25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Best 7 Body Fitness Tips For WomenWomen Fitness And
ஆரோக்கியம்எடை குறைய

வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் குறைக்க

அடிவயிற்றில் கொழுப்புக்கள் சேர்ந்தால், அதனைக் கரைப்பதற்கு ஏராளமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதில் உடற்பயிற்சிகள், டயட் மட்டுமின்றி, ஜூஸ்களும் உதவும். அந்த ஜூஸ்கள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
Best 7 Body Fitness Tips For WomenWomen Fitness And

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், தொங்கிக் கொண்டிருக்கும் தொப்பையை வேகமாகக் குறைக்கலாம். சரி, இப்போது பானைப் போன்று வீங்கியுள்ள தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ்களைப் பார்ப்போமா!

ஜூஸ் 1
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் – 1
எலுமிச்சை – 2
புதினா – சிறிது
துருவிய இஞ்சி – 2
டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் வெள்ளரிக்காயை அரைத்து, அதில் எலுமிச்சைகளை பிழிந்து புதினாவை பொடியாக நறுக்கி சேர்த்து, இஞ்சியையும் உடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தினமும் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வரும் போது, 15 நாட்களிலேயே உங்கள் தொப்பையில் ஓர் நல்ல மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்.

ஜூஸ் 2
தேவையான பொருட்கள்:
பூண்டு – 3 பற்கள்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை – 1
வெதுவெதுப்பான நீர் – தேவையான அளவு
செய்யும் முறை
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையின் சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பூண்டு பற்களை வாயில் போட்டு மென்று விழுங்கிய பின், இந்த ஜூஸைக் குடிக்க வேண்டும். ஒருவேளை உங்களால் பூண்டு பற்களை சாப்பிட முடியாவிட்டால், அதனை தட்டி ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

ஜூஸ் 3
தேவையான பொருட்கள்:
ஹார்ஸ்ரேடிஷ் – 100 கிராம்
இஞ்சி – சில துண்டுகள்
எலுமிச்சை – 3
தேன் – 4 டேபிள் ஸ்பூன்
பட்டை தூள் – 2 டீஸ்பூன்
செய்யும் முறை
ஹார்ஸ்ரேடிஷ் மற்றும் இஞ்சியை மிக்ஸியில் போட்டு ஒன்றாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதில் தேன், எலுமிச்சை சாறு, பட்டை தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, காலையில் உணவு உண்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம் தொங்கும் தொப்பையை சீக்கிரம் குறைக்கலாம்.

ஜூஸ் 4
தேவையான பொருட்கள்:
கற்றாழை ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்யும் முறை:
1 டம்ளர் நீரில் கற்றாழை ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அடிவயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைப்பதில் கற்றாழை மிகவும் சிறப்பான பொருள். மேலும் இது குடலை சுத்தம் செய்து, வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கும்.

ஜூஸ் 5
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் சீடர் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை – 1
பட்டைத் தூள் – 1
சிட்டிகை தேன் – தேவையான அளவு
தண்ணீர் – 1 டம்ளர்
செய்யும் முறை:
முதலில் ஒரு டம்ளர் நீரில், ஆப்பிள் சீடர் வினிகர், எலுமிச்சை சாறு, பட்டைத் தூள், தேன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர, தொப்பை குறைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த 2 பொருட்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும்.

nathan

கருச்சிதைவின் வெவ்வேறு விதங்கள்

sangika

மெலிந்த உடல் பருக்க – தந்த ரோகம் – பல்பொடி –

nathan

‘கால்சியம் பற்றாக்குறை எப்போது ஏற்படும்?”

nathan

எளிய வழியில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

nathan

உடலுக்கு ஆரோக்கியமான ஹர்பல் டீ…!

sangika

தினமும் 100 கலோரி எரிக்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்

nathan

தொப்பையை குறைக்க இதை 10 நாட்கள் சாப்பிடுங்க…!

nathan

பயனுள்ள தகவல்.. தொப்பையை குறைக்கும் அதிசய ஜூஸ்!!!!

nathan