25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
15 1510748114 6
மருத்துவ குறிப்பு

கவணம் அடிவயிற்று வலி!! பெண்கள் அஜாக்கிரதையாக விடக் கூடாத அறிகுறிகள்!!

பெண்களின் அடிவயிறு மிக முக்கியமான பாகம் . கர்ப்பப்பை, கருப்பை, சிறு நீரகம், கல்லீரல், கணையம், என எல்லா முக்கிய உறுப்புகளும் அருகருகே இருக்கும் இடம் என்பதால் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டிய பாகம். அடிவயிற்று வலி வந்தால் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது.
ஏனென்றால் அடிவயிற்றில் உண்டாகும் பாதிப்புகள் ஹார்மோன் சம நிலையற்ற தன்மையால், கருப்பை, அல்லது கருப்பைக்கு பக்கத்தில் இருக்கும் சிறு நீரகம் போன்ற உறுப்புகளில் ஏதாவது பாதிப்பாக இருந்திருக்கலாம்.

சாதரணமாக வரும் அடிவயிற்று வலி தசைப் பிடிப்பால் அல்லது அதிக சூட்டினால் வரும் அவை ஓரிரு நாட்களில் குணமாகிவிடும். ஆனால் தாங்க முடியாத அளவிற்கு தொடர்ச்சியாக, ஏதாவது பாரம் தூக்கும்போது, நடக்கும்போது வந்தால் அதனை அப்படியே விடக் கூடாது.

கருப்பை சம்பந்தப் பட்ட நோய்கள் காரணம் : பால்வினை தொற்று நோய்கள் (STI) நிண நீர்கட்டிகள் கருமுட்டை உருவாதல்

கர்ப்பிணிகள் : கர்ப்பிணி பெண்களுக்கு சதை மற்றும் எலும்பு விரிவடைவதால் அடிவயிறு வலி ஏற்படும். அடிவயிறு வலியுடன் ரத்தப் போக்கு, காய்ச்சல், தலை சுற்றல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.

தொற்று : கர்ப்பப்பையில் தொற்று ஏற்பட்டிருந்தால் அவ்வாறு வலி ஏற்படும். சிறு நீர்ப்பதையின் வழியாக கிருமிகள் கர்ப்பப்பையை தாக்கியிருக்கலாம். அல்லது கர்ப்பப்பையை மட்டும் தாக்கும் காச நோயாக இருக்கலாம்.

சிசேரியன் : சிசேரியன் செய்திருந்தால் அவர்களுக்கு அடிவயிற்று வலி சில மாதங்களுக்கு உண்டாகும். கர்ப்பப்பையில் தைப்பதால் உண்டாகியிருக்கும் புண்கள் ஆற சில மாதங்களாகும் என்பதால் அவ்வாறு வலி உண்டாகியிருக்கலாம்.

கருப்பை கட்டிகள் : கருப்பை கட்டிகள் அல்லது நீர்க்கட்டிகள் உண்டாகியிருந்தால் அடிவயிற்றில் தாள முடியாத வலி உண்டாகும். கருப்பைக் கட்டிகள் அல்லது புற்று நோயாகவும் இருக்கலாம்.

கருக்குழாய் பாதிப்பு : கருப்பையில் இருக்கும் திரவம் அடர்த்தியாக மாறினால் அடிவயிற்று வலி உண்டாகும். அல்லது கருக்குழாயின் ஏதாவது பாதிப்போ, சிதைவோ உண்டாகியிருந்தால் அடிவயிற்றில் வலி காணப்படும்.

‘தொடர்ந்து வலி : கருமுட்டை உருவாகும்போது சிலருக்கு தொடர்ந்து வலி ஏற்படும். மாதவிடாய் வருவதற்கு முன் இந்த வலி ஏற்படலாம். மாதவிடாய் வந்தும் நிற்காமல் வலி ஏற்படும்.

உணவு சம்பந்தப்பட்ட நோய்கள் செரிமான மண்டலத்தில் உண்டாகும் மாற்றங்களால், வேறு ஏதாவது பாதிப்புகளால் அடிவயிறு வலி உண்டாகும். உணவுக் குடலில் கிருமிகளால்தொற்று அல்லது வேறு பாதிப்புகளால் உண்டாகும்.

அப்பெண்டைஸ் : குடல்வால் அழற்சி நோய்கள் தாக்கப்படும்போது அவ்வாறான வலியை உணர்ந்திருப்பீர்கள். வயிற்றுப் போக்கு, ஃபுட் பாய்ஸன் போன்ரவையும் முக்கிய காரணங்கள்.

சிறுநீரக மண்டல நோய்கள் : பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் சிறு நீர்த் தொற்றினால் அடிவயிற்றில் வலி உண்டாகலாம். சிறு நீர்க் குழாயில் உண்டாகும் சிஸ்ட் எனப்படும் சிறு கட்டிகள், சிறு நீரக கற்கள் இருந்தால் இவ்வாறு வலி ஏற்படும். சிறு நீரகக் கற்கள் முக்கியமான காரணங்களாகும்.

அடிவயிற்றில் உண்டாகும் பாதிப்புகள் : கீழே விழுவதால், விபத்தினால் அடிவயிற்றிலுள்ள சுவர்களில் உண்டாகும் காயத்தினால் அடிவயிறு உண்டாகலாம். அந்த மாதிரி சமயங்களில் சிறு குடல் அல்லது வேறு ஏதாவது உறுப்பு அடிவயிற்றில் ஒட்டிக் கொண்டு வலியை ஏற்படுத்தும்.

அந்த சமயத்தில் என்ன செய்யலாம்? அடிவயிற்று வலி வருவதற்கு சாதரண காரணங்ககளும் இருக்கலாம். ஆபத்தான நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். ஓரிரு நாட்கள் என்றால் அச்சப்படத் தேவையில்லை. ஆனால் தொடர்ந்து வலி இருந்தால் ஏதாவது பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். உடனே மருத்துவரை பார்க்க வேண்டும்.15 1510748114 6

Related posts

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படும்…

nathan

உங்களுக்கு இரத்தம் சுத்தமாக இல்லை என்றால் என்னவாகும் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

nathan

புரோஸ்டேட் வீக்கம் வராம இருக்கணும்ன்னா… ஆண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த அறிகுறிகள் இருந்தால்… அலட்சியம் காட்ட வேண்டாம்..!

nathan

குரலில் மாற்றமா? கவனம் தேவை

nathan

ஆண்களின் பழைய வாழ்க்கையால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

இதை கட்டாயம் படியுங்கள் கருத்தரித்தலுக்கு தடையாக இருக்கும் கருப்பை நீர்க்கட்டிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இனிமேல் உங்கள் குழந்தையை பிறப்பதற்கு முன்னரே நீங்கள் பார்க்க முடியும்

nathan