26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
06 1509970002 9
அழகு குறிப்புகள்

சந்தனம் ஏன் இவ்ளோ காஸ்ட்லியா இருக்குன்னு தெரியுமா?அப்ப இத படிங்க!

சருமம் தொடர்பான சந்தேகங்கள், குறைகள் எல்லாருக்கும் இருக்கிறது. அதை விட தங்களின் சருமத்தை அழகாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சந்தையில் கிடைக்க கூடிய எல்லா விதமான க்ரீம்களையும் வாங்கி பயன்படுத்துவர். இன்னும் சொல்லப்போனால் தங்கள் சருமத்தை பராமரிப்பது என்பது தன்னம்பிக்கையை மிளரச் செய்திடும் ஓர் வழி என்று கூட சொல்லலாம்.

எதேதோ செய்து பார்த்தும் உங்கள் சருமம் பொலிவுடன் இல்லையா? அப்படியானால் நீங்கள் சந்தனத்தை பயன்படுத்தலாம். இதுவரை ஆன்மீக ரீதியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த சந்தனத்தை இனி உங்களது சரும பராமரிப்புக்கும் பயன்படுத்திப்பாருங்கள் நல்ல பலன் உங்களுக்கு கிடைத்திடும்.

வரலாறு :
இந்தியாவில் இருக்கும் மரங்களில் மிகவும் விலையுர்ந்தது சந்தன மரம் தான். சந்தன மரத்தின் தாயகம் இந்தியா தான். இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் அதிகமாக வளர்கிறது.
வெள்ளை சந்தனம் சாதாரண சந்தன மரங்களுள் ஒன்று, இதை அறிவது மிக கடினம், மரபு அணு சோதனை முலம் மட்டும் தான் கண்டுபிடிக்க முடியும். இந்த வெள்ளை சந்தனம் பல லட்சக்கணக்கான மரங்களுள் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே விளையக்கூடியது.

வறட்சிக்கு குட்பை : உங்கள் சருமம் வறண்டு இருந்தால், சருமத்தில் உள்ள இயற்கையான pH அளவை சமநிலையுடன் வைத்திருக்க உதவும் இந்த ஃபேஸ் பேக்கை முயற்சி செய்து பாருங்கள். 3 டீஸ்பூன் சந்தன எண்ணெய், 3 டீஸ்பூன் பால் பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் பன்னீரை கொண்டு மற்றும் வழுவழுப்பான பேஸ்ட்டை தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தின் மீது பூசி கொண்டு, அதை அப்படியே 15-20 நிமிடங்கள் வரை விட்டு விடுங்கள். பின் சாதாரண நீரை கொண்டு முகத்தை கழுவி கொள்ளுங்கள். சந்தன எண்ணெயும் பாலும் உங்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து, தேவையான நீர்ச்சத்தை அளிக்கும். பன்னீர் ஒரு டோனராக செயல்படும். இந்த சிகிச்சையை தினமும் பின்பற்றினால், நீர்ச்சத்துடன் கூடிய மின்னும் சருமத்தை பெறுவீர்கள்.

கருவளையங்கள் : சந்தனம் மற்றும் பன்னீரை கொண்டு செய்யப்படும் பேஸ்ட்டை கொண்டு கருவளையத்தை வீட்டிலேயே குணப்படுத்தலாம். தூங்கச் செல்வதற்கு முன்பு, இதனை கண்களின் கீழ் தடவிக் கொள்ளுங்கள். காலையில் கழுவி விடுங்கள்.

எண்ணெய் கட்டுப்பாடு : வறண்ட சருமத்திற்கு மட்டும் சந்தனம் தீர்வை அளிப்பதில்லை. மாறாக எண்ணெய் சருமத்திற்கும் அது தீர்வை அளிக்கும். அதனால் உங்கள் சருமத்தில் இருந்து அதிகமாக சுரக்கும் எண்ணெய்யை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், உங்களுக்கு சந்தன ஃபேஸ் பேக் பயன்படும். ஒரு டீஸ்பூன் சந்தன பொடியை ஒரு டீஸ்பூன் முல்தானி மட்டி மற்றும் பன்னீருடன் கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட் கெட்டியாகவும் இருக்க கூடாது, நீராகவும் இருக்க கூடாது; அதனால் அதற்கேற்ப அளவில் பன்னீரை சேர்த்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி கொண்டு, 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் சாதாரண நீரில் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். இந்த பேக்கை வாரம் மூன்று முறை பயன்படுத்தினால் வழுவழுப்பான மற்றும் எண்ணெய் பிசுக்கு இல்லாத சருமத்தை பெறலாம்.

பருக்கள் : பருக்களை குணப்படுத்த இந்து மிகச்சிறந்த தீர்வாகும். உங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு டீஸ்பூன் சந்தனப்பொடி, ஒரு டீஸ்பூன் மஞ்சள் போடி மற்றும் மூன்று டீஸ்பூன் பன்னீர். இதனை ஒன்றாக சேர்த்து கலந்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து, அதனை முகத்தில் தடவிக் கொள்ளவும். தடவிய 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவி விடுங்கள். உங்கள் முகத்தில் ஏற்கனவே இருக்கும் பருக்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் வருங்காலத்தில் வரும் பருக்களை தடுக்கவும் செய்யும் இந்த பேக்

சன் டேன் : எலுமிச்சை சாறு மற்றும் நான்கு டீஸ்பூன் சந்தன பொடியை ஒன்றாக கலந்து பயன்படுத்தினால், வெயிலினால் சருமத்தின் நிறம் கருப்பாவதை தடுக்க முடியும். சரும எரிச்சல் அல்லது அழற்சி உள்ளவர்கள் இதனை பயன்படுத்துவதை தவிர்த்தல் நல்லது.

வெண்மை : தங்களின் சரும வகை எப்படிப்பட்ட வகையாக இருந்தாலும் சரி, வெண்மையான சருமத்தை பெற ஆசைப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். வறண்ட சருமம் இருந்தால் சந்தன எண்ணெய்யை பயன்படுத்துங்கள். எண்ணெய் சருமத்தை கொண்டிருந்தால் சந்தன பொடியை பயன்படுத்துங்கள். ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் சந்தன எண்ணெய்/பொடி, ஒரு டீஸ்பூன் மஞ்சள் மற்றும் பன்னீரை கொண்டு பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அது காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். பளிச்சிடும் சருமம் உங்களுக்கு கிடைக்கும்.

சுருக்கங்கள் : சந்தனத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் மினரல்ஸ்கள் உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். மேலும் சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, சுருக்கங்களை ஏற்படுத்தும் இயக்க உறுப்புகளின் உருவாக்கத்தை தடுக்கும். அதனால் சீக்கிரத்தில் வயதாவதை இது தடுக்கும். சந்தன பொடி மற்றும் முல்தானி மெட்டியை இரண்டு டீஸ்பூன்கள் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் பன்னீரை கலந்து கொள்ளவும். இதனை ஒரு பேஸ்ட்டாக கலந்து கொள்ளுங்கள். இதனை உங்கள் முகத்தில் தடவி, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிடுங்கள். இந்த பேக்கை வாரம் இரு முறை செய்யலாம்.

ஃபேர்னஸ் க்ரீம் : வெளியில் செல்லும் போது உடனடியாக பளீச் முகம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான மிகவும் பயனுள்ள குறிப்பு இது. ஒரு ஸ்பூன் சந்தனப்பவுடருடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து முகத்தில் மாஸ்க்காக போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் பத்து நிமிடம் கழித்து கழுவி விடலாம். இப்படிச் செய்து வந்தால் உங்கள் முகம் பொலிவுடன் இருக்கும். தயிருக்கு பதிலாக எலுமிச்சை சாறு, கற்றாழை ஜெல், ரோஸ் வாட்டர் என எதுவும் சேர்க்கலாம்.

பயன்பாடு : வெள்ளை சந்தன மரத்தின் சிலை (முருகன், சிவன், வேல்) சமய வழி பாட்டில் முக்கிய இடம் பெறுகிறது. இதற்கென்று தனியாக நறுமணம் இருக்காது. வெள்ளை சந்தனம் மரங்களுக்கு மருத்துவக் குணங்களும் உண்டு. இந்த சந்தனம் பவுடர், க்ரீம்,சோப்பு,ஊதுவர்தி ஆகியவற்றில் பயன்படுத்தப்படும்.சந்தன எண்ணெய் அதிக அளவில் மற்ற வாசனை திரவியங்கள் தயாரிப்பில் பகுதி பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சந்தன எண்ணெயுடன் மற்ற வாசனைப் பொருட்களை கலந்து தயாரிக்கப்படும் வாசனை திரவியங்களே அதிக தரமுள்ளதாக உள்ளது. சந்தன கட்டையில் சித்திர வேலைபாடுகளுக்கும், கதவுகள், பேனா தாங்கிகள்,பேப்பர் வெயிட்டுகள்,கத்திகள்,புகைப்பட பிரேம்கள் ஆகிய பொருட்கள் செய்யப்படுகின்றன இந்த சந்தனத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. அவை உங்கள் சருமத்தை மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் பேணிக்காக்க உதவுகிறது.

நெற்றியில் : சந்தன மரம் மருத்துவப்பயன் நிறைந்த ஒரு மரம். சந்தனக்கட்டையை சந்தனக் கல்லில் தேய்த்து சாந்தாக்கி, உடம்பில் பூசிக்கொள்வதன் மூலம் கோடை வெப்பத்திலிருந்து தங்களை காத்துக்கொள்கிறார்கள் இந்தியர்கள். சந்தனத்தின் வளர்ந்த மரம், வாசனை நிறைந்தது. மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச்சத்து நிறைந்தது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மருத்துவத்தன்மை நிறைந்ததும், சருமத்துக்கு குளிர்ச்சி தரக்கூடியதுமாகும்.

மூளைச் சோர்வு : நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன. உடலின் பெரும்பாலான நரம்புகள் நெற்றிப்பொட்டின் வழியாகவே செல்கின்றன. ஆகவே நெற்றிப்பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தி இருக்கிறது. ஆனால் அந்தச்சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப்படுவது நெற்றிப் பொட்டில்தான். அங்கு பூசப்படும் சந்தனம் நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்கிறது. நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது, வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகிறது.06 1509970002 9

Related posts

அழகுக் கட்டுரைகள் – அழகு உள்ளப் பயிற்சி & உடற்பயிற்சி & அழகு ஒப்பனை முறைகள்

nathan

முகத்திற்கு வீட்டில் செய்யக்கூடிய மசாஜ்

nathan

மருவை நீக்கியவர்களுக்கும், மருவைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கும்…

nathan

அழகு ,கன்னத்தின் அழகு அதிகரிக்க..,BEAUTY INTAMIL

nathan

இத படிங்க உங்கள் சருமம் மற்றும் தலை முடியில் இந்த பழங்களை பயன்படுத்தலாமா?

nathan

குழந்தைகளுக்கு நோய் ஏற்படுகிறதா அடிக்கடி மிக அவதானத்துடன் செயற்படுங்கள்!….

sangika

கவலை வேண்டாம்.! சுகர் பிரச்சனையை சமாளிக்க முடியலையா?

nathan

கடுப்பான வனிதா! ரம்யா கிருஷ்ணனின் வேற லெவல் சந்தோஷம்…

nathan

விஸ்கி ஃபேஸ் பேக்குகள்

nathan