23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
21 1508569504 3
எடை குறைய

உடல் எடை குறைக்க நீங்க செய்ய வேண்டியது இது மட்டும் தான்!இதை முயன்று பாருங்கள்

உடல் எடையை குறைப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அதிலும் சரியான டயட் மற்றும் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவை பெரிதும் உதவும். இருப்பினும், உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால், விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்ற தவறான வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது. ஏனெனில் சிலர் பழைய உடையை அணியும் அளவில் எடையை குறைக்க வேண்டும் என்று இந்த மாதிரியான முறையை பின்பற்றுவார்கள். எனவே இந்த மாதிரியான முறையை பின்பற்றினால், நிச்சயம் உடல் ஆரோக்கியமற்றதாகிவிடும்.

ஆகவே உடல் எடையை குறைக்க வேண்டுமெனில், முதலில் நாம் நினைக்க வேண்டியது, உடல் எடை மெதுவாக குறைந்தால் போதுமானது என்று நினைத்து, உடல் எடையை குறைக்க முறையான விஷயங்களை, சரியாக மேற்கொண்டு வர வேண்டும். இப்போது உடல் எடையை குறைப்பதற்கான வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

டயட் உடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவானது குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவானது குறையும். இதற்கான உணவை தவிர்க்கவும் கூடாது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். உதாரணமாக, தினமும் 2 கப் சாதம் சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க 1 கப் சாப்பிட வேண்டும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள் சாதாரணமான நேரத்தில் வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிட வேண்டும். அதிலும் சாப்பிடும் நேரங்களைத் தவிர்த்து, பசி ஏற்பட்டால், அப்போது வெள்ளரிக்காய், தக்காளி, ப்ராக்கோலி, வெங்காயம் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. பழங்கள என்றால் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

உடற்பயிற்சி உடலை ஒல்லியாக்குவதற்கு செய்யும் செயல்களில் உடற்பயிற்சியும் ஒன்று. அதிலும் அத்தகைய உடற்பயிற்சியை ஜிம்மிற்கு சென்று செய்யும் போது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்து வெளியேறிவிடும். முக்கியமாக அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை தினமும் 30-45 நிமிடம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் நன்கு சிக்கென்று விரைவில் மாறிவிடும்.

எலுமிச்சை, தேன் சுடு நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பது, உடல் எடையை குறைக்க உதவும் ஒரு ஆரோக்கியமான பானம். இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டிருக்கும், எலுமிச்சையில் உள்ள ஆசிட்டானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இதில் இருக்கும் தேன், எடையை குறைக்க பெரிதும் உதவும். ஆகவே இந்த ஜூஸை தினமும் 3-4 முறை, சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும்.

உப்பு உப்பை அதிகமாக சாப்பிட்டால், உடலில் தண்ணீர் சத்து குறையும். எனவே உணவை உண்ட பின்பு, அளவுக்கு அதிகமான அளவில் தண்ணீர் குடித்து, பின் தொப்பை பெரிதாக காணப்படும். எனவே உணவில் உப்பை அதிகமாக சேர்க்காமல், அதனை குறைப்பதோடு, செயற்கை முறையிலான இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் செயற்கை இனிப்புகளில் கலோரிகள் அதிகமாக இருக்கும்.

தண்ணீர் உடலில் உள்ள தொப்பையை குறைப்பதற்காக செய்யும் செயல்களில் இறுதியானவை, தண்ணீர் அதிகமாக குடிப்பது தான். இதனால் வயிறு நிறைவதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்கும்.

சாப்பிட்ட முன் எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள்.சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி. குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.

சாப்பிடும் முறை 3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள்.அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை.எல்லோருடைய மெட்டபாலிசமும் ஒரே மாதிரி இருக்காது.

இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும்.அதனால் தான் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை சிறிய உணவாக உண்ண சொல்லுகிறார்கள். எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள்.அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக,நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.

கொள்ளு சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும்.

வெள்ளை பொருட்கள் டயட்டில் வெள்ளையாக இருப்பவற்றை, குறைந்த அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்காரை, உப்பு, சாதம், பால், தயிர் போன்றவற்றின் அளவை குறைத்து கொள்ள வேண்டியது அவசியம்.

தவிர்க்கவும் 1. பட்டினிக் கிடத்தல் கூடாது. 2. அதிக நொறுக்குத் தீனிகள் கூடாது. 3. உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உட்கொள்ளுதலைத் தவிர்க்கவும் 4. இனிப்புகள், சர்க்கரை வகைகளை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.

முக்கியத்துவம்: 1. எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 2. முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளைப் பகுதிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் 3. பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்களை குடிக்க கூடாது. 4. தினமும் பழங்கள் உட்கொள்ளலாம் ( 2-லிருந்து 4 வரை)

ஆரோக்கியத்திற்கு: 1. இரவு உணவுடன் அவரை, பீன்ஸ், கேரட், கோஸ், காலி ஃப்ளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 200 கிராம் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.

2. 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப் பயறு, பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

3. கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.

4. கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்தல் மிக நன்று. பாலில் கூட குறைந்த கொழுப்புச் சத்து உள்ள ‘டோன்டு மில்க்’ வகைகளையே பயன்படுத்துங்கள்.

5. அசைவம் விரும்புபவர்கள் தந்தூரி வகைகளையே உட்கொள்வீர். சைனீஸ், இந்தியன் வகை குழம்புகள் வேண்டாம்.21 1508569504 3

Related posts

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை சட்டென குறைக்க, பழங்காலத்தில் சித்தர்கள் இவற்றைதான் சாப்பிட்டார்களாம்…!

nathan

ஒரு மாதத்தில் தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

nathan

பெண்களின் உடல் எடை அதிகரிக்க அரிசி உணவு காரணமா?

nathan

மெலிந்த உடல் பருக்க – தந்த ரோகம் – பல்பொடி –

nathan

குண்டாக இருக்கிறீங்களா நீங்கள்.? இனி கவலை வேண்டாம்.!

nathan

தட்டையான வயிற்றைப் பெற உதவும் டாப் 5 உணவுகள்!

nathan

வாழைத்தண்டை ஜூஸாக்கிக் குடித்தால் இத்தனை நன்மைகளாம்!…

sangika

சில நாட்களிலேயே பல மடங்கு நிறையை குறைக்க சிறந்த வழி!…

sangika

பேலியோ டயட் என்றால் என்ன?

nathan