நீங்கள் கூடிய விரைவில் மணப்பெண் ஆகப் போகிறீர்கள் என்றால், திருமண நாளன்று மிக சிறப்பாகத் தோற்றமளிக்க வேண்டுமென்று நிச்சயமாக விரும்புவீர்கள். ஆனால் அந்த நாளுக்கு முன்னால் உங்கள் சருமத்தை சரியான வடிவமைப்புக்கு கொண்டு வருவது முற்றிலும் சவாலான ஒரு விஷயமாகும். திருமணத்திற்கு முன்பான சடங்கு சம்பிரதாய விழாக்களால் ஏற்படும் சோர்வினால் பல்வேறு அழகு நிலைய சிகிச்சைகளைப் பெற்றாலும் உங்கள் சருமம் பொலிவிழக்கக்கூடும். இங்கே தான் நமது பபாரம்பரிய சிகிச்சை முறைகளான உப்தான் அழகுக் குறிப்புகள் உங்களுக்குக் கை கொடுக்க வருகிறது.
உப்தான் என்பது அதன் இயற்கையான ஒளிரும் சருமத்தைத் தரும் மூலக்கூறுகளுக்காக பிரசித்தி பெற்று அறியப்படும் பாரம்பரிய அழகுக் குறிப்புகளாகும். இவற்றை பயன்படுத்துவதால் ஒளிவீசும் சருமத்தை நீங்கள் பெற முடியும். இதன் பல்வேறு நற்பயன்களால் உப்தான் அழகுக் குறிப்புகள் திருமணத்திற்கு முன் மணப்பெண்கள் தவறாமல் பின்பற்ற வேண்டிய அழகுக் குறிப்பாகப் கருதப்படுகிறது
விஷயத்தை எளிமையாக உங்களுக்கு தருவதற்காக நீங்கள் ஈடுபட மிகுந்த மதிப்புடைய உப்தான் அழகுக் குறிப்புகளின் பட்டியலை இங்கே தொகுத்துள்ளோம். இந்த மணப்பெண் உப்தான் அழகுக் குறிப்புகள் தயாரிப்பதற்கு மிக எளிதானது ஆனால் மந்திரம் போல செயல்படக்கூடியது.
சூரியன் முத்தமிட்டது போன்ற ஒளிரும் சருமத்தைப் பெற உங்கள் திருமண நாளுக்கு முன் இந்த அழகுக் குறிப்புகளைக் கொண்டு உங்கள் சருமத்திற்கு சிகிச்சை அளியுங்கள். இங்கே அத்தகைய சில அழகுக் குறிப்புகளை பார்வையிடுங்கள்:
பாதாம் எண்ணெய் + உலர்ந்த ஆரஞ்சு தோல் பொடி தேவையானப் பொருட்கள்: 1 டேபிள் ஸ்பூன் இனிப்பு பாதாம் எண்ணெய் 2 டீஸ்பூன் உலர்ந்த ஆரஞ்சு தோல் பொடி 3 முதல் 4 துளிகள் ஆளி விதை எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் பன்னீர்
பயன்படுத்துவது எப்படி: மேலே கூறப்பட்ட அனைத்து மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளுங்கள். இந்த அற்புதமான பலன்களைத் தரக்கூடிய கலவையை உங்கள் முகச் சருமம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவுங்கள். அதை வெதுவெதுப்பான நீரில் கழுவுவதற்கு முன்னால் 30 நிமிடங்கள் நன்கு ஊறவிடுங்கள்.
மஞ்சள் தூள் + பால் தேவையான பொருட்கள்: 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் ½ டீஸ்பூன் எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன் பாலாடை 2 முதல் 3 துளிகள் ரோஸ்மேரி நறுமண எண்ணெய்
பயன்படுத்துவது எப்படி: உப்தன் கலவையை தயாரிக்க இந்த அனைத்து மூலப்பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு கலந்து கொள்ளுங்கள். – உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதி முழுவதும் இந்தக் கலவையை படரவிடுங்கள். – இதன் மாயாஜாலம் சிறப்பாக வேலை செய்ய வேண்டுமென்றால் அதை வெதுவெதுப்பான நீரில் அலசுவதற்கு முன்னால் 30 நிமிடங்கள் சருமத்தில் ஊறவிடுங்கள்.
வாழைப்பழம் + தேன் 1 பழுத்த வாழைப்பழம் 2 டேபிள் ஸ்பூன் தேன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு 4 முதல் 5 சொட்டுகள் லாவண்டர் நறுமண எண்ணெய்
பயன்படுத்துவது எப்படி: அனைத்து மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளுங்கள். இந்த திறன் வாய்ந்த உப்தன் கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவுங்கள். இளஞ்சூடான நீரில் கழுவுவதற்கு முன்னால் 30 நிமிடங்கள் ஊறவிட்டு அதை அற்புதங்கள் நிகழ்த்த அனுமதியுங்கள்.
ஓட்ஸ் + தக்காளி சாறு தேவையானப் பொருட்கள்: 2 டீஸ்பூன் ஓட்ஸ் 2 முதல் 3 டேபிள் ஸ்பூன் தக்காளிச் சாறு 1 டீஸ்பூன் கரகரப்பான சர்க்கரை
பயன்படுத்துவது எப்படி: அனைத்து மூலப்பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் மாற்றி ஒன்றாகக் கலந்துக் கொள்ளுங்கள். செய்து முடித்த பிறகு உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுதும் பரவலாகத் தடவுங்கள். இந்தக் கலவையை வெதுவெதுப்பான நீரில் கழுவுவதற்கு முன்னால் 30 நிமிடங்கள் உங்கள் சருமத்தில் இருக்க விடுங்கள்.
கட்டித் தயிர் + கடலை மாவு தேவையானப் பொருட்கள்: 2 டேபிள் ஸ்பூன் கட்டித் தயிர் 1 ஸ்பூன் கடலை மாவு 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் ½ டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
பயன்படுத்துவது எப்படி: உப்தான் கலவையை தயாரிக்க ஒரு கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் கலந்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதி முழுவதும் தடவுங்கள். கலவை காயும் வரை அமைதியாக உட்கார்ந்து ஓய்வெடுங்கள். 20 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு அலசுங்கள்.
%