23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
கர்ப்பிணி பெண்களுக்குமருத்துவ குறிப்பு

கர்ப்ப காலத்தில் பெண்கள் மீன் சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் மீன் சாப்பிடலாமா?

மீனில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் மற்றும் புரச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. கர்ப்பமாக இருக்கும் போது அவைகள் உங்களுக்கும் உங்களின் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கும் பல நன்மைகளை அளிக்கும்.ஆனால் வயிற்றில் உள்ள உங்கள் சிசுவிற்கு எந்த ஒரு பாதிப்புள் ஏற்படாமல் இருக்க, கடல் உணவுகளை உண்ணும் போது நீங்கள் கூடுதல் கவனத்தை மேற்கொள்ள வேண்டும். சில கடல்வாழ் மீன்களில் பாதரசத்தின் தடயங்கள் இருக்கும். இது வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சிக்கு பல ஆபத்துக்களை உண்டு பண்ணலாம்.

மீனை நன்றாக சமைத்தாலும் கூட இது அப்படியே தான் இருக்கும். கர்ப்ப காலத்தில் கூடுதல் அளவிலான பாதரசத்தை உட்கொண்டால், சிசுவின் மூளை மற்றும் மத்திய நரம்பியல் அமைப்பின் வளர்ச்சியை இது வெகுவாக பாதிக்கும். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீன்கள் உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் வாரம் ஒரு முறை என மாற்றிக் கொள்ளுங்கள்.

நீங்கள் உண்ணும் மீன் பச்சையாக இல்லாமல் நன்றாக சமைக்கப்பட்டிருக்க வேண்டும். சரியாக சமைக்கப்படாத மீனால், கர்ப்பிணி பெண்களுக்கு ஒட்டுண்ணி அல்லது பாக்டீரியா நோய்கள் தாக்கக்கூடும். இது அப்படியே சிசுவிற்கு பரவும். அதனால் எதிர்பாரா விளைவுகள் ஏற்படலாம்.

வாளை மீன், காணாங்கெளுத்தி மீன் மற்றும் சுறாமீன் போன்ற பெரிய கடல் மீன்களை தவிர்த்து விடுவது நல்லது. மாறாக உள்ளூர் குளத்தில் கிடைக்கும் கட்லா மீன், உல்ல மீன் மற்றும் கண்ணாடி கெண்டை மீன் போன்ற மீன்களை உண்ணலாம். டப்பாவில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட மீன்களில் பதப்பொருட்கள் அதிகமாக இருப்பதால் அவைகளை தவிர்த்து விடுவது நல்லது.

Related posts

கொய்யா…இதெல்லாம் மெய்யா?!

nathan

ஆண்களின் ஆசையை அதிகரிப்பதில் பெண்களின் ஆடைக்கு முக்கிய பங்குண்டு

nathan

வளர்ச்சிக்குத் தடையா?

nathan

தளும்புகள் ஏற்பட்டு விட்டால் இதை செய்யுங்கள்…

sangika

உங்களுக்கு தெரியுமா கருவில் இருப்பது என்ன குழந்தை என்று தெரிய அந்த காலத்தில் செய்த வினோதமான சோதனைகள் ?

nathan

மலம் கழிக்காமல் அடக்கியதால் இறந்த 16 வயது ஐரோப்பிய பெண் – மருத்துவர்கள் எச்சரிக்கை!!!

nathan

உங்களுக்கு தெரியுமா நீண்ட ஆயுள் பெற உடற்பயிற்சியை விட மது குடிப்பதே சிறந்தது

nathan

வீட்டில் உள்ள தரை பளிச்சிட !

nathan

தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்!

nathan