25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
21 1508573884 4
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா!இதை படிங்க…

வெந்தயம் பல்வேறு சத்துக்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும் வெந்தயத்தை தங்களது அன்றாட சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள். பழங்கால மருத்துவ முறையிலும் வெந்தயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனுடைய விதைகள்,இலை எல்லாமே மிகவும் பயனுள்ளதாகும். சாதரண விதைகளை விட அவற்றை முளைகட்டிச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது. முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்திட வேண்டும். மறு நாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும். இவற்றை அப்படியே கூட எடுத்துச்சாப்பிடலாம்.இதனால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.

சத்துக்கள் : முளைகட்டிய வெந்தயத்தில் அதிகப்படியான விட்டமின்சி,ப்ரோட்டீன்,நியாசின்,பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ் நிறைந்திருக்கும். அதோடு ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜெனினும் அதிகமாக காணப்படுகிறது.

சர்க்கரை நோயைக் குறைக்கும் : சர்க்கரை நோயாளிகளுக்கு முளைகட்டிய வெந்தயம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திடும்.வெந்தயத்தில் இருக்கும் மூலக்கூறுகளால் உடலில் இன்ஸுலின் சுரப்பு அதிகரிக்கும் அதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும். குறிப்பாக டைப் 2 வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனைச் சாப்பிடலாம். தொடர்ந்து 24 வாரங்கள் வரை முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வர ரத்தச் சர்க்கரை அளவு குறைந்திடும். வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலம் இன்சுலின் சுரப்பை துரிதப்படுத்துகிறது.

எடை குறைக்கும் : முளைகட்டிய வெந்தயத்தில் polysaccharide அதிகமாக இருக்கிறது. இவை நிறைவாக சாப்பிட்ட உணர்வைத் தருகிறது. இதனால் அதிகப்படியான உணவு சாப்பிடுவது தவிர்க்கப்படும். அதோடு முளைகட்டிய வெந்தயத்தில் 75 சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. இவை நாளுக்கு தேவையான எனர்ஜியை கொடுத்திடும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைத்திடும்.

இதயம் : முளைகட்டிய வெந்தயம் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்த்திடலாம். இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துக் கொள்ளும். இதனால் இதயத்தின் செயல்பாட்டில் எவ்வித இடர்பாடுமின்றி தொடரும்.அதோடு இதிலிருக்கும் பொட்டாசியம் நம் உடலில் இருக்கும் சோடியம் அளவை சீராக்கும். இதனால் ரத்த அழுத்தம் முறையாக பராமரிக்கப்படும்.

வைரஸ் : முளைகட்டிய வெந்தயம் வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். குறிப்பாக காய்ச்சல்,தலைவலி போன்றவற்றை உடனடியாக குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது.

ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் : இதில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடன் நிறைந்திருக்கிறது. இவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் உடலிலுள்ள செல்களின் வளர்ச்சிக்கு முக்கியப்பங்காற்றுகின்றன.

செரிமானம் : ஆரம்ப காலங்களிலிருந்தே வெந்தயத்தை செரிமானம் தொடர்பான மருத்துவத்திற்கே அதிகம் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். முளைகட்டிய வெந்தயத்தில் அதன் பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும்.வயிறு பொருமல்,அஜீரணம்,வயிற்று வலி,வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு உடனடித் தீர்வு கொடுக்கும்.

மாதவிடாய் : பெண்களில் சிலர் முறையற்ற மாதவிடாயினால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு முளைகட்டிய வெந்தயம் பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி,தலைவலி,எரிச்சல்,கோபம் போன்ற உணர்வுகளையும் குறைக்க கூடும். மெனோபாஸ் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாக அமைந்திடும்.

டெலிவரி : எல்லா கர்பிணிப்பெண்களுக்கும் டெலிவரி குறித்த பயம் நிறையவே இருக்கும். வெந்தயத்தில் இருக்கும் யுட்ரைன் டெலிவரி எளிதாக்குகிறது. அதே நேரத்தில் வலியை குறைக்கும் என்று அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது. ஏதேனும் அலர்ஜி இருந்தால் மருத்துவ ஆலோசனைப் பெற்று எடுத்துக் கொள்ளலாம்.

தாய்ப்பால் : முளக்கட்டிய வெந்தயத்தில் galactagogou என்ற சத்து இருக்கிறது. இவை பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுக்கிற பெண்கள் தினமும் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

சருமம் : முளைகட்டிய வெந்தயம் உடல் நலனுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் மிகவும் நல்லது. சருமத்தில் உள்ள செல்களை எல்லாம் தூண்டப்படுவதால் அவை பாதிப்படையாமல் இருக்கும்.அதனால் இளமையிலேயே வயதான தோற்றம் வருவது தவிர்க்கப்படும். அதே போல பருக்கள்,கரும்புள்ளிகள் ஏற்படுவதையும் குறைக்க முடியும்.

பொடுகு : பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனை தலைமுடிப்பிரச்சனையாகத்தான் இருக்கிறது. முளைகட்டிய வெந்தயத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக முடி கொட்டுவதை தவிர்க்கும். அதோடு இவை தலையின் வேர்கால்களுக்கு ஊட்டச்சத்தினை வழங்குவதால் பொடுகுப் பிரச்சனையும் இருக்காது. இதிலிருக்கும் ப்ரோட்டீன் மற்றும் நிகோடனிக் அமிலம் போன்றவை முடி வளர ஆதாரமாக விளங்குகிறது. இதிலிருக்கும் லெஸிதின் பொடுகுக்கு எமனாக அமையும்.

உடற் சூடு : இயற்கையாகவே வெந்தயம் உடலுக்கு சூடாகும். சிலர் சூடான உணவு வகைகளையே எடுத்துக் கொள்ள மாட்டார்கள் அவர்களுக்கு வெந்தயம் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

தொப்பை : வெந்தயத்தை ஊற வைத்த நீரை குடித்து வந்தாலோ அல்லது முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டாலோ நல்ல பலன் உண்டு.குறிப்பாக வயிற்றில் அதிகமாக கொழுப்பு சேர்ந்திருப்பவர்கள் தாரளமாக இதனைச் சாப்பிடலாம். முளைகட்டிய வெந்தயத்தில் இருக்கும் மூலக்கூறுகள் தொப்பையை குறைத்திடும்.

எப்படிச் சாப்பிடலாம் ? : எத்தகைய உடல் வாகு கொண்டவராக இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூனுக்கு மேல் சாப்பிடக்கூடாது. முளைகட்டிய வெந்தயம் காலை உணவுக்கு முன்பாக சாப்பிடுவது மிகவும் நல்லது.அதன் கசப்பு சுவை உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். முளைகட்டிய வெந்தயத்தில் அவ்வளவாக கசப்புத் தெரியாது.குறைந்தது ஒரு மாதம் வரை எடுத்துக் கொண்டால் மட்டுமே சிறந்த பலனை எதிர்ப்பார்க்க முடியும். உணவுகளில் ஏதேனும் ஒவ்வாமை இருந்தால்,வேறு எதாவது நாட்ப்பட்ட நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டிருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.21 1508573884 4

Related posts

மன அழுத்தம் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

nathan

அந்த மூன்று நாட்களில் இதெல்லாம் சாப்பிடாதீங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா தக்காளி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நோய்கள்?

nathan

மருதாணி மகத்துவம்!

nathan

புற்றுநோய் அறிகுறிகள் தெரிந்து கொள்வது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா உணவில் பெருங்காயம் பயன்படுத்தினால் ‘பெரும் காயம்’ கூட குணமாகுமாம்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… அம்மாவாகப் போகிறீர்கள் என்பதைத் தெரியப்படுத்தும் ஆரம்ப அறிகுறிகள்!

nathan

அவசியம் படிக்க.. மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் ஜூஸ்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா உறக்கத்தில் எத்தனை வகை., எத்தனை நிலைகள் உள்ளது?

nathan