2. படுக்கும் போது குப்புற படுக்கக் கூடாது. ஆனால் அது தான் வசதியாக இருக்கும். அப்படி படுக்கும் போது முகமானது, தலையணையால் நீண்ட நேரம் அழுத்தப்பட்டு சருமமானது சுருக்கத்தை அடைகிறது. ஆகவே எப்போதும் நேராக படுக்க துவங்குங்கள்.
3. உடலானது திடீரென்று மெலிந்துவிட்டால் சுருக்கங்கள் ஏற்படும். எதற்காக விரைவில் எடையை குறைக்க வேண்டும். நமது சருமமானது ஒரு எலாஸ்டிக் போல, நாம் எவ்வளவு வேண்டுமானாலும் குண்டு ஆகலாம், அதற்கு ஏற்றாற் போல் நமது சருமமும் விரிவடையும். ஆனால் திடீரென்று மெலிந்து விட்டால், நமது சருமம் உடனே சுருங்காது. அப்போது சுருக்கங்கள் தான் ஏற்படும். ஆகவே பொறுமையாகவே உடல் பருமனை குறையுங்கள்.
4. தினமும் சரியாக தூங்க வேண்டும். வேலைப்பளு அதிகமாக இருக்கிறது என்று வேலை செய்யும் நாட்களில் சரியாக தூங்காமல், வார இறுதியில் நன்றாக தூங்கினால் மட்டும் நல்லதல்ல. ஆகவே தினமும் அழகான தூக்கத்தை தூங்கினால், உடலில் சுருக்கங்கள் தோன்றாது.
5. கண்களில் தூசி விழுந்து விட்டால் கண்களை உடனே விரல்களால் தேய்க்கக்கூடாது. அதற்கு பதிலாக கண்களை தண்ணீரால் கழுவுங்கள். இல்லையென்றால் கண்களைச் சுற்றி சுருக்கங்கள் வர ஆரம்பித்துவிடும்.
6. அடிக்கடி முகத்தை சுளித்துக் கொண்டு இருப்பதாலும், சுருக்கங்கள் ஏற்படும். அதேபோல் வாயை எப்போதும் குவித்துக் கொண்டு, சுளித்துக்கொண்டு இருந்தால், வாயைச் சுற்றி சுருக்கங்கள் ஏற்படும். ஆகவே எப்போதும் சற்று சிரித்துக் கொண்டு இருங்கள், இதனால் முகமானது சுருக்கத்தை அடையாமல் அழகாக இருக்கும்.
ஆகவே அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், எப்போதும் சிரித்துக் கொண்டு இருங்கள். மேலும் மேலே சொன்ன செயல்களையெல்லாம் தவிர்த்துவிடுங்கள்.