23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201710231033114846 2 1haircaretips. L styvpf
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

முடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பராமரித்தால், பெண்கள் கூந்தல் பிரச்சினையின்றி நிம்மதியாக வாழலாம்.

பெண்கள் தினமும் காலையில் அவசர அவசரமாக கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ கிளம்புகிறார்கள். அதே அவசரத்தில் தலையை சீவுகிறார்கள். கொண்டையோ, பின்னலோ போட்டுக்கொள்கிறார்கள். அதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள்தான்.

மனிதர்களைப்போன்று முடிக்கும் சுபாவங்கள் உண்டு. அதை உணர்ந்து முடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பராமரித்தால், பெண்கள் கூந்தல் பிரச்சினையின்றி நிம்மதியாக வாழலாம்.

201710231033114846 2 1haircaretips. L styvpf

திண்ணமான சுபாவம் கொண்ட முடி பெரும்பாலும் வறண்டுபோய் காணப்படும். இதை பராமரிப்பது சற்று சிரமம். குளித்த பின்பு சிறிது நேரம் மட்டும் நாம் சொல்வதை கேட்பதுபோல் காணப்படும் முடி பின்பு, அதன் வழக்கமான சுபாவத்தை காட்டத் தொடங்கிவிடும். எண்ணெய் தேய்த்து சீவி கட்டினால் சரியாகிவிடும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் எண்ணெய் நாம் குளிக்கும்போது முடியில் இருந்து நீங்கவேண்டும். இல்லாவிட்டால் முடியில் வியர்வையும், தூசும் கலந்து ‘பங்கல் இன்பெக்‌ஷன்’ தோன்றி, பொடுகு உருவாகிவிடும்.

திண்ணமான முடியை கொண்டவர்கள் தினமும் வீரியம் குறைந்த ஷாம்புவை பயன்படுத்தி கழுவவேண்டும். தலை ஓட்டுப்பகுதி சருமம் சுத்தமாக இருந்தால் பொடுகும், முடி உதிர்தலும் தோன்றாது. காலையில் தலையை கழுவ வாய்ப்பற்றவர்கள், இரவிலே கழுவி நன்றாக உலரவைத்துவிடவேண்டும். ஒவ்வொரு முறை ஷாம்பு போடும்போதும் கட்டாயம் கண்டிஷனிங் செய்யவேண்டும்.

கண்டிஷனிங் செய்யும்போது தலை ஓட்டில் படக்கூடாது. அகலமான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தி, முடியின் எல்லா இடமும் படும் விதத்தில் கண்டிஷனிங் செய்து விட்டு பின்பு கழுவவேண்டும். கூந்தல் நன்றாக உலர்ந்த பின்பு சிறிதளவு ‘ஹேர் ஜெல்’ பூசலாம். மாதத்தில் ஒரு தடவை ‘ஹாட் ஆயில் சிகிச்சை’ செய்வதும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை டீப் கண்டிஷனிங் சிகிச்சை செய்வதும் முடி மேலும் வறண்டு போவதை தடுக்கும்.

முடியின் தன்மைக்கும், முகத்தின் அமைப்புக்கும், பொதுவான உடை உடுத்தும் ஸ்டைலுக்கும் ஏற்ப கூந்தலை வெட்டிக்கொள்ளவேண்டும். அதில் ஆர்வம் கொண்டவர்கள் நான்கு அல்லது ஐந்து வாரங் களுக்கு ஒருமுறை முடியை ‘ட்ரிம்’ செய்துகொள்ளவேண்டும்.

மென்மையான குணம்கொண்ட மனிதர்களைப் போன்று மென்மைத்தன்மை கொண்ட கூந்தலும் இருக்கிறது. சில்க்கியாக இருப்பது இந்த முடியின் சுபாவம். சுருளாமல் நீண்டு கிடக்கும். தொட்டுப்பார்த்தால் பஞ்சுபோல் தோன்றும். எல்லா மாதிரியான ஹேர்கட்டிங்குக்கும் பொருத்தமான கூந்தல் இது. ரொம்ப மென்மையாக இருப்பதால் இதன் இறுதிப் பகுதி எளிதாக உடைந்துபோவது இதன் பலவீனம். அதனால் ஷாம்பு போட்ட பின்பு, ‘ஹேர் சிரம்’ பயன்படுத்த மறந்துவிடக்கூடாது.

அதை முடியின் மேல்பகுதியில் மட்டும் பூசிக்கொள்ளாமல், ஐந்து துளிகளை எடுத்து ‘பிளாட் ஹேர் பிரஷ்’ ஒன்றில் அதை தேய்த்து முடியில் முழுவதுமாக சீவுங்கள். இந்த வகை கூந்தலை அடிக்கடி சீவ வேண்டிய அவசியம் இல்லை. ஒருமுறை சீவிவிட்டு, விரல்களால் கோதி விட்டாலே போதும். எண்ணெய்த்தன்மை கொண்ட கூந்தல் என்றால், பிரச்சினை அதிகம். உஷ்ணம் அதிகரிக்கும்போதும், டென்ஷன் கூடும்போதும் எண்ணெய் அதிகம் சுரக்கும். இந்த கூந்தலைக்கொண்டவர்களின் மயிர்க்கால் எப்போதும் எண்ணெய்யில் ஊறியது போல் காட்சியளிக்கும். முடியின் கீழ்ப்பகுதி வறண்டு, பிளந்து காணப்படும். கூந்தலை அடிக்கடி கழுவாவிட்டால் சொறி ஏற்படும்.

‘பங்கல் இன்பெக்‌ஷன்’ வாய்ப்பு மிக அதிகம் என்பதால் தினமும் கூந்தலுக்கு ஷாம்பு போட்டு கழுவவேண்டியதிருக்கும். கழுவும்போது ‘ஹேர் ஸ்கிரபர்’ பயன்படுத்தி தலை ஓட்டு சருமத்தை தேய்த்து கழுவவேண்டும். வறண்டு போய் காணப்படும் முடியின் கீழ்ப்பகுதியில் மட்டும் கண்டிஷனர் போடலாம். முடி உலர்ந்த பின்பு, சீவுவதற்கு முன்பு ரொம்ப வறண்டு போய் காணப்பட்டால் சிரம் போட்டுக்கொள்ளலாம். தலை சருமத்தில் இன்பெக்‌ஷன் இருந்தால் 15 நாட்களுக்கு ஒருமுறை சிறிதளவு பீர் எடுத்து அதில் பஞ்சை முக்கி, மண்டை ஓட்டுப்பகுதியில் தேய்த்து கழுவுவது நல்லது.

கூந்தல் அலங்காரம் செய்ய விரும்பும் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

ஹேர் ஸ்கிரைப்பர்: முடியில் ஷாம்பு போடும்போது விரலால் மண்டையோட்டுப் பகுதியில் மசாஜ் செய்வதை சிறப்பாக செய்ய, ஹேர் ஸ்கிரைப்பர் உதவும். ரப்பரால் உருவாக்கப்பட்ட இதன் பற்கள், மண்டையோட்டுப் பகுதி சருமத்தில் பட்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

ஹேர் மூஸ்: ஷேவிங் நுரை வடிவத்தில் காணப்படும். இதை பயன்படுத்தினால் கூந்தலின் உள்பகுதி அடர்த்தியாக இருப்பதுபோல் தோன்றும்.

ஹேர் சிரம்: கூந்தலுக்கு பாலிஷிங் எபக்ட் கிடைப்பதற்கு உதவும். ஜொலிப்பு அதிகரிக்கும். முடி, ஒன்றுக்கு ஒன்று ஒட்டாமல் பிரிந்து அழகாக காணப்படும்.

ஹேர் மாஸ்க்: முடியை மென்மையாக்கும். இந்த மென்மைக்காகத்தான் ஹேர் கண்டிஷனர் பயன்படுத்தி வருகிறோம். ஹேர் மாஸ்க் அதன் நவீனமாகும்.

Related posts

இளநரையை போக்கும் சீயக்காய்

nathan

முடி கொட்டுவதை தடுக்கும் நெல்லிக்காய் தைலம்! மருத்துவ டிப்ஸ்!!

nathan

பெண்கள் வழுக்கை விழுவதைத் தடுக்க இயற்கை வழிகள்

nathan

உங்கள் தலைமுடி வறட்சியுடனும், பாதிக்கப்பட்டும் காணப்படுகிறதா?

sangika

இதனை ஒரு வாரம் பயன்படுத்தினாலே போதும்!! இளநரையை முழுமையாக போக்க வேண்டுமா:?

nathan

சிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தாது

nathan

தேங்காய் எண்ணெய் காம்பினேஷனில் உங்கள் கூந்தலுக்கான 5 டிப்ஸ் !!

nathan

இந்த எண்ணெயை எலுமிச்சை சாறுடன் மசாஜ் செய்க.. பொடுகு பிரச்சனைக்கு தீர்வு

nathan

சருமம், கூந்தலுக்கு அழகு தரும் அரிசி கழுவிய தண்ணீர்

nathan