32.9 C
Chennai
Friday, Aug 15, 2025
brushing hair 0
தலைமுடி சிகிச்சை

உங்க கூந்தலை எப்படியெல்லாம் சீவ வேண்டும் தெரியுமா?

பெண்களுக்கு அழகைத் தரும் கூந்தல் அதிகமாக உதிர பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் கூந்தலை சரியான முறையில் சீவாமல் ஏனோ தானோவென்றும், அவசர அவசரமாகவும் சீவுவது. இதனால் கூந்தாலானது அதிகமாக தான் உதிரும். ஆகவே இவ்வாறெல்லாம் கூந்தலானது உதிராமல், அழகாக நீளமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் கூந்தலை சீவும் போது ஒரு சிலவற்றை நினைவில் கொண்டு சீவ வேண்டும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அவை என்னென்னவென்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்..

கூந்தலை சீவ சில டிப்ஸ்…
1. தலைக்கு குளித்தவுடன் கூந்தலை சீவ வேண்டாம். ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவும் போது முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சீப்பைக் கொண்டு சீவினால், முடியானது கொத்தாக வேரோடு தான் வரும். ஆகவே தலைக்கு குளிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், 10 நிமிடம் முன்னர் எழுந்து தலைக்கு குளித்து, நன்கு முடியானது காய்ந்ததும், பின் சீப்பை போடுங்கள்.

2. கூந்தலை சீவும் போது தலைச் சருமத்திலும் நன்கு சீவ வேண்டும். கூந்தலும், தலைச்சருமமும் ஒன்றல்ல. ஆகவே கூந்தலை சீவும் போது தலைச்சருமத்தில் நன்க படும்படி சீவினால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்க்கால் நன்கு வளரும். இவ்வாறு தினமும் செய்தால் கூந்தலானது நன்கு ஆரோக்கியமாக வளரும்

3. கூந்தலை முதலில் சீவ ஆரம்பிக்கும் போது, கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் கூந்தலில் முடிச்சுகளானது முனையிலேயே அதிகமாக இருக்கும். ஆகவே அப்போது முதலில் அந்த முடிச்சுகளை அகற்றிப் பின் ஆரம்பித்தால் கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லையென்றால் கூந்தல் வேரோடு தான் வரும்.

4. அடர்த்தியான, நீளமான கூந்தல் இருந்தால், சீவும் போது இரண்டாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியாக சீவலாம். இதனால் கூந்தலில் சிக்குகள் அதிகம் ஏற்படாது.

5. கூந்தலை சீவும் போது அடிக்கடி ஸ்டைலை மாற்றுங்கள். ஏனென்றால் கூந்தலை அடிக்கடி ஒரே ஸ்டைலில் சீவினால் கூந்தலானது உதிரும். உதாரணமாக, கூந்தலை எப்போதும் பின்புறமாகவே எடுத்து சீவினால், நெற்றியானது பெரிதாகிக் கொண்டே இருக்கும். ஆகவே அடிக்கடி மாற்றி சீவுங்கள்.

ஆகவே மேற்கூரியவாறெல்லாம் நினைவில் கொண்டு கூந்தலை சீவுங்கள், கூந்தல் உதிராமல், நீளமாக இருப்பதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.brushing hair 0

 

 

Related posts

வெள்ளை முடி அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க..!

nathan

முடி நன்கு வளர

nathan

இளநரையை போக்கும் மூலிகை தைலம்!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான கூந்தலுக்கு இயற்கைக் குறிப்புகள்

nathan

தலைக்கு சீகைக்காயைப் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!!!

nathan

இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…அதுவும் இயற்கையான முறையில்..முடி சரசரனு வேகமா வளர..

nathan

உங்களுக்கு தெரியுமா நரை முடி வர நீங்க தினமும் சாப்பிடும் இந்த உணவுகள் தான் காரணம்!

nathan

ஆண்களே வழுக்கைத் தலையில் முடி வளரனுமா?

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை தூண்ட வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

nathan