26.6 C
Chennai
Sunday, Dec 29, 2024
28 1509193667 1
மருத்துவ குறிப்பு

எல்லாத்தையும் பக்காவா நியாபகம் வச்சுக்க இப்டி பண்லாமே தெரியுமா!

அனைவருக்கும் வருகின்ற பொதுவான பிரச்சனைகளில் ஒன்று நியாபக சக்தி குறைபாடு. இதற்கு காரணம், மூளை நரம்புகள் போதிய சக்தியின்மையால் சோர்வடைவதே ஆகும். மனித மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை உணவில் கிடைக்கும் வைட்டமின்களைப் பொறுத்து இரசாயன மாற்றங்கள் ஏற்படுத்தியபடி இருக்கின்றன.

அனைவருக்கும் வருகின்ற பொதுவான பிரச்சனைகளில் ஒன்று நியாபக சக்தி குறைபாடு. இதற்கு காரணம், மூளை நரம்புகள் போதிய சக்தியின்மையால் சோர்வடைவதே ஆகும். மனித மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை உணவில் கிடைக்கும் வைட்டமின்களைப் பொறுத்து இரசாயன மாற்றங்கள் ஏற்படுத்தியபடி இருக்கின்றன.

நியாபக சக்தி குறைபாடுகளுக்கு சரியான உணவுகளை சாப்பிடாததும் ஒரு காரணம். நியாபக சக்தியை அதிகரிக்கவும் , மூளையை சுறுசுறுப்புடன் வைத்திருக்கவும் முறையான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஏன் உணவு? :
மூளை நன்கு செயல்பட வேண்டும் எனில் இனிப்பு மற்றும் மாவுச்சத்துப் பொருட்களில் உள்ள குளுகோஸில் இருந்துதான் தேவையான சக்தி தொடர்ந்து கிடைக்க வேண்டும்.இந்தச் சத்துணவில் குறைவு ஏற்படும் போது ஞாபக சக்தியிலும் சிக்கல் வந்துவிடுகிறது.
இது மட்டுமல்ல இரத்த ஓட்டம் தேவையான ஆக்ஸிஜனை மூளைக்கு விநியோகித்து புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதும் முக்கியமானது. தேவையான சத்துணவு கிடைக்காத போது மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைப்பது குறைந்த ஞாபகசக்தியில் குறைபாடு ஏற்படுகிறது.இதைத் தடுக்க சிறந்த உணவு முறையையே மருந்தைப்போல் பயன்படுத்தினால் புத்திக்கூர்மையும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

தண்ணீர் :
மூளையில் நான்கில் மூன்று பகுதி தண்ணீரினால் நிறைந்துள்ளது. நம் உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் மூளையின் செயல்பாடு குறைந்து மூளையில் வறட்சி ஏற்படும். இதனால் சின்ன சின்ன விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது கூட சிரமமானதாக இருக்கும்.

பால் பொருட்கள் : பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் அதிகமாக ப்ரோட்டீன், கால்சியம்,பொட்டாசியம் மற்றும் விட்டமின் டி இருக்கிறது, இவை நரம்பு மண்டலத்தை சீராக இயக்க உதவுகிறது.

வல்லாரைக் கீரை : வாரம் ஒரு முறை வல்லாரைக்கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளுங்கள். இதனை தினமும் பாலில் கலந்து குடித்தால் நினைவுத்திறனை அதிகரிக்க பெரிதும் உதவிடும்.

முட்டை : மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன். இது முட்டையில் அதிகமாக இருக்கிறது. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு , மூளை சுறுசுறுப்பாக இயங்க துணை நிற்கும்.

தானியங்கள் : விட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகமுள்ள தானிய வகைகளை எடுத்துக் கொள்வது உங்களது மூளை ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இது மூளைக்கு மட்டுமல்ல உடலில் எல்லா பாகங்களிலும் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் உடலில் எல்லா பாகங்களும் சுறுசுறுப்பாக இயங்கிடும்.

மீன் : மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டிற்கும் சிறந்தது. ஏனெனில் மூளையின் செயல்பாட்டிற்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மிகவும் முக்கியமானது. மேலும இது மூளைச் செல்களின் இயக்கத்தை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக ஹெர்ரிங், சால்மன், சூரை (Tuna), கானாங்கெளுத்தி, பொத்தல், நெத்தலி, மற்றும் மத்தி போன்றவை மிகவும் சிறந்தது. ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாம். இவை மூளையின் செல்களை ஊக்கப்படுத்திடும் பாலிஃபினாலுக்கு பெரிதும் உதவுகிறது.

க்ரீன் டீ : க்ரீன் டீயில் மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும், ஃபாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான மனநிலை மாறும்.

பெர்ரீ : பெர்ரிப் பழங்களில் குவர்செடின் என்னும் மூளைச் செல்களில் இயக்கத்தை அதிகரிக்கும் பொருள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆந்தோசையனின் என்னும் ஃபோட்டோ கெமிக்கல், அல்சீமியர் என்னும் ஞாபக மறதி நோயை தடுக்கும். அதிலும் சில பெர்ரிப் பழங்களான ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது.

நட்ஸ் : நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும் நல்லது.

மஞ்சள் : பல காலங்களாக மஞ்சள் சிறந்த மருத்துவ குணம் கொண்டவையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இருக்கும் தாது மூளை நரம்புகளுக்கு பெரிதும் துணை நிற்பவையாகும்.

உடற்பயிற்சி : உடற்பயிற்சி செய்வது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக மட்டுமல்ல மூளையின் துரித செயல்பாட்டிற்கும் உதவுகிறது. ஏரோபிக்ஸ் நடனப்பயிற்சி மேற்கொண்டால் பிடிஎன்எஃப் என்ற ஹார்மோன் செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடும்.

ப்ரோக்கோலி : தற்போது சமீப காலங்களாகத் தான் ப்ரோக்கோலி பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதில் sulfurophan அதிகமாக இருக்கிறது. இவை நம் உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்களை நீக்க பெரிதும் உதவுகிறது.

டார்க் சாக்லெட் : டார்க் சாக்லெட் இரத்தத்தை பெருக்குவதுடன், இரத்தம் உறைவதையும் தடுக்கும். அதிலும் இதை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால், தமனிகள் கடினமாகாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். இது மூளையையும் சிறப்பாக செயல் பட வைக்கின்றது. அதிலும் இவை மூளைக்கு சிந்திக்கும் திறனை வழங்குகின்றன. மேலும் வலிப்பு வராமல் காக்க டார்க் சாக்லெட் உண்ண வேண்டும். மூளைக்கு நல்ல ஆற்றலை வழங்கவும், சிந்திக்கும் திறனை வளர்க்கவும் டார்க் சாக்லெட் உதவுகின்றது. இதனை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டால் போதுமானது.

பாதாம் : பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் இது பயன்படுகிறது. தினமும் இரவில் பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும் வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இள வயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும்.

தக்காளி : வைட்டமின் ஏ, பி, சி, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து நிரம்பியிருக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லதான வைட்டமின் ஏ சத்தினை அதிக உணவுகளில் பெற முடியாது. அதேபோல் வைட்டமின் கே சத்தும் அரிதான ஒன்று. இந்த வைட்டமின் இரத்தக் கசிவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது. மூளை சுறுசுறுப்புடன் செயல்பட தக்காளி உதவுகிறது.28 1509193667 1

Related posts

கருவுற்ற தாய்மார்களுக்கான பயிற்சி வகுப்புகள்

nathan

குளித்து முடித்ததும் வியர்க்கிறதா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

தினமும் கழுத்து வலியால் கஷ்டப்படுறீங்களா?இதோ அற்புதமான எளிய தீர்வு!

nathan

மாதவிடாயின் போது பிறப்புறுப்பு அரிப்பு, ஈஸ்ட் தொற்று ஏற்படாமல் இருக்க

nathan

சூப்பர் டிப்ஸ்! நினைவுத் திறனை அதிகரிக்கும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள்…!

nathan

மார்பக புற்றுநோய்

nathan

பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!

nathan

அலர்ஜியை சமாளிப்பது எப்படி?

nathan

கர்ப்ப காலத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டா உயிருக்கு ஆபத்து இல்லாம எப்படி நிறுத்துவது?தெரிஞ்சிக்கங்க…

nathan