28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
13 1507901232 07 1446874683 05 fever 26 1501069831
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா காய்ச்சலுக்கான அருமையான நாட்டு மருத்துவ குறிப்புகள்!

தற்போது மழைக்காலமாக இருப்பதாலும் மற்றும் திடீரென வெப்பநிலை ஏற்படும். இந்த சீசன் மாற்றங்களால் சுகாதார பிரச்சினைகள் பலருக்கு ஏற்படும். இதனால் காய்ச்சல், சளி போற்ற தொற்று நோய் வருவது பொதுவான ஒன்றாகும். பயப்படத்தேவயில்லை இதற்கான சிகிச்சை உங்கள் சமையலறையில் இருக்கின்றன. இயற்கை பொருட்கள் பயன்படுத்தி இந்த காதார பிரச்சினைகளை குறைக்க சில எளிய வீட்டு வைத்தியம் உள்ளன. என்ன என்று பார்போம்!!

பூண்டு
சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய பூண்டை நாம் பயன்படுத்த வேண்டும் அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது. சளி பிடித்திருக்கும் போது, பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம் 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை தேனுடன் சேர்த்து தினமும் இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும்.

தேன் மழைக்காலம் என்றாலே சளி பிரச்னைகள் அதிகமாக இருக்கும். இரண்டு அங்குல நீளம் உள்ள இஞ்சியை தோலை நீக்கி, கழுவி, ஆறிய நீர் விட்டு அரைக்கவும். பட்டு போல் இல்லாமல் மிக்சியில், இரண்டு முன்று சுற்று சுற்றினால் போதும். இதை வடிக்கட்டியதும், இந்த சாற்றில் தேன் கலந்து சாப்பிட வேண்டும். இது உடல் நலனுக்கு நல்லது.

இலவங்கப் பட்டை உலகின் பழமையான மசாலாகளில் ஒன்றாகும். பட்டை பல்வேறு சுகாதார நலன்கள் கொண்ட மிகவும் அதிக எதிர்ப்பு ஆக்சிஜனேற்றி செயல்பாடு உள்ளது. இலவங்கப் பட்டை 100 கிராம், மிளகு, திப்பிலி ஆகியவை தலா 10 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். காலை வெறும் வயிற்றில் இரண்டு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் தலைபாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குணமாகும்.

துளசி துளசி ஒரு குத்துச்செடி. இதில் வெள்ளை துளசி மற்றும் கருந்துளசி என்ற இரு வகைகள் உண்டு. துளசியில் இருமலை குணப்படுத்தும் யூஜினல் மற்றும் சில வேதி பொருட்கள் உள்ளன. துளசி செடியை நன்கு நறுக்கி சிறிது மிளகுடன் கலந்து கசாயம் போட்டு காலை, இரவு குடித்து வந்தால் குளிர்காய்ச்சல், கோழை, இருமல், தொண்டை வறட்சி நீங்குகிறது. வீட்டில் ஒரு துளசி செடி வளர்த்து தினசரி அதன் இலையை உண்டு வந்தால் சளித்தொல்லையே வராது.

கொத்தமல்லி விதை கொத்தமல்லி விதை இரண்டையும் தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த தண்ணீரை லேசான சூட்டில் சாப்பிட்டு வந்தால் வெயில் காலங்களில் ஏற்படும் சளி குறையும். கொத்தமல்லி விதை வைட்டமின்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உதவும் ஊட்டச்சத்துகள் கொண்டிருக்கின்றன.

ளி,கபம், நெஞ்சு சளி, குணமாக வேப்பிலையுடன் ஓமவல்லி இலையை அரைத்து நெற்றியில் தடவிவர சளி சரியாகும் தூதுவளை, ஆடாதோடா, கண்டங்கத்திரி இலையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து கஷாயம் செய்து தேனுடன் கலந்து சாப்பிட, நாள்பட்ட கட்டிய சளியும் கரையும். கருந்துளசியை பிழிந்து, சாரு எடுத்து, தினமும் காலை மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட சளி – கபம், மார்பு சளி குணமாகும். ஆடாதோடா இலையை போடி செய்து தேன்கலந்து தினமும் சாப்பிட்டு வர, இருமல் சளி நிற்கும் கடுக்காய் பொடியுடன் நெல்லி பொடியையும் கலந்து தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம் நீங்கும்.

நாட்டு மருத்துவம் குழந்தைகள் சளியினால் மூச்சு விட சிரமபட்டால், சிறிது தேங்காய் எண்ணெய் மூக்கில் தடவிட, சிரமம் குறையும் அமுக்கிராங்கிழங்கு பொடி செய்து, தினமும் இரவில் பாலுடன் சாப்பிட்டு வந்தால்,கபம் போகும் தூதுவளை ரசம் அல்லது தூதுவளை சூப் குடித்தால் சளி போய்விடும் தேங்காய் எண்ணையை கற்பூரம் சேர்த்து சுடவைத்து நெஞ்சில் தடவினால், நெஞ்சு சளி குணமாகும். ரோஜா பூவை முகர்ந்து பார்த்தல் மூக்கடைப்பு நீங்கும் அருகம்புல் சாரு சளிக்கு மிகவும் நல்லது. மாதுளம் பழம் சளிக்கு மிகவும் நல்லது.மாதுளம் பழச்சாறை எலுமிச்சம் சாருடன் கலந்து சாப்பிட்டால் சளி சரியாகும். கற்பூரவள்ளி இலையை சூடாக்கி, நெற்றியில் பற்று போட்டால், நெற்றியில் கோத்திருக்கும் நீர் வெளியேறும்

காய்ச்சல் குணமாக சித்த வைத்தியம் நிலவேம்பு குடிநீர் அணைத்து விதமான காய்ச்சலையும் குணபடுத்தும். ஈர பசையுடன் உள்ள வேப்பமர பட்டையை இடித்து அதில் கால் பங்கு சீரக பொடியுடன் பசும்பாலில் கலந்து சாப்பிட காய்ச்சல் குணமாகும். திப்பிலியுடன் , குப்பைமேனி செடியை பொடிசெய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் சரியாகும் துளசி, வில்வ இலை, வெப்ப இலை, சந்தனம், கடுக்காய், மிளகு, சிற்றரத்தை ஆகியவை பொடியாக அரைத்து காயவைத்து கொண்டால், காய்ச்சல் வரும் சமயம் 1 தேக்கரண்டி வென்னீரில் கலந்து காலை மாலை குடித்து வர, சுரம் குணமாகும் வேப்பிலையை வறுத்து அடியில் வைத்து படுத்தால், சுரம் போய்விடும். உத்தாமணி-வல்லாரை இலைகளை மிளகுடன் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால், காய்ச்சல் சரியாகும்.

சளி இருமல் குணமாக சித்த வைத்தியம் சீரகத்தை வறுத்து பொடிசெய்து, கல்கண்டுடன் சாப்பிட்டால் இருமல் குணமாகும். பொன்னாரை விதையை பசும்பால் விட்டு நன்றாக அரைத்து குழந்தைக்கு கொடுத்து வர, கக்குவான் இருமல் சரியாகும். நாட்பட்ட இருமல் நிற்க, முற்றின வெண்டைக்காயை சூப் பண்ணி சாப்பிட்டால், சிறிது சிறிதாக குணம் ஆகும் சுக்கு மிளகு திப்பிலி சம அளவில் கலந்து போடி செய்து தினமும் 3 வேலை தேனுடன் கலந்து சாப்பிட தொண்டை வலி சரியாகும்.

13 1507901232 07 1446874683 05 fever 26 1501069831

Related posts

உங்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளதா? மேலும் இந்த பானங்களை அடிக்கடி குடியுங்கள்…

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறைக்க ஓடுனா மட்டும் போதாது!

nathan

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி? கட்டாயம் இத படிங்க!

sangika

உங்கள் கவனத்துக்கு கையில இந்த தசை இருக்கா? இல்லையா? அப்ப இத படிங்க!

nathan

உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?தெரிந்துகொள்வோமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…இரட்டையர்களுக்கு வெவ்வேறு தந்தை கூட இருக்கலாம் என தெரியுமா?

nathan

அரிசியா, கோதுமையா? – நீரிழிவு நோயாளிகள் எதை சாப்பிடலாம்

nathan

உடல் வீக்கத்தால் அவதியா? இதோ குணமாக்கும் மருந்து

nathan

வாழைத்தண்டை ஜூஸாக்கிக் குடித்தால் இத்தனை நன்மைகளாம்!…

sangika