25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ld2268
முகப் பராமரிப்பு

கருவளையம் எதுக்கு வருகிறதென்று தெரியுமா?

முகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்று தான் கருவளையம். அத்தகைய கருவளையம் சிலருக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அது எதற்கு வருகிறது என்று பலரும் தெரியாமல் இருக்கின்றனர். மேலும் அவற்றை மறைக்க பல அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். கருவளையங்கள் உண்மையில் வருவதற்கு காரணம் நம்முடைய பழக்கவழக்கங்களே. அந்த ஒரு சில பழக்கவழக்கங்களால் நம் கண்களைச் சுற்றி கருப்பாக தோன்றும். அதுமட்டுமல்லாமல் ஒரு சில நோய்கள் இருந்தாலும் கருவளையமானது வரும். அந்த பழக்கவழக்கங்களை மாற்றினால் மற்றும் அது என்னென்ன நோய்கள் என்பதை தெரிந்து கொண்டு, அந்த பழக்கவழக்கங்களை செய்யாமல், நோய்களை தடுப்பதற்கேற்ற வழிமுறைகளை பின்பற்றி. நமது கண்களை பொலிவோடு அழகாக வைக்க, இதோ சில டிப்ஸ்…ld2268

மேக்கப் : சென்சிடிவ் சருமம் இருப்பவர்கள், அந்த சருமத்திற்கு அதிகமாக அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் அதிகமாக இருப்பதால், அவை சருமத்திற்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும். அதிலும் அத்தகைய அழகுப் பொருட்கள் பயன்படுத்தும் போது முதலில் கண்களிலேயே, அதன் அறிகுறியான அலர்ஜி தெரியும். அந்த அலர்ஜி நாளடைவில் கருவளையமாக மாறிவிடுகிறது. ஆகவே அவ்வாறு தெரிந்தால் கண்ட அழகுப் பொருட்களை எல்லாம் வாங்கி உபயோகிக்காமல், ஹைப்போ-அலர்ஜிக் காஸ்மெடிக்ஸ்களை வாங்கி பயன்படுத்தினால், எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.

நோய்கள் : அனிமியா மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்றவை இருந்தால், கருவளையமானது ஏற்படும். ஆகவே அத்தகைய பாதிப்பு இருப்பவர்கள், உடனடியாக மருத்துவரை அணுகி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அத்தகைய மருந்துகள் நோய்களை மட்டும் குணப்படுத்துதோடு, கண்களைச் சுற்றி உள்ள கருவளையங்களையும் போக்கும்.

களைப்பு மற்றும் தூக்கம் : அளவுக்கு அதிகமான வேலை இருப்பதால், உடலிலும், மனதிலும் அழுத்தமானது அதிகமாக ஏற்படும். இந்த செயல் கண்களைச் சுற்றி ஒரு வளையம் போன்றவற்றை ஏற்படுத்திவிடும். மேலும் சரியான தூக்கம் இல்லாவிட்டாலும், கண்களில் கருவளையமானது வரும். அதிலும் தூங்கும் போது குப்புற படுத்து தூங்கக்கூடாது. அதனால் முகத்திற்கு அழுத்தம் ஏற்பட்டு, கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

நீர் குறைவு : குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருந்தாலும் கருவளையமானது வரும். அதிலும் குறைவான அளவு நீரானது உடலில் இருந்தால், சரியான இரத்த ஓட்டமானது இல்லாமல், கண்களுக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து, கண்களில் கருவளையத்தை உண்டாக்கிவிடும். ஆகவே ஒரு நாளைக்கு குறைந்தது 5-6 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். அதனால் அழகான கண்களை எளிதாக பெறலாம்.

நிறமூட்டும் நிறமிகள் : சூரியக்கதிர்கள் சருமத்தில் அதிகம் படுவதால், நிறமூட்டும் நிறமிகளான மெலனின் உருவாக்கம் அதிகரிக்கிறது. எந்த இடத்தில் அதிகமான அளவு மெலனின் இருக்கிறதோ, அந்த இடம் கருப்பாக மாறிவிடும். ஆகவே வெளியே செல்லும் போது கண்களுக்கு சன்கிளாஸ் அணிந்து செல்ல வேண்டும். இதனால் கண்களில் சூரியக் கதிர்கள் படுவதைத் தடுக்கலாம்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை : புகைப்பிடித்தல், மது அருந்துதல், இரவு நேரங்களில் அதிக நேரம் ஊர் சுற்றுதல் போன்றவற்றாலும் கருவளையங்கள் வரும். மேலும் உடலிலேயே மற்ற இடங்களை விட, கண்களை சுற்றிள்ள பகுதி மிகவும் மெல்லியது. ஆகவே எந்த ஒரு நிகழ்வு உடலில் நடந்தாலும், அது முதலில் நம் கண்களிலேயே தெரிந்துவிடும். ஆகவே இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்.

Related posts

பால் போன்ற சருமம் கிடைக்க இதை முயன்று பாருங்கள்…

nathan

பெண்களே…. முகத்தை வெண்மையாக்கி, பொலிவை தரும் அற்புதமான பேஸ் பேக்!!!!

nathan

உங்களுக்கு தெரியுமா எவ்வளவு கருப்பா இருந்தாலும் இந்த காயை அரைத்து தேய்ச்சா ஒரே வாரத்துல கலராகிடலாம்…

nathan

ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவுவது நல்லது

nathan

இதோ எளிய நிவாரணம்! சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட ஐந்து எளிய வழிமுறைகள்!!!

nathan

உங்களுக்கு பிரகாசமான முகம் வேண்டுமா? ‘ஆல்கஹால் ஃபேசியல்’ முயன்று பாருங்கள்!!!

nathan

Homemade Face Mask-Pack For Brightening/Whitening And Glowing Skin

nathan

வீட்டிலேயே ப்ளீச் எப்படி செய்வது? அருமையாக ரெசிப்பிகள்

nathan

முகப் பொலிவிற்கு!

nathan