29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
12 1510456288 litchy
மருத்துவ குறிப்பு

கருவளத்தை அதிகரிக்க மனைவிமார்கள் குடிக்கவேண்டிய அபூர்வ மூலிகை லிட்சி இலைச் சாறு!!முயன்று பாருங்கள்

விளச்சி மரம் என்று அழைக்கப்படும் விழுதி மரங்கள், சீனத்தைத் தாயகமாகக் கொண்ட வெப்ப மண்டல மரங்கள் என்று இன்றைய அறிவியல் உரைத்தாலும்,

இவை, சைவ சமயக்குரவர் நால்வர் காலத்தின் முன்பிருந்தே, தமிழகத்தில் இருந்து வரும், அரிய மூலிகை நன்மைகள் கொண்ட ஒரு தெய்வீக மரமாகும்.
தனித் தனியான இலைகளையும், இள வெண்ணிற மலர்களையும், சிவப்பு வண்ணக் கனிகளையும் கொண்ட விழுதி மரம், சிறு செடி வகையைச் சேர்ந்ததாகும்.
விழுதி மரத்தின் கனிகள் சிவந்த நிறத்தில், சுவையாக இருக்கும் மேலும்,இதன் நறுமணம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த காரணங்களுக்காக, இன்று உலகின்
பல இடங்களில் நறுமணத்துக்காக வளர்க்கப்படுகின்றன, விழுதி மரங்கள்.
சித்த மருத்துவத்தில் உயர்வான குணங்களைக் கொண்ட மூலிகை மரமாகக் கருதப்படும் விழுதி மரம், திருக்கோவில்களில் தல மரமெனப் பாதுகாக்கப்படும்
அரிய மரங்களில் ஒன்றாக, விளங்குகிறது.

கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் வழியில் உள்ள,திருவீழிமிழலை எனும் ஊரிலுள்ள, புகழ்பெற்ற சிவன் கோவிலின் தல மரமாகத் திகழ்கிறது. இலை, காய் மற்றும் வேர்கள் மூலம், அதிக மருத்துவ பலன்கள் தரும் விழுதி மரங்கள். பொதுவாக, வாத வியாதிகளைப் போக்கக் கூடியது, வீக்கங்கள் கட்டிகளை

கரைக்கும் தன்மை மிக்கது.குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் நிலையை மாற்றும் விழுதி இலைகள்! சில பெண்களுக்கு, திருமணம் ஆகியும், குழந்தை பெற இயலாத பாதிப்புகள் உண்டாகி, சமூகத்திலும், மன ரீதியிலும் அதிக பாதிப்புகளை அடைந்து இருப்பர். சிலர் மிக அதிகம் செலவு பிடிக்கும் நவீன மருத்துவ பரிசோதனைகள் செய்து, அதில் கருப்பையில் உண்டாகும் கரு முட்டைகளின் அளவு குறைந்திருப்பதால், அல்லது உருவாகாததால், குழந்தை பெற முடியாத நிலையில் உள்ளார்கள் என்பதை அறிந்து,அந்தக் குறையைப் போக்க, மேலை மருந்துகள் நிறைய சாப்பிட்டு வருவர். இருப்பினும் அனைவருக்கும் பலன்கள் கிடைப்பது அரிதாகவே இருக்கும். அப்படி பாதிப்புகள் உள்ளவர்கள், மனதாலும், உடலாலும் வேதனைப் பட்டவர்கள், ஒரு பைசா கூட செலவு செய்யாமல், தாய்மையை அடையும் வழியை,விழுதி உண்டாக்கும்.

கருவளம் பெற : விழுதி இலைகளை நன்கு அலசி சாறெடுத்து, அதில் கால் தம்ளர் அளவு நல்லெண்ணை சேர்த்து தினமும் பருகி வர, கரு முட்டைகளின் உருவாக்கம்அ திகரித்து, விரைவில் கருவுற்று, நலமுடன் மகவீனும் தன்மை ஏற்படும்.

வீக்கம் போக்க: மூட்டுகளில் நீர் கோர்த்துக்கொண்டு வலி, வீக்கம் ஏற்பட்டு துன்புறுபவர்கள் எல்லாம்,சிறிது விழுதி இலைகள், சில மிளகுகளை எடுத்து தூளாக்கி, பூண்டு சில பற்கள், சீரகம் சிறிது எடுத்துக்கொண்டு, விளக்கெண்ணையில் வதக்கி தாளித்து, இரசம் போல உணவில் சேர்த்து சாப்பிட்டு வர, மூட்டுகளில் சேர்ந்த நீர் வடிந்து, உடல் வலிகள் நீங்கும்.

சளி காய்ச்சல் போக்கும் விழுதி இலைகள்: கபம் எனும் சளி, இருமல் ஜுரம் போன்ற பாதிப்புகள் விலக, விழுதி இலைகளை அரைத்து, சாறெடுத்து, அதை நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி, தலையில் தடவி குளித்து வர, இருமல் ஜுரம் போன்ற பாதிப்புகள் அகன்று விடும். அது மட்டுமல்ல, உடலில் உள்ள சகல வியாதிகளையும் சரியாக்கி விடும் தன்மை படைத்தது, இந்த விழுதி எண்ணைச்சாறு என்கின்றன சித்த நூல்கள்.

பல் வலி, இரத்தக் கசிவு பாதிப்புகள் போக்க : பல்வலி, பல் ஈறுகளில் இரத்தம் வடிதல் போன்ற பல் சம்பந்தமான பாதிப்புகள் நீங்க, சில விழுதி இலைகளை நன்கு அலசி, தண்ணீரில் இட்டு சுண்டக் காய்ச்சி, பிறகு ஆற வைத்து, அந்த நீரைக் கொண்டு, வாயை கொப்புளித்து வர, பல் வலி, ஈறுகளில் ஏற்படும் இரத்தம் வடிதல் போன்ற அனைத்து பல் தொடர்பான பாதிப்புகள் நீங்கி விடும்.

உடலை பாதிக்கும் குடற்புழுக்களை அகற்ற: குழந்தைகள் சிலருக்கு எவ்வளவு நல்ல உணவுகள் சாப்பிட்டாலும், உடல் தேறாமல். இளைத்தும், சோர்ந்தும் காணப்படுவர். அவர்களின் அந்த நிலைக்குக் காரணமானவை, வயிற்றில் உள்ள புழுக்கள், இவற்றை அழிக்க, விழுதி இலைகளை அரைத்து, சாறெடுத்து, தேனுடன் கலந்து தினமும் இரவில் பருகி வர, புழுக்கள் விரைவில் அழிந்து, உடல் தேறி, பொலிவாகும்.

ஆறாத காயங்கள் ஆற : அழிஞ்சில் எனும் மூலிகையின் வேருடன், விழுதி வேரை ஒரே அளவில் எடுத்துக் கொண்டு அவற்றை சிறு துண்டுகளாக வெட்டிச் சேர்த்து, சில நாட்கள் நிழலில் உலர்த்தி, மண் பானையில் போட்டு குழித்தைலம் எனும் முறையில் தயாரித்து, புரையோடி இருக்கும் காயத்தில் தடவி, மெல்லிய துணியால் கட்டு கட்டிவர, புரையோடியிருந்த ஆறாத காயங்கள் எல்லாம், விரைவில் ஆறி விடும்.

குழித்தைலம் செய்முறை: குழித்தைலம் என்பது, தோட்டத்தில் இரண்டடி ஆழத்தில் ஒரு குழியை வெட்டி, அதில் வாயகன்ற ஒரு சிறிய பீங்கான் அல்லது மண் பாத்திரத்தை வைத்து, அதன் மேல் புறம், அழிஞ்சில் வேர், விழுதி வேர் சேர்ந்த மண் பானையை வைக்க வேண்டும். மண் பானையின் அடிப்பகுதியில், சில ஓட்டைகள் இட வேண்டும். அந்த ஓட்டைகள் கீழே உள்ள பீங்கான் பாத்திரத்தின் உட்புறம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீரியமிக்கவை : பின்னர், மண் பானையின் வாயை இறுக்கமாக மூட, மூடியை பானையின் வாயில் ஒரு மெல்லிய பருத்தித் துணியைக் கொண்டு களிமண்ணைப் பூசி குழைத்து, சிறிதும் காற்று புகாமல் செய்து, மூடிவிடவேண்டும். மண் பானையின் பக்கவாட்டில் மாட்டுச்சாண வறட்டியை வைத்து தீ மூட்டிஎரித்து வர வேண்டும். இதன் மூலம் பானையில் உள்ள மூலிகைகள், வெளிப்புற சூட்டில் கரைந்து, தைலமாக, கீழே உள்ள பாத்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும். இதுவே, குழித்தைலம் ஆகும், இந்த முறையில் செய்யப்படும் தைலங்கள்,மிக அதிக வீர்யமும் சக்தியும்மிக்கவை.

ஓட்டப்பந்தயத்தில் முதல்வனாக வர: ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெறுவது, அனைத்து வீரர்களின் கனவாகவும்இருக்கும், இப்படி பந்தயத்தில் கலந்து கொள்ளும் வீரர் ஒருவர், விழுதி வேரை நன்கு மென்று வாயில் அடக்கிக் கொண்டு ஓட, அவர்கள் தான் இறுதிக் கோட்டை முதலில்எட்டி, வெற்றிவாகை சூடுவார்கள், இதைப் போல, அதிமதுரம் வேர், கோபுரந்தாங்கி இலை, திருநீற்றுப் பச்சிலை இலையையும் சேர்த்து இடுப்பில் கட்டிக் கொண்டாலும்,வேகமாக ஓடுவது மட்டுமல்ல, அதிக சுமையையும் தூக்க முடியும் என்கிறது சித்த வைத்திய நூல்கள்.

மலச்சிக்கலைப் போக்க : விழுதி இலைகளை நன்கு அலசி எடுத்துக் கொண்டு, அதனுடன் வாத நாராயணா மரத்தின் இலைகள் மற்றும் நெல்லி மரத்தின் பூக்கள் இவற்றை சேர்த்து,தண்ணீரில் இட்டு காய்ச்சி, நன்கு சுண்டியதும், ஆறவைத்து இரவில் பருகி வந்தால்,காலையில் மலம் இளகி, நன்கு பேதியாகும்.
12 1510456288 litchy

Related posts

ஏன் தெரியுமா மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது?

nathan

பெண்களே உஷார்! மாதவிடாய் காலம் முடிந்த பிறகும் உதிரப்போக்கு ஏற்படுகிறதா?

nathan

மாதவிடாய் காலத்தில் இந்த விஷயங்களை கண்டிப்பா செய்யாதீங்க

nathan

உங்களுக்கு ரெட்டை குழந்தை எப்படி உருவாகும்னு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு எவ்வளவு தண்ணி குடிச்சாலும் நாக்கு வறண்டு போயிடுதா?

nathan

இரட்டைக் குழந்தைகள் வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்க

nathan

பல் சொத்தை, பல் உடைதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்!

nathan

மின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க வேண்டுமா?

nathan

இணைய காதலர்களிடம் சிக்கும் பெண்கள் தப்பிக்க என்ன வழி?

nathan