23.7 C
Chennai
Monday, Dec 23, 2024
7 mistakes you make when washing your face 4
முகப் பராமரிப்பு

நீங்கள் முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..?இதை படிங்க…

முகமானது அழகாக இருக்க, அடிக்கடி முகத்தை கழுவுவோம். ஆனால் அவ்வாறு முகத்தை கழுவும் போது எத்தனை பேர் சரியாக கழுவுகிறோம்? மேலும் சிலர் முகத்தில் இருக்கும் அழுக்குகள் போக வேண்டும் என்பதற்காக தேய்த்து கழுவுவார்கள். அவ்வாறு செய்து, முகத்தை முறையாக, மென்மையாக கழுவவில்லை என்றால் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் தான் அதிகமாகும். ஆகவே அத்தகையது வராமல், மென்மையாக இருக்க முகத்தில் இருக்கும் இறந்த செல்களை, அழுக்குகளை, கிருமிகளை நன்கு கழுவ, ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அதைப் பின்பற்றினால் முகத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம். அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

கிளின்சர் : முகத்தை கழுவுவதற்கு முன்னால், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு சிறிது காட்டனை எடுத்து, கிளின்சரில் நனைத்துக் கொண்டு, முகத்தை நன்கு துடைத்து விட வேண்டும். ஆனால் அப்படி கிளின்சர் பயன்படுத்தும் போது, சருமத்திற்கு ஏற்றதாக பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, வறண்ட சருமம் உள்ளவர்கள் கிரீம் போன்று இருக்கும் கிளின்சரைப் பயன்படுத்த வேண்டும். அதுவே எண்ணெய் சருமம் உள்ளவர்கள், வழுவழுப்பாக இருக்கும் கிளின்சரை பயன்படுத்த வேண்டும். அத்தகைய கிளின்சரை தினத்திற்கு 1 அல்லது 2 முறை பயன்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு மேல் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது முகத்தில் இயற்கையாக இருக்கும் எண்ணெயையும் அகற்றிவிடும்.

தண்ணீர் : எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். அதனால் முகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் குழிகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கிவிடும். பின் கழுவியதும் சுத்தமான துணியால் முகத்தை துடைத்துவிட வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் எளிதில் போய்விடும்.

ஃபேஸ் வாஷ் : இதுவும் முகத்தை கழுவ பயன்படுத்தப்படும் பொருட்களுள் ஒன்று. அவ்வாறு கடைகளில் விற்கும் ஃபேஸ் வாஷ் வாங்கும் போது ஆல்கலைன் இருக்கும் பொருட்களை வாங்க வேண்டாம். மேலும் குளிக்கும் போது பயன்படுத்தியப் பின், அடிக்கடி முகத்தை கழுவும் போது முகத்திற்கு சோப்புகளை பயன்படுத்தக் கூடாது. அப்போது முகத்தை தண்ணீரால் நனைத்து, பின் அந்த ஃபேஸ் வாஷ் கிரீம்களை பயன்படுத்தி முகத்திற்கு தடவி, மசாஜ் போல் செய்து முகத்தை கழுவ வேண்டும். பின் முகத்தை சுத்தமாக துடைத்து விட வேண்டும். முக்கியமாக மசாஜ் செய்யும் போது 1-2 நிமிடம் வரை செய்யக்கூடாது.

ஃபேசியல் ஸ்கரப் : முகத்திற்கு ஸ்கரப் செய்யும் போது அனைவரும் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்க வேண்டும் என்பதற்காக மிகவும் கடினமாக, நீண்ட நேரம் செய்வர். ஆனால் அது மிகவும் தவறான செயல். அவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கும் திசுக்கள் பாதிக்கப்படும். ஆகவே அவ்வாறு முகத்திற்கு ஸ்கரப் செய்யும் போது, மிகவும் மென்மையாக 3-4 நிமிடங்களே செய்ய வேண்டும். அதுவும் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையே செய்ய வேண்டும். பின் கழுவி விட வேண்டும். இவ்வாறெல்லாம் முகத்தை கழுவினால் முகமானது அழகாக, பொலிவோடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.7 mistakes you make when washing your face 4

 

 

Related posts

முகப்பரு, சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பூசணிக்காய் ஃபேஸ் பேக்

nathan

சூப்பர் டிப்ஸ்! உங்கள் முகம் பளபளக்க வேண்டுமா? இதோ பத்து பயனுள்ள அழகு குறிப்புகள்

nathan

முகத்திற்கான பயிற்சி

nathan

ஸ்கின் டானிக்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… முகத்தில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?

nathan

முல்தானி மெட்டியால் கிடைக்கும் அழகு நன்மைகள்

nathan

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் சில இயற்கை வழிகள்

nathan

முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி,

nathan

உங்கள் முகத்திற்கு எந்த வகையான புருவம் ஏற்றதாக இருக்கும்?

nathan