danruff 11 1510371815
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா பொடுகு, அரிப்பிலிருந்து நிரந்தரமாக விடுதலை தரும் பாட்டி வைத்தியங்கள்!!

குளிர்காலம் வந்தாலே வறட்சி சருமத்தில் மட்டுமல்ல கூந்தலில் மிக மோசமான விளைவுகளைத் தரும். பொடுகு, அரிப்பு உண்டாகும்.மிகவும் வறட்சியுடையவர்களுக்கு வெள்ளையாக செதில்கள் உதிரும், இந்த பாதிப்புகளால் தலைமுடி உதிர்தல், தாங்க முடியாத எரிச்சல் போன்றவை ஏற்படும்.

பொடுகுத் தொல்லைக்கு நிரந்தர தீர்வு என்பது நீங்கள் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்து வறட்சியில்லாமல் பாதுகாத்தால் மட்டுமே முடியும். கண்டிஷனர்அற்புதமாக உங்கள் கூந்தலை பாதுகாக்கும்.
கண்டிஷனர் கூந்தலுக்கு தேவையான போஷாக்கையும் ஊட்டச்சத்தையும் அளிக்கிறது. வாரம் ஒருமுறை கண்டிஷனர் பயன்படுத்தினால் பொடுகு வராமல் தடுக்கலாம்.

கண்டிஷனர் என்பது கடைகளில் விற்கும் ரசாயனம் மிகுந்த கண்டிஷனர் அல்ல. இயற்கையான கண்டிஷனர்கள் நம் கண் முன்னேயே இருக்கிறது. அவற்றை தவறாமல்பயன்படுத்தினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். பொடுகினைப் போக்கி, உங்கள் கூந்தலை வளரச் செய்யும் குறிப்புகளை இந்த கட்டுரையில் காணலாம்.

சர்க்கரை +எலுமிச்சை : பிரவுன் சர்க்கரையை பொடி செய்து அதனுட்ன எலுமிச்சை சாறை கலக்கவும். இந்த கலவையை ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் தலையை அலசுங்கள். ஒரே வாரத்தில் நல்ல பலன்களை தரும்.

உப்பு மற்றும் ஷாம்பு : உப்பினை ஷாம்புவுடன் கலந்து தலையில் தடவுங்கள். 5 நிமிடம் கழித்து தலையை அலசவும். ஷாம்பு பயன்படுத்தும்போதெல்லாம் உப்புடன் கலந்து பயன்படுத்தினால் பொடுகு மறைந்துவிடும்.

தேயிலை மர எண்ணெய் : அரை டம்ளர் நீரில் சில துளி தேயிலை மர எண்ணெயை கலந்து தலையில் தடவவும். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும். ஷாம்புவுட்ன தேயிலை மர எண்ணெயை கலந்து தலையில் போடலாம்.

சமையல் சோடா : சமையல் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசுங்கள். இவ்வாறு வாரம் 2 முறை செய்தால் பொடுகு காணாமல் போய்விடும். எப்போதும் உங்களை அண்டாது.

ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை : எலுமிச்சை சாறு அரை மூடி எடுத்து அதில் கால் கப் ஆலிவ் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கவும் அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள். நல்ல பலன் தரும் குறிப்பு இது.

ஆப்பிள் சைடர் வினிகர் : 1 கப் நீரில் 1 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து தலையில் த்டவவும். அரை மணி நேரம் ஊற விட்டு பின் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலசுங்கள்.

சமையல் சோடா மற்றும் எலுமிச்சை : சமையல் சோடாவில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவை உடனடியாக நல்ல பலனைத் தரும்.

வெள்ளை வினிகர் : வெள்ளை வினிகர் 1 ஸ்பூன் எடுத்து 1 கப் நீரில் கலந்து தலையில் த்டவி மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடத்தில் தலைமுடியை அலசவும். இந்த் குறிப்பு பொடுகிறகு விரைவில் நிவாரணம் தரும். முயற்சித்துப் பாருங்கள்.

கற்றாழை மற்றும் உப்பு : கற்றாழையில் ஜெல்லை பிரித்து அதனுடன் 1 ஸ்பூன் அளவு உப்பு கலந்து தலையில் தடவுங்கள். ஸ்கால்ப் முதல் நுனி வரை தடவவும். 1 மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும்.

முட்டை வெள்ளைக் கரு : முட்டையின் வெள்ளைக் கருவில் தேயிலை மர எண்ணெய் கலந்து , இந்த கலவையில் தலையில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசுங்கள். இது விரைவில் பலன் தரும்.

உப்பு மற்றும் எலுமிச்சை : 1 முழு எலுமிச்சைச் சாறு எடுத்து அதில் அரை கப் நீர் மற்றும் 1 ஸ்பூன் உப்பு கலந்து தலையில் தடவ வேண்டும். இந்த கலவையை அபடியே 20 நிமிடங்கள் தலையில் ஊற வைத்து பின் தலை முடியை ஷாம்பு கொண்டு அலசுங்கள்.

பட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் : பட்டைப் பொடியை 1 ஸ்பூன் எடுத்து அதில் கால் கப் ஆலிவ் எண்ணெய் கலந்து தலைமுடிக்கு தடவுங்கள். நன்றாக மசாஜ் செய்து வெந்நீரில் பிழிந்த டவலால் தலைமுடியை கவர் செய்துவிடவும். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள்.danruff 11 1510371815

Related posts

முடி அதிகம் கொட்டுதா? கிடுகிடுன்னு முடி வளருமாம்!

nathan

இப்படி முடி வெடிக்குதா? ஒரே நாள்ல சரியாக தேனை இப்படி செஞ்சு அப்ளை பண்ணுங்க…

nathan

பெண்களே உங்க முடி எலி வால் மாதிரி ஒல்லியா இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர இந்த பாட்டி வைத்தியத்தை முயன்று பாருங்கள்!

nathan

தேங்காய்ப்பால் ஸ்பிரே யூஸ் பண்ணுங்க. தேங்காய் எண்ணெய் தேய்க்க பிடிக்கலையா?

nathan

நேரான முடியை பெறவேண்டுமா?

nathan

எலி வால் போல கூந்தல் அசிங்கமா இருக்க? அப்ப இத செய்யுங்க ….

nathan

முடி வளர்ச்சியைத் தூண்டும் இயற்கை முறையில் செய்யப்படும் வைத்திய குறிப்புகள்

nathan

முடி கருப்பாக வீட்டிலேயே செய்யலாம் செம்பருத்தி எண்ணெய் – இயற்கை மருத்துவம்

nathan