29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
cover 15 1510720181
மருத்துவ குறிப்பு

ஆஸ்ப்ரின் மாத்திரையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?அப்ப இத படிங்க!

வலியிலிருந்து உடனடி நிவாரணம் பெற எல்லாரும் கை மருத்துவம் ஏதேனும் ஒன்றினை கடைபிடிப்பதை வழக்கமாக வைத்திருப்போம். வீட்டு மருத்துவம், மாத்திரை ,மசாஜ் என்று ஏதேனும் ஒரு கைப் பக்குவத்தை கையில் வைத்திருப்பார்கள்.
இவற்றில் மாத்திரையில் வலி நிவாரணியாக முக்கியப்பங்காற்றுவது ஆஸ்ப்ரின் என்ற மாத்திரை தான்.முக்கியமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் நோயாளிகளுக்கு இது மிகச்சிறந்த ஆபத்பாந்தவனாக இருக்கிறது. மாரடைப்பு ஏற்பட்டவர்கள் முதலுதவியாக கையில் இந்த மாத்திரை அவசியம் வைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்வார்கள்.

இதனை மருத்துவரின் ஆலோசனைப்படு மட்டுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும்.இதனை அதிகப்படியாக எடுத்துக் கொண்டால் வலி,வீக்கம்,காய்ச்சல்,தலைவலி போன்றவற்றை சீராக்கும். இது நம் உடலில் செல்லும் ரத்தத்தின் அடர்த்தியை குறைப்பதால் ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுவதை தடுத்திடும்.

உலகம் முழுவதுமே இந்த மாத்திரையை பயன்படுத்தி வருகிறார்கள். நீங்களும் அதனை பயன்படுத்திக் கொண்டிருந்தால் அதனைப் பற்றிய சில பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்

தலைவலி :
ஆஸ்பிரினின் முதல் நல்ல விஷயம் என்ன தெரியுமா? அது தலை வலியை உடனடியாக போக்கிடும். தலைவலி உடனே நிற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை சாப்பிடலாம்.

காய்ச்சல் :
ஆஸ்ப்ரின் மாத்திரைக்கு காய்ச்சலை குணப்படுத்தும் ஆற்றலும் உண்டு. காய்ச்சல் வரும் அறிகுறி தெரிந்தாலோ அல்லது காய்ச்சலுடன் கூடிய தலைவலி இருந்தால் ஆஸ்ப்ரின் மாத்திரை சாப்பிடலாம். அதீத களைப்பினால் வரக்கூடிய காய்சலை இது குறைத்திடும்.

கல்லீரல் :
ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வது கல்லீரல் பாதிப்பிலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.குறிப்பாக மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நல்ல பலனை கொடுக்கும்.

புற்றுநோய் : எல்லாரையும் அச்சுறுத்தும் ஒரு நோயாக புற்றுநோய் இருக்கிறது. நோயின் தன்மை அதன் பாதிப்புகளை விட, அதற்கு மருந்தில்லை மற்றும் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போதே சந்திக்க கூடிய பல்வேறு பிரச்சனைகளும் தான் முக்கிய காரணியாக இருக்கிறது. ஆஸ்பிரின் நம் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்சியை தடுத்திடும். இதனால் புற்றுநோய் பாதிப்பிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும்.

சருமம் : ஆம்,ஆஸ்பிரின் உடல் ஆரோக்கியத்தில் மட்டுமல்லசருமத்திற்கும் பயன்படுகிறது. சருமத்தில் இருக்கும் கரும்புள்ளியை போக்க ஆஸ்பிரின் மாத்திரியை பயன்படுத்தலாம். இதிலிருக்கும் சாலிசைலிக் அமிலம் தான் கரும்புள்ளியை போக்க உதவுகிறது. ஆஸ்பிரின் மாத்திரையை பொடி செய்து அதனை தண்ணீரில் குழைத்து அப்படியே முகத்தில் பூசலாம்.

பொடுகு : ஆஸ்பிரினை தலைமுடிக்கும் பயன்படுத்தலாம் தெரியுமா? ஆம், பொடுகுத் தொல்லை இருக்கிறவர்களுக்கு இது சிறந்த பலனை கொடுக்கிறது ஆஸ்பிரினை பொடித்து தண்ணீருடன் கலந்து தலைமுழுவதும் தேய்த்திடுங்கள் அரை மணி நேரம் ஊறிய பின்பு கழுவிடலாம்.

சிறிய பாதிப்புகள் : ஆஸ்பிரினை தொடர்ந்து எடுப்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று பார்க்கலாம். நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாத சின்ன சின்ன பாதிப்புகள் முதலில் தோன்றிடும். இது முதலில் ஆரம்ப நிலை தான். அதீத சோர்வு,நா வறட்சி, வயிற்று வலி, செரிமானப்பிரச்சனை,தூங்குவதில் சிரமம் ஏற்படுதல், போன்றவை ஏற்படும். இது தொடரும் பட்சத்தில் மற்ற கை மருத்துவத்தை கடைபிடிப்பதற்கு பதிலாக உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியமாகும்.

கிட்னி பாதிப்பு : ஆஸ்ப்ரினை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் வழக்கமாக செயல்படுகிற கிட்னி பாதிக்கப்படும். இது கிட்னியின் ரத்த ஓட்டத்தை குறைக்கச் செய்திடும். இதனால் ஆஸ்பிரினை தொடர்ந்து எடுப்பவர்களுக்கு கிட்னி ஃபெயிலியர் ஏற்படுவதற்கு அதீத வாய்புண்டு.

மெட்டபாலிசம்: உடலின் மெட்டபாலிசம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புண்டு. இதனை தொடர்ந்து எடுப்பதால் உடலில் தண்ணீர் சத்து குறைந்து அதீத தாகம் ஏற்படும்.ஆஸ்பிரின் தொடர்சியாக எடுத்துக் கொள்கிறவர்கள் கண்டிப்பாக ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

கவனம் : மருத்துவர் உங்களுக்கு ஆஸ்பிரின் மாத்திரையை பரிந்துரை செய்தால் இதற்கு முன்னால் உங்களுக்கு ஏதேனும் உடல் நல பாதிப்பு மற்றும் அலர்ஜி இருந்தால் அதைப்பற்றி தெளிவாக சொல்லிடுங்கள்.கர்ப்பமாக இருப்பது அல்லது தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தாலும் மருத்துவரிடம் முன் கூட்டியே சொல்ல வேண்டும். ஆஸ்பிரின் எடுத்துக் கொள்கிறவர்கள் கண்டிப்பாக மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்.

சர்க்கரை நோய் : ஆஸ்பிரினை அதிகளவு எடுத்துக் கொண்டால் அது நம் உடலில் உள்ள ரத்தச் சர்க்கரையளவை குறைத்திடும்.இது இன்ஸுலின் அளவையும் மாற்றுவதால் சர்க்கரை நோய் இருந்தாலும் மருத்துவரிடம் நீங்கள் சொல்ல வேண்டும்.

அறுவை சிகிச்சை : உங்களுக்கு ஏதேனும் அறுவை சிகிச்சை நடத்தப்பட இருந்தால் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஆஸ்பிரின் தொடர்வதை நிறுத்திட வேண்டும். எடுத்துக் கொள்ளும் அளவினை உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெளிவு பெற வேண்டும். ரூட் கேனால் செய்வதாக இருந்தால் கூட மருத்துவரிடம் நீங்கள் இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை சொல்ல வேண்டும்.

மூச்சுப் பிரச்சனை : நீண்ட நாட்களாக மூச்சு விடுவதில் சிரமம் உடையவர்கள். ஆஸ்துமா அல்லது ஏதேனும் அலர்ஜி இருந்தால் முன்னாடியே மருத்துவரிடம் சொல்வது நல்லது. ஆஸ்பிரின் தொடர்ந்து எடுப்பதால் இந்த பாதிப்புகளை அதிகப்படுத்தும் என்பதால் தகுந்த மருத்து ஆலோசனை பெறுவது நல்லது.

கர்ப்பம் : கர்ப்பமான பெண்கள் தொடர்ந்து 300மில்லி கிராமுக்கும் கூடுதலாக ஆஸ்பிரின் எடுத்துக் கொண்டால் அது பாதிப்பை உண்டாக்கும். மூன்றாவது ட்ரைம்ஸ்டரில் இதனை தொடர்ந்தால் அது குழந்தையையும் தாயையும் பாதிக்கும். அதே போல ஆஸ்பிரினில் இருக்கும் acetylsalicylic என்ற அமிலம் தாய்ப்பாலுடன் சேர்ந்து குழந்தைக்கும் சென்றடையும் என்பதால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் இதனைத் தவிர்ப்பது அவசியமாகும்.cover 15 1510720181

Related posts

தெரிஞ்சிக்கங்க…ச ர்க்கரை நோ ய் முதல் பு ற்றுநோ ய் வரை.. தெ றித்து ஓ ட வி டும் கருஞ்சீரகம்…!

nathan

கணவன் – மனைவியின் குணங்களே உறவை வலுவாக்கும்

nathan

“எத்தனை நாளுக்கு பிரஷ்ஷை பயன்படுத்துவது’

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… வயிற்று வலிக்கான சில வீட்டு சிகிச்சைகள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பக புற்றுநோய் ஏற்பட இதுவும் முக்கிய காரணம்

nathan

கொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்!!!

nathan

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய காபி குடிப்பதை கைவிடுங்கள்

nathan

கால் மேல் கால் போட்டு உட்காருவதால் இவ்வளவு சிக்கல்களா?

nathan

சிறுநீர் பரிசோதனை செய்யப் போகிறீர்களா?

nathan