் கொள்வதால் வெளியில் வேண்டுமானாலும் வாசனை இருக்கலாம். ஆனால் அதே கிருமிகள், அதே உடல் வாசனையுடன் சேர்ந்து தன் வேலையை செய்தபடிதான் இருக்கும்.
சரி அதற்காக நாற்றத்துடனேயே இருக்க முடியுமா என்று நினைக்கிறீர்களா? அதுவும் உண்மைதான். வெளியில் அப்படியே செல்ல முடியாது. நாலு பேர் இருக்குமிடத்தில் தர்மசங்கடமாக உணர வேண்டியிருக்கும். என்னதான் பண்ணுவது என்று நினைத்தால் உங்களுக்கான வழியையும் நாங்கள் கூறுகின்றோம்.

இயற்கை வாசனைப் பொருட்கள் : இயற்கையான உங்க சருமத்திற்கு பாதகம் விளைவிக்காத டியோடரன்ட் நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். இவை மூலம் உங்களுக்கு கமகமக்கும் வாசனையை எதிர்ப்பார்க்காதீர்கள். ஆனால் வியர்வை நாற்றத்தை உண்டாக்காது. உண்மையில் ஆரோக்கியத்தின் மீது உங்களுக்கு அக்கறையென்றால் நிச்சயம் இந்த மாதிரி உபயோகிக்க பழகுங்கள். செய்யும் முறையும் எளிதுதான். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

சோளமாவு டியோடரன்ட் : தேவையானவை : சமையல் சோடா – 1/2 கப் சோளமாவு – 1/2 கப் தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் விட்டமின் 22- 1 கேப்ஸ்யூல் லாவெண்டர் எண்ணெய் – 10 துளிகள்.

தயாரிக்கும் முறை : முதலில் சோளமாவுடன் சமையல் சோடாவை மேலே குறிப்பிடும் அளவு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அவற்றில் தேங்காய் எண்ணெய், விட்டமின் ஈ, தேயிலை மர எண்ணெய் போன்றவற்றை கலந்து க்ரீம் போல் பதத்திற்கு கலக்குங்கள். பின்னர் இதனை காற்று புகாத ஜாரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை : குளித்தவுடன் இந்த க்ரீமை வியர்வை வரும் பகுதிகளில் தடவிக் கொள்ளுங்கள். அன்றைய நாள் முழுவதும் நாற்றமில்லாமல் லாவெண்டர் மணத்துடன் இருக்கும்.

கற்றாழை டியோடரெண்ட்: தேவையானவை : கற்றாழை – 1/2 கப் தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் விருப்பமான வாசனை எண்ணெய் – 10 துளிகள்.

செய்முறை : கற்றாழை ஜெல்லை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். அல்லது ஃப்ரெஷாக கற்றாழை இலையிலிருந்து ஜெல்லை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து க்ரீம் போல் செய்து கொள்லவும். பின்னர் உங்களுக்கு விருப்பமான பாதாம், ரோஜா அல்லது லானெண்டர் என ஏதாவது வாசனை எண்ணெய் 10 துளி கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை : குளித்தவுடன் இந்த க்ரீமை வியர்வை வரும் பகுதிகளில் தடவிக் கொள்ளுங்கள். இவை உடலில் உருவாகும் கிருமிகளி அழிக்கிறது. சருமத்திற்கும் பாதுகாப்பு அளிக்கிறது. அக்குளில் கருமை உண்டாகாமலும் தடுக்கிறது.

எலுமிச்சை டியோடரென்ட் : தேவையானவை : சமையல் சோடா- 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு- 1/2 கப்

தயாரிக்கும் முறை : எலுமிச்சை சாறில் சமையல் சோடாவை கலந்து வைத்துக் கொள்ளுங்கள். கூட சிறிது நீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை : குளிக்கும்போது இந்த கலவையை தடவி 5 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இதனால் நாள் முழுவதும் வியர்வை நாற்றம் உண்டாகாமல் தடுக்கலாம்

ஆப்பிள் சைடர் வினிகர் டியோடரென்ட் : ஆப்பிள் சைட வினிகர் – 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை – 2டேபிள் ஸ்பூன் நீர்- 2 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை : எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கலந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உபயோகப்படுத்தும் போதெல்லாம் நன்றாக குலுக்கி எடுத்து பயன்படுத்துங்கள். எலுமிச்சை வாசனையுடன் உங்கள் உடல் ஃப்ரெஷாக இருக்கும்.

டீ ட்ரீ ஆயில் டியோடரென்ட் : தேவையானவை : தேயிலை மர எண்ணெய் – 20 துளிகள் ரோஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை : இதன் தயாரிப்பு மிக எளிது. தேயிலை மர எண்ணெயை ரோஸ் வாட்டருடன் கலந்து ஒரு காலியான ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது தினமும் ஃப்ரெஷாக தயாரித்தும் பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை : காலை, மாலை என இருவேளை சருமத்தில் தடவுங்கள், அல்லது ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இவை மெல்லிய வாசனையை படரச் செய்யும். நாள் முழுவதும் ஃப்ரெஷாக உணர்வீர்கள். சருமத்திற்கும் பக்கவிளைவில்லாதது.

புதினா டியோடரென்ட் : இது மிகவும் எளிதான் குறிப்பு, அக்குளில் உண்டாகும் கருமையை போக்குகிறது. வாசனையுடன் நாள் முழுவதும் இருக்கச் செய்யும். தேவையானவை : புதினா இலைகள் – 5 ரோஸ்மெரி இலைகள் – 5 சூடான நீர் – 1 கப்

தயாரிக்கும் முறை : நன்றாக கொதிக்கும் நீரில் புதினா மற்றுஜ் ரோஸ்மெரி இலைகளை போட்டு மூடி வையுங்கள். பின் அடுப்பை அணைத்துவிடவும். 10 நிமிடம் கழித்து நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை : இந்த நீரை ஒரு பஞ்சினால் முக்கி எடுத்து வியர்வை நாற்றம் வரும் பகுதிகளில்; தடவுங்கள். காலை மாலை என இருவேளை செய்யலாம். வாசனையுடன் இருப்பீர்கள். முயற்சி செய்து பாருங்கள்.

படிகாரம் : படிகாரம் – 1 ஸ்பூன் நீர் – தேவையான அளவு

செய்முறை : படிகாரத் தூள் எல்லா கடைகளிலும் விற்கு அதனை பொடித்து நீரில் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இதனுடன் விருப்பப்பட்டால் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை : படிகாரத்தூளை நீரில் கரைசலாக தயாரித்து உடல் முழுவதும் தேய்த்து அல்லது வியவை வரும் பகுதிகளில் தேய்த்து கழுவுங்கள். காலையில் மற்றும் அலுவலகம் முடிந்து இரவில் என இருமுறை செய்தால் வியர்வை உங்கள் பக்கமே எட்டிப்பாக்காது.

21 1511242331 4

Related posts

முல்தானி மட்டி,தவிடு!!

nathan

சரும சுருக்கங்களை தடுக்க எளிய டிப்ஸ்

nathan

கோடையில் சருமத்தை பாதுகாக்க கடலை மாவை பயன்படுத்துங்க

nathan

அழகை மெருகூட்ட ரோஸ் வாட்டர் யூஸ் பண்ணுங்க..

nathan

உங்க உடல் மற்றும் அக்குள் பகுதியில் துர்நாற்றம் வராமல் தடுக்க

nathan

விளக்கெண்ணெயின் அழகு நன்மைகள்!!!

nathan

தோல் சுருக்கத்தை போக்கும் உருளைக்கிழங்கு

nathan

இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் நமது முக அழகையும் இது பாதுகாக்கிறது!…

sangika

அழகை அள்ளித்தரும் குங்குமப்பூ!

nathan