23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cover 31 1509451070
எடை குறைய

உடல் எடையை வேகமாக குறைக்க இலவங்கப்பட்டையை எப்படி பயன்படுத்துவது?முயன்று பாருங்கள்

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது அதற்கான செயல்களில் இறங்க வேண்டும். வெறும் டயட் மற்றும் உடற்பயிற்சிகள் மட்டும் செய்து கொண்டேயிருப்பதை விட சில ஸ்மார்ட் முயற்சிகளினால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் உடலின் கொழுப்பினை மட்டும் நீங்கச் செய்ய முடியும்.

அந்த ஸ்மார்ட் வொர்க்களில் ஒன்று உங்கள் அன்றாட உணவில் பட்டை சேர்ப்பது. எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் இலவங்கப்பட்டையையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.

சரி இப்போது உடல் எடையை குறைக்க பட்டையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

காலை எழுந்ததுமே :
சூடான நீரில் அரை டீஸ்ப்பூன் பட்டைத்தூள், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றும் அதே சமயம் உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவிடும்.
தேன், எலுமிச்சை மற்றும் வெதுவெதுப்பான நீர் ஆகியவை உங்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது, உங்கள் உடலின் நச்சுகளை சுத்தப் படுத்துதல் மற்றும் எடையை குறைகக்வும் உதவி செய்கிறது.

இலவங்கப்பட்டை தண்ணீர் : ஒரு கப் தண்ணீரை சூடாக்குங்கள், அது கொதிக்க ஆரம்பித்ததும் அதில் ஒரு ஸ்பூன் பட்டைத் தூள் போட வேண்டும். ஐந்து நிமிடம் வரை நன்றாக கொதிக்க வேண்டும். பட்டைத் தூளுக்கு பதிலாக பட்டையை அப்படியே கூட போடலாம் சாப்பாட்டிற்கு பின்னர் இதனை குடிக்கலாம். தினமும் தூங்குவதற்கு முன்னரும் குடிக்கலாம். இலவங்கப்பட்டை, செரிமானத்தை மேம்படுத்தி இன்சுலின் உற்பத்தியை ஒழுங்குப்படுத்தும், அதோடு கார்போஹைட்ரேட்டுகள் எனர்ஜியாக மாற்ற உதவுகிறது. மேலும் அது நீங்கள் சாப்பிட்ட உணவிலிருந்து சத்துக்களின் ஜீரணத்தை அதிகரிக்கிறது மற்றும் முழுமையாக உணரவும் பசியைக் குறைக்கவும் உதவி செய்கிறது.

காபி : காபி சேர்க்கும் போது ஒரு ஸ்பூன் காபி பவுடருன் அரை ஸ்பூன் பட்டைத்தூளையும் சேர்த்து காபி சேர்த்து குடிக்கலாம். இப்படி காபி தயாரிக்கும் போது அதிகான சர்க்கரையை சேர்க்காதீர்கள்.

பழங்கள் : பழங்கள் மற்றும் பழச்சாறு குடிக்கும் போது பட்டைத் தூளை தூவி சாப்பிடலாம். இவை சுவையை அதிகரிப்பதுடன் நியூட்டிரிசியன் சத்துக்களையும் அதிகரிக்கிறது. டயட் இருப்பவர்கள் சூப் மற்றும் ஜூஸ் சேர்த்து குடிப்பது வழக்கம் அத்துடன் இதனையும் சேர்த்தால் மிகவும் பலனளிக்ககூடியதாக இருக்கும்.

உணவு : நம்முடைய மசாலா உணவுகளில் பட்டை கண்டிப்பாக இடம் பெறும். கரம் மசாலா என்று சொல்லப்படுகிற மசாலா பொருட்களில் பட்டை கணிசமாக இடம் பெறும். அது சேர்ப்பதை தவிர்க்காமல் கண்டிப்பாக சேர்த்திடுங்கள். பட்டையில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியா தன்மை இரைப்பை குடலில் தங்கும் நச்சுப் பூச்சிகளை அழித்து இரைப்பை குடல் நோய்கள் வராமல் தடுக்கிறது. அதோடு தொப்பை வராமலும் தவிர்க்க முடிகிறது.

ஸ்மூத்தி : ஃப்ரூட் ஸ்மூத்திகளுக்கு பட்டைத்தூள் சேர்ப்பது சுவையை மட்டும் அதிகரிக்காமல் அத்துடன் உடல் எடையை குறைக்கவும் உதவிடும். வாழைப்பழ ஓட்ஸ் ஸ்மூத்தி செய்ய, ஒரு வாழைப்பத்தை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் அரைகப் பால்,மூன்று டீஸ்ப்பூன் தயிர் , ஒரு டீஸ்ப்பூன் சர்க்கரை மூன்றையும் கலந்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளுங்கள். கடைசியாக அதில் ஒரு டீஸ்பூன் பட்டைத்தூள் சேர்க்கவேண்டும். இது தனிச்சுவை கொடுப்பதுடன். வயிறுக்கு நிறைவான உணர்வைத் தருவதால் தேவையின்றி வேறு எந்த உணவும் சாப்பிடத்தோன்றாது.

தேநீர் : இலவங்கப் பட்டையில் இயற்கையிலேயே ஆன்டி- பாக்டீரியா தன்மை அடங்கி இருப்பதால், இது பாக்டீரியா சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது. வயிற்றிலிருக்கும் பூச்சியை அழிப்பதில் பட்டை முக்கிய இடம் வகிக்கிறது. பலருக்கும் வயிற்றில் பூச்சியிருப்பதால் தான் உணவு சரியாக செரிக்காமல் தொப்பையாய் சேர்கிறது. இதனைத் தவிர்க்க பட்டை தேநீர் கலந்து குடிக்கலாம். அதே போல இது ரத்தச் சர்க்கரையளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் பெரிதும் உதவுகிறது. பட்டைத் தேநீர் குடிப்பதால் சோர்வு என்பதே இல்லாது சுறுசுறுப்புடன் இயங்க முடியும்.

உணவு கெட்டுப் போகாது : இலவங்கப் பட்டையில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியா தன்மை பாக்டீரியாக்களை எளிதில் அண்டாமல் இருக்க உதவுகிறது. இதனால் பட்டையை உணவில் சேர்ப்பதன் மூலம் உணவு சீக்கிரம் கெட்டுப் போகாமல் வைத்திருக்க முடியும். அதே போல நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்டின் பங்கு மிகவும் அவசியம் இலவங்கப்பட்டையில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. அவை முறையாகவும் ஆரோக்கியமாகவும் உடலை பராமரிக்க உதவிடும்.

ஓட்ஸ் : காலையில் சாப்பிடும் உணவுகளில் ஓட்ஸ் தூளை ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள்.ஓட்ஸ் சாப்பிடும் போது பட்டைத் தூள் சேர்ப்பதால் அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படும். அதோடு உணவும் எளிதாக ஜீரணமாகும் என்பதால் சாப்பிடும் உணவு அப்படியே தங்கி பாதிப்பை ஏற்படுத்திடுமே என்று பயப்படத் தேவையில்லை. உணவுக்கட்டுப்பாட்டுடன் இருக்கவும், எடையைக் குறைக்கவும் பட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நெய் : சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய், அரை டீஸ்ப்பூன் பட்டைத் தூள் மற்றும் அரை டீஸ்ப்பூன் உப்பு சேர்த்து சாப்பிடலாம். இதனை சூடாக இருக்கும் சாதத்தில் மட்டுமே கலந்து சாப்பிட வேண்டும். ஆறிப்போன சாதத்தில் கலக்க கூடாது.

cover 31 1509451070

Related posts

உடல் எடையை குறைக்க தினமும் சாப்பிட வேண்டிய சில இந்திய உணவுகள்!!!

nathan

உங்கள் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் இதுதான்!

sangika

வெங்காயம் பயன்படுத்தி எடை இழப்பதற்கு 2 பயனுள்ள வழிகள்

nathan

உயிர்க்கொல்லிகளின் நுழைவாசல் உடல்பருமன். தவிர்க்க உணவுகள், வழிமுறைகள்!

nathan

உடல் எடை குறைய எளிய மருத்துவம்

nathan

எகிறுது எடை… என்னதான் செய்வது?

nathan

உங்களுக்கு தெரியுமா எடையைக் குறைக்க இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

வயிற்று பகுதியை வலுவடையச்செய்யும் சேர் பயிற்சி

nathan

உணவைத் தவிர்த்தாலும் எடை அதிகரிக்க என்ன காரணம்?

nathan