10 1510314250 11
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா தைராய்டினால் ஏற்படும் எடை அதிகரிப்பை குறைக்க எளிய வழிமுறைகள்!

நம்முடையை மரபணு மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரித்து அணுக்கள் வேலை செய்வதற்கு பெரிதும் உதவுவது தைராய்டு சுரப்பி தான்.தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பது மெல்லக் கொல்லும் விஷய்ம் என்றே சொல்லலாம். இந்த நோயின் அறிகுறிகள் பல வருடங்களாக இருந்தாலும், எதனால் இந்த அறிகுறிகள் இருக்கிறது என்று பல கண்டறிய முடியவில்லை. ஏனென்றால் இந்த கோளாறு பரந்து விரிந்ததாகவும், தெளிவற்றதாகவும் இருக்கிறது. இந்த தைரயாடு சுரப்பி குறைவாக சுரக்கிறது என்றால் முதலில் தெரியும் அறிகுறிகளில் ஒன்று காரணமேயில்லாமல் உடல் எடை கூடுவது.


தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் எல்லாருக்கும் எடை தொடர்பான பிரச்சனை இருக்கும். ஹைப்போ தைராய்டு என்றால் அதீத உடல் எடை இருக்கும். சரி, இப்போது தைராய்டினால் உடல் எடை அதிகரித்திருந்தால் அதனை குறைக்க சில யோசனைகள்.

ஹைப்போ தைராய்டு :
இரத்ததில் தைராக்சின் ஹார்மோன் குறைந்த அளவில் சுரப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கும், உடல் தளர்ச்சி,சோர்வு, அதிக தூக்கம், முடி உதிர்தல், மறதி,தலை வலி, கை,கால்கள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும், குறைந்த குளிரைக்கூட தாங்க முடியாத தன்மை, முறையற்ற மாத விலக்கு போன்ற பிரச்சனைகள் இருக்கும்..

உடல் எடை : தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான். இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு சரியாக செயல்பட மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன. தைராய்டில் பிரச்சினை என்றால், உடல் இயக்கம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகும். நம் உடலில் உள்ள தைராய்டு (Thyroid Glands) சுரப்பிகள்தான் நம் உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன..

தவிர்க்க : ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், டர்னிப், போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும். தைராய்டு ஹார்மோன் சுரப்பிற்க்கு அயோடின் அவசியம். ஆனால் இவை தைராய்டு சுரப்பி அயோடினை உறிஞ்ச விடாமல் தடுக்கும்..

க்ளுட்டான் : தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் குளூட்டான் அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குளுட்டனானது, கோதுமை, பார்வி போன்ற தானியங்களில் இருக்கும். எனவே இந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்..

துரித உணவுகள் : பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அது தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்திக்கு இடையூறு விளைவிக்கும். எனவே பாஸ்ட் ஃபுட் உணவுகள் மட்டுமின்றி, எண்ணெயில் பொரித்த உணவுகளையும் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்..

கால்சியம் : தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை, தைராய்டு மருந்து மாத்திரைகளை உட்கொண்ட உடனேயே உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கால்சியமானது தைராய்டிற்காக எடுத்து வரும் மருந்துகளின் சக்தியைக் குறைத்துவிடும். எனவே பால் பொருட்களை மருந்து மாத்திரைகள் எடுத்த சில மணிநேரங்கள் கழித்து எடுக்க வேண்டும்.

மது வேண்டாம் : தைராய்டு பிரச்சனை இருந்தால், அது ஹைப்போவாக இருக்கட்டும் அல்லது ஹைப்பராக இருக்கட்டும், ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு சுரப்பியையே பாதிக்கும்.

பச்சை வெங்காயம் : பச்சை வெங்காயம் தைராய்டு ஹைர்மோன்களின் உற்பத்தியைத் தூண்டும். எனவே ஹைப்போ தைராய்டு இருப்பவர்கள், பச்சை வெங்காயத்தை எப்போதும் சாப்பிடவேக் கூடாது.

காபி : ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள், காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் காபியில் உள்ள காப்ஃபைன், உடலால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாமல் தடுக்கும்.

இனிப்பு : இனிப்பு உணவுப் பொருட்களை அதிகம் உட்கொண்டால், அது உடலின் மெட்டபாலிசத்தை குறைத்து, உடல் பருமனை அதிகரிக்கும். எனவே ஹைப்போ தைராய்டு கொண்டவர்கள், இனிப்பு நிறைந்த உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

தைராய்டு ஏன் முக்கியம் : நம் கழுத்தில் உள்ள நாளமில்லாச் சுரப்பி நம் உடல் இயக்கத்திற்க்கு தேவையான பணிகளை செய்கிறது.. பொதுவாக நம் உடலில் அயோடின் குறைபாட்டினால் தான் தைராய்டு பிரச்சனை வருகிறது.. இந்த நோய் பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கிறது.. நாளமில்லாச் சுரப்பிகளுள் மிக முக்கியமானது தைராய்டு சுரப்பி. இதில் சுரக்கும் தைராக்சின் எனும் ஹார்மோன், உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறுவதற்கு உதவுகிறது.

அறிகுறிகள் : மோசமான தசை, களைப்பு,குளிர் தாங்கமுடியாமை, குளிரை உணர்தல் அதிகரித்தல்,மனச்சோர்வு,தசைப்பிடிப்பு , மூட்டு வலி,முன்கழுத்துக் கழலை, உடல் எடை அதிகரிப்பது, முடி உதிர்வு, வியர்க்காமல் இருப்பது,மூச்சு வாங்குதல்,மலச்சிக்கல், பேச்சு மற்றும் தொண்டை கட்டி குரல் உடைதல்,எதையும் முறையாக நினைவில் வைத்துக் கொள்ள முடியாமை, உணவினை முழுங்க முடியாமல் தவிப்பது,சுவை மற்றும் மணம் கண்டறிய முடியாமை.

எப்படி கண்டுபிடிக்கலாம் : இந்த அறிகுறியைத் தாண்டி உங்களுக்கு தைராய்டு பாதிப்பு ஏற்ப்பட்டிருக்கிறது என்பதை ரத்தப்பரிசோதனை மூலமாக கண்டறியலாம். அவற்றின் அளவை பொருத்து ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என இரு வகைப் படுத்தலாம்.. பலருக்கு Goiter எனப்படும் தைராய்ட் அளவு பெரியதாகி கட்டியாகி இருக்கிறது. ஒரு சிலருக்கு தைராய்டு ப்ற்று நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. ரத்தத்தில் TSH அளவு அதிகமாக இருந்தால் அது ஹைப்போ தைராய்டு எனப்படும்.T3,T4 ன் அளவு அதிகமாக இருந்தால் ஹைப்பர் தைராய்டு என்கிறார்கள்.

பெண்களுக்கு பாதிப்பு அதிகம் : தைராய்டு ஹார்மோன் குறைந்த அளவு சுரக்கும்போது, நம் உடல் எப்பொழுதும் விட குறைந்த அளவு சக்தியினை மெதுவாகப் பயன்படுத்தும். இந்த நிலையினை ஹைப்போ தைராய்டிஸம் என்பர். எல்லா வயதினை சார்ந்தவர்களும் இந்த தைராய்டு நோய்களினால் பாதிக்கப்படக்கூடும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பாதிப்பு அதிகம்.. iodized உப்பு சேர்த்து கொள்ளுவது தைராய்டு குறைபாடுகள் ஒரு சிலவற்றை தவிர்க்க உதவும்.

10 1510314250 11

Related posts

உங்களுக்குதான் இந்த விஷயம்! அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறியாம்!

nathan

சிலருக்கு தோல் நோய் வந்து உயிரை எடுக்கும்… மன உளைச்சல் அதிகமாக இருக்கும். இதோ, உடனடி தீர்வு…..!!…

nathan

பெண்களே எலும்புகள் வலிமையோடு இருக்க இதெல்லாம் சாப்பிடுங்க…

nathan

தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல்

nathan

உடலில் நச்சுத் தன்மையை நீக்குங்கள்

nathan

பரிட்சையில் தோல்வியடையும் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை

nathan

கருத்த‍டை மாத்திரைகள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும் பழக்க‍ம் வழக்கம் ஆக்கி கொண்டீர்களா?

sangika

குழந்தை அளவுக்கு அதிகமா பால் குடிச்சிருகுனு எப்படி கண்டுபிடிக்கிறது?பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தெரிஞ்சிக்கங்க…அவசியம் தவிர்க்க வேண்டிய ஆபத்தான 7 பாட்டி வைத்தியங்கள்!!!

nathan