இரத்தம் என்பது அனைத்து உயிரினங்களின் உடலிலும் உள்ள சிவப்பு நிற திரவம் ஆகும். இரத்தத்தின் முக்கியமான வேலை உடலில் உள்ள செல்களுக்கு தேவையான அத்யாவசிய பொருளான ஆக்சிஜனையும் ஊட்டச்சத்தையும் கொண்டு சேர்பதாகும். அதே போல் இரத்தமானது அனைத்து செல்களில் இருந்து கழிவுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது.
இரத்தம் சுத்தமாக நுரையீரல் பெரும்பங்கு வகிக்கிறது. நுரையீரல் இதயத்திலிருந்து சுத்த இரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த நாளங்களின் மூலம் கடத்துகிறது. அதே நேரத்தில் உடலின் அனைத்து பாகங்களில் இருந்து அசுத்த இரத்தத்தை இதயத்தின் வலது பாகத்திற்கு கொண்டு சேர்க்கிறது. நாம் சுவாசிக்கும் பொழுது ஆக்சிஜென் உள்ளிளுக்கப்படுகிறது. உள்ளிழுக்கப்பட்ட ஆக்ஸிஜென் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு இரத்தம் ஆக்சிஜென் கலந்த இரத்தமாகிறது. இவ்வாறு இரத்தம் சுத்தமடைகிறது.
1. இரத்த சுத்தத்தின் அவசியம் தற்போது பெரும்பாலான நோய்களுக்கு இரத்த சுத்தமின்மைதான் காரணமாக உள்ளது. இரத்தம் சுத்தமாக இருந்தால்தான் நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துப் பொருட்களான வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக கடத்தப்படும். கல்லீரல் உடலின் கெட்ட பொருட்களை பிரித்தெடுத்து வெளியேற்றும் உறுப்பாகும்.
இரத்தம் உடலின் கெட்ட பொருட்களை கல்லீரலுக்கு கடத்துகிறது. கல்லீரல் அதை வெளியேற்றுகிறது;. மனிதனுக்கு வயது அதிகமாகும் பொழுது காலப்போக்கில் இரத்தம் தனது தூய்மையை இழக்கிறது. அதன் பின்பு உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து அனைத்து நோய்களின் இருப்பிடமாக மனித உடல் மாறுகிறது. அதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்..
2. ரத்தம் சுத்தமில்லாதால் வரும் நோய்கள் ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி, தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண் பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் உண்டாகும்.
3. இரத்தம் சுத்தமாக… இரத்தம் சுத்தமாக தண்டுக் கீரை, மிளகு , மஞ்சள், தேங்காய்பால் மருந்து தண்டுக் கீரையை களைந்து அதனுடன் சிறிது மிளகு , சிறிது மஞ்சள், கொஞ்சம் தேங்காய்பால் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நாக்கிற்கு சுவையாகவும் இருக்கும் இரத்தமும் சுத்தமாகும்.
4. நெல்லிக்காய் நெல்லிக்காயை பறித்து கழுவி விட்டு நன்றாக மென்று தின்றால் பற்களும் ஈறுகளும் உறுதியாகும். நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள பலவிதமான நோய்களும் குணமாகும். அது மட்டும் இல்லாமல் வெறும் நெல்லிக்காயை மட்டுமே அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
5. புதினா இலை, வேப்பிலை புதினா இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவில் எடுத்து நன்கு கழுவி பின் இரண்டு இலைகளையும் அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அல்லது ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் இரத்தம் ஒரே மாதத்தில் தூய்மையாகும். இந்த மருத்துவத்தை வேப்பிலை தளிரும் காலத்தில் ஒரு மாதம் முழுவதும் வருடத்திற்கு ஒரு முறை என பழக்க படுத்திக் கொண்டால் ஆயுளுக்கும் ரத்தம் சுத்தமாக இருக்கும்.
6. காசினிக் கீரை, பாதாம் பருப்பு இரத்தம் சுத்தமாக இது கொஞ்சம் விலை உயர்ந்த மருந்து. காசினிக் கீரையை பாதாம் பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். புத்துணர்ச்சி கிட்டும்.
7. முருங்கைக் கீரை முருங்கைக் கீரையை சுத்தம் செய்த பின் துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி பசும் நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.
8. அருகம்புல் சாறு, கீழாநெல்லி மருந்து அருகம்புல் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பிய ஓர் அதிசயம். நம் முன்னோர்கள் அதன் மகத்துவம் அறிந்தே அதனை விநாயகருக்கு மாலையாய் அணிவித்தனர். வெறும் அருகம்புல் சாறு அருந்தினாலே உடலில் பல அவஸ்தைகள் காணாமல் போகும். அருகம்புல் சாறுடன் கீழாநெல்லி சேர்த்து அரைத்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாவதோடு இரத்தமும் தூய்மையாகும்.
9. விளாம்பழம் இரத்தத்தில் உள்ள கிருமிகள் நீங்கி இரத்தம் சுத்தமாக அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வரலாம். தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழமான இந்த விளாம்பழம், ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த விருத்தியும் செய்கிற சிறப்பை உடையது.
10. பல், எழும்புகள் விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுவடையச் செய்கிறது. தயிருடன் விளாம் காயை பச்சடி போல் செய்து சாப்பிட வாய்ப் புண், அல்சர் குணமாகும். வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டு வர.. நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும். விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலை சுற்றல் நீங்கும்.
11. நாவல்பழம் நாவல் முழுத்தாவரமும் துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பொதுவாகத் துவர்ப்புச் சுவையே அதிகமாகும். நாவல் பட்டை நரம்புகளைப் பலப்படுத்தும்; தொண்டை வறட்சி, மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றைக் குணமாக்கும்.
12. குடல் இரைப்பை நாவல் பட்டை இரத்தத்தைச் சுத்தமாக்கும்; நாவல் பட்டை நீர் தொண்டை கழுவும் நீராகவும் பயன்படும். நாவல் பழம் சிறுநீர் பெருக்கும்; பசியைத் தூண்டும்; நாக்கு மற்றும் ஈறுகளைச் சுத்தம் செய்யும், குடல், இரைப்பை, இதயத் தசைகளை வலுவாக்கும். நாவல் பழம் கிடைக்கும் சீசன்களில் நாவல் பழத்தை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. நாவல்பழம் தினமும் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
13. குங்குமப்பூ, தேன் மருந்து குங்குமப் பூவை சாப்பிட்டால் இரத்தம் பெருகும். அதுமட்டுமின்றி, குங்குமப்பூவை தினசரி ஒரு சிட்டிகை தேன் கலந்து சாப்பிட்டு வர இரத்தம் நன்கு சுத்தமாகும்.