29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
20 1508481083 chapathikalli
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா புற்று நோய்களிலிருந்து மனிதரைக் காக்கும் சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ நன்மைகள்!!

சப்பாத்தி கள்ளி, வறண்ட நிலங்களில், சாலையோரங்களில் காணப்படும் ஒரு முட்செடி. பல அடுக்குகளாக, இணைந்து காணப்படும் இச்செடிவகைகள், பச்சை நிறத்தில் செழுமையாக இருந்தாலும், இதன் மேல் காணப்படும் பரவலான முட்களால், இதை கால்நடைகள் கூட, நெருங்காமல் விலகிச்செல்லும். நம்மில் சிலர், தம் குண நலன்களில், இந்த கள்ளிச்செடி போல, யாரும் அவர்களை நெருங்காவண்ணம் கோபமான இயல்பைக் கொண்டிருப்பர் அல்லவா, அதுபோல.

ஆயினும், அவர்கள், ஆழ்மனத்தில் பல நல்ல குணங்கள் குடிகொண்டிருக்கும் என்பதை, அவர்களை நெருங்கியவர்களே அறிவர். அதுபோலவே, சப்பாத்திக்கள்ளிச் செடிகள், மனிதர்க்கு தரும் தூய நலன்களை நாம் அறிந்தால், அந்தச்செடியை அடுத்த முறை கடக்கும்போது, அலட்சியம் செய்யமாட்டோம்.

பாதாள மூலி எனும் தமிழ்ப்பெயர் கொண்ட சப்பாத்திக்கள்ளிச் செடிகள், நம் தேசத்தில் வறண்ட நிலங்கள் மட்டுமன்றி, மலைப்பகுதிகள், ஆற்றுப்படுகைகள் போன்ற அனைத்து இடங்களிலும் தானே வளரும் ஒரு முட்செடி, இவற்றில் பல வகைகள் காணப்பட்டாலும், அவை யாவும் மனிதர்க்கு நலம் தருபவையே. நீரின்றி வளரும் இயல்புடைய இச்செடிகளின் உடற்பாகத்தில், நீர்ச்சத்து மிகுந்து காணப்படும்.

நீர்ச்சத்து ஆவியாகிவிடாமல் காக்கவே, இதன் இலைப்பகுதிகளில், முட்கள் அதிகம் காணப்படுகின்றன. இவற்றின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும், அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இவற்றின் கனிகளும் முட்களுடனேயே, காணப்படும்.

சப்பாத்திக்கள்ளி முழுச் செடியும், மனிதர்களுக்கு நற்பலன்கள் தரும், மேலும் இதன் அனைத்து பாகங்களும் நாம் உண்ணத்தக்க வகையில் இருப்பதையும், அவை நமக்கு பல்வேறு உடல் பாதிப்புகளை சரிசெய்யும் என்பதை நாம் அறிவோமா?

சித்த மருத்துவத்தில், சப்பாத்திக்கள்ளிச் செடிகளுக்கு, தனி இடம் உண்டு, நச்சு நீக்கவும், “அல் சைமர்” எனும் ஞாபக மறதி வியாதிக்கு சரியான மருந்தாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதர்களை அச்சுறுத்தும் புற்று வியாதிகளைப் போக்கும் மருந்தாகவும், அவை வராமல் தடுக்கும் ஒரு உடல் மெய்க்காப்பாளனாக, விளங்குகின்றன, சப்பாத்திக்கள்ளிச் செடிகள். மிகச்சிறந்த வியாதி எதிர்ப்பு மூலிகையான சப்பாத்திக்கள்ளி, இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கு, பெருந்துணையாகிறது.

உடலின் விஷத்தைப்போக்கும் சப்பாத்திக்கள்ளி! கிராமங்களில், குடும்பப் பிரச்னைகளின் உச்சத்தில், நான் ஊமத்தை அரைச்சு குடிச்சு சாகப்போகிறேன் என்று பெண்கள் அடிக்கடி குடும்பத்தாரை பயமுறுத்துவார்கள், அது சமயங்களில் விளையாட்டு விபரீதம் ஆவது போல, உண்மையாகிவிடும்போது, குடும்பத்தார் தவித்துப்போவர், வைத்தியரிடம் ஓடிச்சென்று விஷ முறிவை கொடுத்து உயிரைக் காப்பாற்றப் போராடி, காப்பாற்றி விடுவர். ஆயினும் விஷம் முழுமையாக உடலில் இருந்து நீங்காமல், அவர்களுக்கு அவ்வப்போது உடல் நல பாதிப்புகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும், இந்த உடல் வேதனைகளில் இருந்து அவர்களைக் காக்க, சப்பாத்திக்கள்ளி உறுதுணை புரிகிறது. சப்பாத்திக்கள்ளியின் முட்களை முழுவதும் நீக்கி, அதன் சதைப்பகுதியை சேகரித்து அத்துடன் சிறிது மிளகுகளைப் பொடியாக்கி கலந்து சாப்பிட, உடலில் தேங்கியிருந்த விஷங்கள் செயல் இழந்து, விஷத்தால் ஏற்பட்ட உடல் நல பாதிப்புகள் யாவும் விலகி விடும்.

ஆர்த்ரைடிஸ் நோய்க்கு : சப்பாத்திக்கள்ளி சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணை ஊற்றி அதை சற்று நேரம் சூடாக்கி, ஒரு பருத்தித்துணியில் வைத்து, கைகால் மூட்டுகளில் ஒத்தடம் கொடுத்துவர, “ருமாட்டிக் ஆர்த்தரைத்டிஸ்” எனும் உடல் கைகால் மூட்டுகளை அதிகம் பாதிக்கும் முடக்கு வாத வியாதியைக் குணப்படுத்தும்

பால் மருவை குணப்படுத்த : சப்பாத்திக்கள்ளி சாற்றை, கை கால் மற்றும் உடலில் வைரஸ் கிருமிகளால் உண்டாகும் “வைரஸ் வார்ட்ஸ்” என்று ஆங்கிலத்திலும், “பாலுண்ணிகள்” என்று தூய தமிழிலும் அழைக்கப்படும் மருக்களின் மேல் தடவி வர, அவை விரைவில் மறைந்து விடும்.

பால் மருவை குணப்படுத்த : சப்பாத்திக்கள்ளி சாற்றை, கை கால் மற்றும் உடலில் வைரஸ் கிருமிகளால் உண்டாகும் “வைரஸ் வார்ட்ஸ்” என்று ஆங்கிலத்திலும், “பாலுண்ணிகள்” என்று தூய தமிழிலும் அழைக்கப்படும் மருக்களின் மேல் தடவி வர, அவை விரைவில் மறைந்து விடும்.

ஆஸ்துமா : ஆஸ்துமா எனும் இளைப்பு வியாதி உள்ளவர்கள், சப்பாத்திக்கள்ளியை தீயில் இட்டு எடுத்த சாற்றில் சிறிது தேன் கலந்து, தினமும் மூன்று வேளை தொடர்ந்து நீரில் கலந்து பருகி வர, இளைப்பு வியாதிகள் விலகி விடும்.

இருமலுக்கு : தொடர் இருமல் பாதிப்பு உள்ளவர்கள், சப்பாத்திக்கள்ளி சாற்றில் இந்துப்பு கலந்து, தினமும் இருவேளை நீரில் கலந்து பருகி வர, இரத்தத்தை அதிகரித்து, இருமலால் உண்டான இரத்த சோகையை சரி செய்து, இன்னல்கள் தந்த இருமல் பாதிப்புகளை, உடலில் இருந்து நீக்கி விடும். சிறுநீர் பிரியாமல், சிறுநீர்ப்பையில் தேங்கி இருந்து உடலை வருத்தும் பாதிப்பை சரிசெய்ய, தீயில் வாட்டிய சப்பாத்திக்கள்ளியை, அடி வயிற்றில் வைத்து, கட்டி வர, சிறுநீர் பாதிப்புகள் நீங்கி, சிறுநீர் இயல்பான அளவில் வெளியேறும்.

ஹார்ட் அட்டாக் தடுக்கும் : சப்பாத்திக்கள்ளியை உணவில் சேர்த்து வர, அந்த உணவில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் தாதுக்கள், இரத்த குழாய்களின் செயல்திறனை சரியாக்கி, இரத்த அழுத்த பாதிப்புகள் இல்லாமல் சீரான இரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது. இதனால், இரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும் ஹார்ட் அட்டாக் பாதிப்புகள் ஏற்படாமல், உடலை பாதுகாக்கிறது.

மலச்சிக்கல், கல்லீரல் நோய்களுக்கு : சத்துகளற்ற உணவுகள், மலச்சிக்கல், குடலில் சேர்ந்த நச்சு வாயு போன்ற காரணங்களால் உண்டாகும் பருத்த பெரு வயிறு பாதிப்புகள் சரியாகி, உடல் நலம் தேற, ஐம்பது மிலி சப்பாத்திக்கள்ளி பாலில், ஐந்து கிராம் என்ற அளவில் கடுக்காய் பொடி அல்லது அதன் விதை நீக்கிய தோல் பகுதி இவற்றை நன்கு கலக்கி, ஐந்து அல்லது ஆறு வாரங்கள் நிழலில் உலர்த்தி பொடியாக்கிக் கொள்ளவும். இந்தப் பொடியை சிறிதளவு, கைவிரல் நுனிகளால் எடுத்து, தினமும் காலையில் நீரில் கலந்து பருகி வர, தொல்லைகள் தந்த பெரு வயிறு பிரச்னைகள் விலகி, நீண்ட நாட்களாக ஆறாத உடல் காயங்கள், வயிற்றுப் புண்கள், கல்லீரல் வீக்கம் போன்ற பாதிப்புகள் குணமாகி, உடலும் மனமும் புத்துணர்வாகும். நார்ச்சத்து மிக்க சப்பாத்திக்கள்ளியை, உணவில் சேர்த்து வர, நாள்பட்ட மலச்சிக்கல் சரியாகி, உடல் பொலிவாகும்.

சப்பாத்திக்கள்ளியின் மஞ்சள் நிறப்பூக்களை அரைத்து கட்டிகளின் மேல் தடவி வர, கட்டிகள் குணமாகும். சப்பாத்திக்கள்ளி பூக்களை, நீரில் காய்ச்சி பருகி வர, வயிற்று வலி, குடல் சார்ந்த பிரச்னைகளை சரிசெய்து விடும்.

விஷப்பூச்சி கடி பாதிப்பில் இருந்து காக்கும் சப்பாத்திக்கள்ளி: சப்பாத்திக்கள்ளி வேரை சிறிது மிளகுகளுடன் சேர்த்து நன்கு சுட வைத்து, தினமும் தேனுடன் கலந்து ஓரிரு வேளை சாப்பிட்டு வர, விஷ வண்டு, பூச்சி கடி, பூரான் கடி போன்ற விஷ பாதிப்புகள் நீங்கி விடும். மேலும், விஷம் என்று தெரியாமல் சாப்பிட்ட விஷச்செடிகளின் விஷத்தையும், உடலில் இருந்து போக்கும்.

சப்பாத்திக்கள்ளியை சற்று சுண்ணாம்பு சேர்த்து நன்கு கலக்கி, உடலில் தேள், தேனீ, குளவி போன்ற விஷப்பூச்சிகள் கடித்த இடத்தில் அடர்த்தியாக தடவி வர, விஷக்கடியினால் தோலில் ஏற்பட்ட வீக்கம், தோல் கன்றிப் போதல் போன்ற விஷத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை, உடலில் இருந்து நீக்கி விடும்.

சுவைமிக்க சப்பாத்திக்கள்ளி பழங்கள் : சப்பாத்திக்கள்ளியின் மேல் பாகத்தில் அடர் சிவப்பு நிறத்தில் பரவலாகத் தோன்றும் பழங்கள், காண்பதற்கு அழகு மட்டுமல்ல, உண்பதற்கும் சுவையானவை, இந்த பழங்களிலும் முட்கள் மிகுந்து காணப்படும், பழங்களை நடுவில் பிளந்து, கவனமாக முட்களை எடுத்து விட்டு, சுவைக்க, வாயெல்லாம் இரத்தச் சிவப்பில் இனிக்கும், கிராமப்புற சிறுவர்க்கெல்லாம், அக்காலத்தில் விலையில்லாமல் கிடைக்கும் பழ வகைகளில் இதுவும் ஒன்று. இந்த சப்பாத்திக்கள்ளி பழத்தை, தீயில் சுட்டு, தொடர் வறட்டு இருமல் உள்ளவர்களிடம் உண்ணக் கொடுக்க, இருமல் சரியாகும்.

கண் வியாதிக்கு சர்பத் : சப்பாத்திக்கள்ளி பழங்களின் சாறெடுத்து, அதை வாணலியில் இட்டு, வெல்லம் சேர்த்து, இனிப்பு பாகு நீராக காய்ச்சி வைத்துக்கொண்டு, கோடைக்காலத்தில், நீரில் இட்டு சர்பத் போல பருகி வர, வெப்பத்தினால் உண்டாகும் உடல் சூடு, கண் எரிச்சல் உள்ளிட்ட சகல வியாதிகளும், விலகி விடும். இளமையில் முதுமையடைவதை தடுத்து, கண் பார்வைத்திறனை மேம்படுத்தி, நரம்பு இயக்க ஆற்றலை சரிசெய்யும் அற்புத மூலிகைதான் சப்பாத்திக்கள்ளி!

இயற்கையாக நீரை சுத்திகரிக்க : கிராமங்களில் மக்களுக்கு சிக்கனமான, எளிமையான தண்ணீர் சுத்திகரிப்பானாக செயல்படுகிறது, சப்பாத்திக்கள்ளி. நன்கு சுத்தம் செய்த சப்பாத்திக்கள்ளியின் சதைப்பகுதியை நீரில் இட்டு காய்ச்சி அந்த நீரை, சாதாரண நிலையில் கிடைக்கும் தண்ணீரில் சிறிது கலக்க, அந்த நீரில் உள்ள கிருமிகள், மாசுக்கள் யாவும் பாத்திரத்தின் அடியில் தங்கி, தெளிந்த தூய நீர் நமக்கு பருகக் கிடைக்கும். இந்த நீர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விட தூய்மையானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சப்பாத்திக்கள்ளி தேநீர்! சப்பாத்திக்கள்ளி இலைகளின் முட்களை அகற்றி நன்கு சுத்தம் செய்துகொண்டு, அந்த சதைப்பகுதியுடன் ஐந்தாறு மிளகுகளை தூளாக்கி, நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்த பின் வடிகட்டி, அதில் சுவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து, தேநீராகப் பருகி வர, கோடை வெம்மையினால் ஏற்படும், அதிக களைப்பு, அதீத தாகம் மற்றும் உடல் சூடு போன்றவை அகன்று, உடல் வெப்ப நிலை இயல்பாகும்.

உடலில் புற்று வியாதி பாதிப்பை நீக்கும் : சத்துமிக்க உணவான சப்பாத்திக்கள்ளியில் உள்ள நார்ச்சத்து, கரோட்டின், பெட்டாலைன், பொட்டாசியம், கால்சியம் போன்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் மனிதரின் உடலுக்கு நிவாரணம் தரும் வீரியத்துக்கு, காரணமாக அமைகின்றன. சப்பாத்திக்கள்ளியின் சதைப்பகுதியை, உணவில் சேர்த்து வர, அதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள், உடல் முழுவதும் செயல்பட்டு, உடலில் புற்று பாதிப்புகளை உருவாக்கக் கூடிய நச்சுக் கிருமிகளை அழித்து வெளியேற்றும் வல்லமை மிக்கதால், உடலின் வியாதி எதிர்ப்பு தன்மை அதிகரிக்கிறது.

கொழுப்பை குறைக்கும், எலும்பை வலுவாக்கும் : சப்பாத்திக்கள்ளி உணவு, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து, உடல் எடையைக் குறைத்து, உடல் வீக்கத்தை சரியாக்கி, உடலின் சீரண உறுப்புகள் வலுவுடன் இயங்க துணையாகிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு துணையாகி, பற்களின் வியாதிகளை போக்குகிறது.

20 1508481083 chapathikalli

Related posts

மாலை அல்லது இரவில் கர்ப்ப பரிசோதனை செய்யலாமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

இதோ சில டிப்ஸ்… உங்க குழந்தை படுக்கையில் ‘சுச்சு’ போவதைத் தடுக்கணுமா?

nathan

தர்பூசணியை தொடர்ந்து சாப்பிட்டு வர…!

nathan

நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தும் சமையலறைப் பொருட்கள்!

nathan

தாமதமாகும் மாதவிடாய் சுழற்சியை சரிசெய்யும் உணவுகள்

nathan

இந்திய சந்தையில் விற்கப்படும் உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள்!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த காளான் சாப்பிட்டா பெண்களுக்கு குழந்தை சீக்கிரம் உண்டாகுமாம்…

nathan

பெற்றோர்கள் எந்த முறையில் குழந்தையை கண்டிக்கலாம்

nathan

தெரிஞ்சிக்கங்க…பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான சில ஆயுர்வேத சிகிச்சை!

nathan