வன்னி மரம், தமிழகத்தில் அரிதாகக் காணப்படும் ஒரு சிறப்புவாய்ந்த மரமாகும். மிகச்சிறிய இலைகளைக் கொண்ட முள் மரமான வன்னி மரம், நல்ல செழுமையான காய்களைக் கொண்டு வளரும், இலையுதிர் காலங்களில் இலைகள் உதிர்ந்து, வறண்ட கிளைகளோடு காணப்பட்டாலும், வசந்த காலத்தில் மீண்டும் செழுமையான இலைகள் துளிர்க்கும், அதிசய மரம். வறண்ட நிலத்திலும் பசுமையாக வளரும் இயல்புடைய வன்னி மரம், தமிழகத்தின் கரிசல் நிலப்பகுதி, வயல் தோட்டங்களில் தானே வளரும்.
தார் பாலைவன மாநிலம் என அழைக்கப்படும் இராஜஸ்தானிலும், சகாரா பாலைவன தேசங்கள் எனும் ஆப்பிரிக்க அரபு நாட்டு பாலைவனங்களிலும், பெரு மரங்களாக பசுமையாக வளர்வதால், வன்னி மரத்தை பாலைவனத் தங்கம் எனப் போற்றுகின்றனர்.
வன்னி மரத்தின் மலர்கள், காய், மரப்பட்டை அனைத்தும் மனிதருக்கு பெரும் பயன்கள் தரும் கற்பக மரம் போல விளங்கி, மனிதர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக விளங்குகிறது.
அதிசயம் செய்யும் வன்னி மரக்காற்று! முன்னோர் திருக்கோவில்களில் வைத்த மரங்கள் யாவும் தனிச்சிறப்பு மிக்கவையே, அந்த வகையில், அற்புத வளங்கள் நிறைந்த வன்னி மரத்தை சுற்றி வர, அதன் காற்று பட்டு, உடல் மனக் கோளாறுகள் யாவும் நீங்கும், வன்னி மரக்காற்றில் தொடர்ந்து இருக்கும் தன்மைகளால், சுவாசக் கோளாறுகள் சீராகி, இரத்தம் தூய்மையாகி உடல் ஆற்றல் மிக்கதாகும்.
குழந்தைப் பேறு உண்டாக வன்னி மரப்பட்டையை தண்ணீரில் இட்டு காய்ச்சி குடித்துவர, மழலைச் செல்வம் உண்டாக வாய்ப்பாகும், வன்னி இலை, காயங்களை உடனே ஆற்றும், வன்னி காய்களை தூளாக்கி சாப்பிட்டுவர, பெண்களின் மாதாந்திர பாதிப்புகள் விலகும், ஆண்களின் உயிரணுக்கள் வளமாகி, குழந்தைப்பேறு ஏற்படும். வன்னி மர இலைகளின் மருத்துவ பயன்கள்
காரிய வெற்றியடைய : வன்னி மர இலைகளை, வீடுகளில் பூஜையறையில், சட்டை பாக்கெட்களில் வைத்திருப்பது, காரிய வெற்றியடைய உதவும் என நம்பி வைத்திருப்பர், போரில் ஈடுபட செல்லும் வட நாட்டு வீரர்கள், போர்க்களம் புகுமுன், வன்னி மர இலைகளை பிரசாதமாக பெற்று செல்வர் என்பதை, சரித்திர நூல்களில் இருந்து அறிய முடிகிறது.
நரம்புத் தளர்ச்சி, பல்பாதிப்புகள் : வன்னி இலைகளை அரைத்து, காயங்களில் கட்டிவர, உடனே காயங்கள் ஆறிவிடும். இலைகளை சூடாக்கி, வாயை கொப்பளிக்க, பல் வலி பாதிப்புகள் நீங்கும், பருகி வர, நரம்பு தளர்ச்சி வியாதிகள் அகலும்.
கருச் சிதைவை தடுக்க : வன்னி மரத்தின் மலர்களைப் பறித்து, நிழலில் உலர வைத்து, பின்னர் தூளாக்கி, அதில் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் சாப்பிட்டு வர, அபார்சன் எனும் கருச்சிதைவு பாதிப்புகளை தடுத்து, கருவை பாதுகாக்கும் ஆற்றல் மிக்கது.
மார்புச் சளி கரைய : வன்னி மரக்காய்களை நிழலில் உலர்த்தி, பொடியாக்கி, தினமும் இருவேளை நீரில் கலந்து சாப்பிட்டுவர, பெண்களின் மாதாந்திர பாதிப்புகள் விலகும், அதிக மார்பு சளியால் அவதிப்படுவோர் வன்னிக்காய் பொடியை சாப்பிட்டுவர, சளி கரையும். ஆண்மைக்குறைவு பாதிப்பு உள்ளோர் வன்னிக்காய் பொடியை தினமும் சாப்பிட்டுவர, பாதிப்புகள் அகலும்.
வன்னி மரப்பட்டைகளின் மருத்துவ பயன்கள் வன்னி மரப்பட்டைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, குடிநீராக பருகிவர, மகப்பேறின்மை பாதிப்புகள் விலகி, கருவுறும் வாய்ப்புகள் அமையும், திருக்கோவில்களில் உள்ள வன்னி மரங்களை, குழந்தை வரம் வேண்டி சுற்றிவந்து, அதன் பட்டைகளை சிறிது எடுத்து, வீடுகளில் குடிநீராக காய்ச்சி பருகுவர்.
செரிமானக் கோளாறு வன்னி மரப்பட்டை உடல் செரிமான கோளாறுகளை சரிசெய்யும், அல்சர் பாதிப்புகளை சரியாக்கும், விஷக்கடிகளின் மேல், பட்டையை அரைத்து தடவிவர, வலி நீங்கும், உடல் தசைகளில் ஏற்படும் வீக்கம் கட்டிகளை கரைக்க, பட்டை பயன் தரும். லெப்ரசி எனும் தொழு வியாதி பாதிப்புகள் போக்கும் அருமருந்தாகிறது
சுகப்பிரசவம் தரும் வன்னி மரம். இன்றைய காலகட்டத்தில், சிசேரியன் எனும் ஆயுதப் பிரயோகம் இல்லாமல், மகப்பேறு காண்பது அரிதான ஒன்றாக இருக்கிறது. சில குடும்பத்தாரின் ஜோதிட மத ரீதியான நம்பிக்கையால், குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையைப் பெறவைக்க, அவர்களே சிசேரியன் சிகிச்சையை ஊக்குவித்தாலும், அதனால் உடல் மன நல பாதிப்புகளை அடைவது கர்ப்பிணிப் பெண்கள் தான். மேலும், ஆயுதப் பிரயோகத்தில், குழந்தைகளின் உடல் நலம் பாதிப்படையவும், பெண்களின் கருப்பை வளம் குன்றவும் வாய்ப்புகள் அதிகம்.
இதுபோன்ற செயற்கை பாதிப்புகளை தவிர்த்து, பெண்கள் அதிக சிரமம் இன்றி, இயற்கையான முறையில் மகவைப் பெற, அரிய மருந்தாக வன்னி மரப்பிசின் விளங்குகிறது. வன்னி மரப்பட்டைகளில் உண்டாகும் பிசினை சேகரித்து, நிழலில் உலர்த்தி பொடியாக்கி, பின்னர் அதில் சிறிதளவை எடுத்து தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து பருகி வர, பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும்.
உடலை வளமாக்கும் வன்னி மரக்காற்று! இயற்கையின் கருணை, உடல் நல பாதிப்புகளுக்கு தீர்வாக, மூலிகைகளையும் அவற்றை பக்குவப்படுத்தி மருந்தாகக் கொள்வதன் மூலம், மனித வியாதிகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் நின்றுவிடுவதில்லை. சில மூலிகைகள் இருக்குமிடம் சென்றாலே, அவற்றின் மூலம் நம்மிடம் உள்ள உடல் நலப் பாதிப்புகளுக்கு தீர்வாகிறது. இதனாலேயே, அடர்ந்த காடுகளில் செழித்து வளரும் பல்வேறு மூலிகைகளின், மூலிகைக் காற்று வீசும் மலைப்பிரதேசங்களின் வழியே, ஆன்மீகரீதியாகவோ, மன அமைதிக்காகவோ பாதயாத்திரை சென்றுவரும்போது, அந்த மூலிகைக் காற்று உடலில் பட, வியாதிகள் அகல வாய்ப்பாகிறது.
சுவாச பாதிப்புகள் : இதுபோல, வன்னி மர இலைகளையோ, பட்டையையோ எடுத்து மருந்தாக உபயோகிக்க வாய்ப்புகள் இல்லாமல் இருப்போர், தினமும், வன்னி மரத்தின் அருகே சற்று நேரம் அமர்ந்து வந்தால் போதும். அதிசயத் தன்மைகள் மிக்க வன்னிமரக்காற்று, சுவாச பாதிப்புகளை போக்கி, உடல் இன்னல்களை சரிசெய்து, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வை அளிக்கும்.