26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
14 1507975438 3
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா பெண்களின் கருப்பை பிரச்சனைக்கு வீட்டிலேயே இருக்கிறது மருந்துகள்!

குழந்தை பெண்ணாய் பிறக்கும்போதே அதன் சின்னப்பைகளில் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை சினைமுட்டைகள் இருக்கிறது. குழந்தை வளர வளர இந்த எண்ணிக்கை குறைந்து 35000 முதல் 45000 ஆக குறைந்து விடுகிறது.

மற்றவை சிதைந்து விடுகிறது. இருந்த போதிலும் ஒரு பெண்ணின் வாழ்நாளில் அவளது சினைப்பையில் 450லிருந்து 500 வரையிலான சினை முட்டைதான் முதிர்ச்சி அடைகிறது.இச்சினைப்பைகளில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் அவள் வாழ்வில் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு பொறுப்பேற்கிறது.

சினைப்பையில் உற்பத்தியாகும் பெண்களுக்கே உரிய முக்கியமான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டொரோன் எனும் இரு ஹார்மோன் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால்தான் பெண் பருவமடைகிறாள். பருவமடைந்த பின்பு மாதவிடாய் முற்று பெரும் வரை ஒவ்வொரு மாதமும் இந்த ஹார்மோன் உத்தரவுப்படிதான் கருத்தரிப்பதற்கு தயார் ஆகிறாள்.

சினைப்பை நீர்க்கட்டி : மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, மூன்று மாதம், இரண்டு மாதம் என தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் விடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல சிகிச்சையளிக்க வேண்டும்.

காரணம் : இந்நோய்க்கான காரணத்தை அறுதியிட்டு கூற முடியாது பருவமடைந்த பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் ஏற்படலாம். ஆனால் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில் தான் வெளியில் தெரிகிறது. மரபணு மூலமாக, பரம்பரை பரம்பரையாகக் கூட வரலாம். அதே போல ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பது, டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரப்பது, புரோலாக்டின் அதிகரிப்பது தான் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இதனை அன்றாடம் நம் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே வராமல் தடுக்க முடியும்.

விட்டமின்கள் : பெண்களின் கருமுட்டை உற்பத்திக்கு தேவைப்படும் சக்திகளில் முதன்மையானது விட்டமின் டி. கருப்பை கோளாறுகள் வருவதற்கான காரணங்களில் 65 முதல் 85 சதவீதத்தினர் விட்டமின் டி குறைப்பட்டினால் தான் ஏற்படுகிறது. இதனால் விட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக காலை நேர வெயில் படுமாறு உங்களது தினசரிகளை மாற்றிக் கொள்ளலாம். இப்படிச் செய்வதனால் உங்களது மெட்டபாலிசம் தூண்டப்பெற்று மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்திடும்.

ஆப்பிள் சிடர் வினிகர் : ஒரு கிளாஸ் சூடான நீருடன் இரண்டு டீஸ்ப்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் இரண்டு டீஸ்பூன் சேர்த்து குடிக்க வேண்டும். இதனை ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இப்படிக் குடிப்பதனால் உடலில் இன்ஸுலின் அளவு சீராக இருக்கும். இதனால் கருமுட்டை உற்பத்தியாவதும் மாதந்தோறும் அது உடைவதும் சீராக நடைபெறும்.

தேங்காய் எண்ணெய் : சுத்தமான தேங்காய் எண்ணெய் மூலமாக கூட கருப்பை நீர்க்கட்டிகளை நம்மால் வராமல் தடுக்க முடியும். இதற்கு பாக்கெட்டுகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும், அதில் கலக்கப்பட்டிருக்கும் கெமிக்கல்களால் தேங்காய் எண்ணெயின் முழு பலன் உங்களுக்கு கிடைக்காது. தினமும் ஒரு ஸ்பூன் அளவாவது தேங்காய் எண்ணெயை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஃபேட்டி ஆசிட், ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது.சீரான அளவில் இதனை எடுத்துக் கொண்டால் இன்ஸுலின் சுரப்பை சீராக வைத்திருக்கும். அதே போல கெட்டக் கொழுப்பு ரத்தத்தில் கலப்பதையும் தடுத்திடும்.

ஆமணக்கு எண்ணெய் : ஆமணக்கு எண்ணெயை லேசாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான பருத்தித் துணியைக் கொண்டு எண்ணெயில் முக்கி அடிவயிற்றில் ஒத்தடம் கொடுத்திடுங்கள் அப்படியில்லை என்னில் ஆமணக்கு எண்ணெயை வயிற்றில் தடவிக்கொண்டு ஹாட்பேக் ஒத்தடம் கொடுக்கலாம். பின்னர் வயிற்றை சுத்தமாக துடைத்துவிடுங்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை இப்படிச் செய்யலாம். ஆமணக்கு எண்ணெய் சருமத்தில் ஊடுருவும் ஆற்றல் கொண்டது. அதோடு உள்ளுருப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் ஹார்மோன் மாற்றம் ஏற்படாது, இதனால் கருப்பை கோளாறுகள் ஏற்படாது.

க்ரீன் டீ : சூடான நீரில் க்ரீன் டீ மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் க்ரீன் டீ வரை குடிக்கலாம். இதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் கருப்பை சீராக வேளை செய்வதற்கான ஹார்மோன்களை தூண்டிடும். அதிக எடை கூட கருப்பை கோளாறுகள் வருவதற்கு ஒரு வகை காரணமாக இருக்கிறது. க்ரீன் டீ குடிப்பதனால் கெட்ட கொழுப்புகள் உடலில் சேராது. இதனால் அதீத உடல் எடையும் தவிர்க்கப்படும்.

கற்றாழை : கற்றாலை ஜூஸ் காலை உணவுக்கு முன்பு சாப்பிட்டு வர வேண்டும். இதனை தினமும் கூட சாப்பிடலாம். கற்றாழையில் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை நீக்கும் ஆற்றல் கொண்டது. அதோடு கருப்பை இயங்குவதற்கான ஆற்றலையும் கொடுக்கிறது. மாதவிடாய் பிரச்சனையிருப்பவர்கள் இதனை தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதோடு கருப்பை நீர்க்கட்டிகள் வராமல் தடுத்திடும்.

நெல்லிக்காய் : ஒரு டம்பளர் நீருடன் அரை கப் நெல்லிச் சாறு கலந்து குடிக்க வேண்டும். இதனையும் நீங்கள் தினமும் குடிக்கலாம். உங்களுக்கு வேறு சில உடல் உபாதைகள் அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் சூப்பராக்ஸைடு டிஸ்முடேஸ் (SOD) என்னும் உட்பொருள் உள்ளது. இது ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாப்பளித்து, புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும். நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்யும். மேலும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கும்.

கருப்பட்டி : பனைமரத்திலிருந்து எடுக்கப்படும் பதனீரைக் காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்ற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கிடைக்கிறது. கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து, உடலை சுறுசுறுப்பாக்குவதோடு, மேனி பளபளக்கவும் வைக்கும். பெண்கள் பூப்பெய்திய நேரத்தில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும், இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பபையை வலுப்பெறவும் செய்யும் ஆற்றல் கொண்டது கருப்பட்டி.

சீரகம் : தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும். சீரகத்தில் இருக்கும் டாக்ஸின்கள் ரத்ததை சுத்தப்படுத்துகிறது, அதோடு உடலில் தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது.

எள்ளு : வெள்ளை எள்ளைக் காட்டிலும் கறுப்பு எள்ளில்தான் அதிக சத்துக்கள் உள்ளன. மக்னீசியம் அதிக அளவில் இருப்பதால், சர்க்கரை நோயைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களை அண்டவிடாமல் தடுக்கும். பைட்டோஸ்டீரால் (Phytosterols) எனப்படும் அரிய வகைச் சத்து இதில் இருக்கிறது. இது, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.25 கிராம் எள்ளில், ஒரு கிளாஸ் பாலைவிட அதிக அளவில் கால்சியம் உள்ளது. துத்தநாகத்தை அதிகம் கொண்டிருக்கக்கூடிய உணவு எள். இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும். ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் (Mono Unsaturated Fatty Acid) அதிகம் இருப்பதால், கெட்ட கொழுப்பு குறையும்.

வெந்தயம் : நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது.
14 1507975438 3

Related posts

தெரிந்துகொள்வோமா? குழந்தை வளர்ப்பில் அம்மா முக்கியமா? அப்பா முக்கியமா?

nathan

நோய்கள் வராமல் தடுக்கும்…வந்தாலும் விரட்டும்!மருந்து கஞ்சி

nathan

உடற்பருமன் சுட்டெண் (body mass index)

nathan

வீட்டில் கர்ப்பத்தை உறுதி செய்வது எப்படி

nathan

தெரிஞ்சிக்கங்க…சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டுமா?

nathan

மரிஜுவானா எனப்படும் கஞ்சாவில் இருக்கும் மருத்துவ நன்மைகள்!!!

nathan

சிறுநீரக பாதிப்புடையோர் சாப்பிடக் கூடியவை

nathan

இந்த எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்

nathan

சிசேரியன் பிரசவம் எனில் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்குமா?

nathan