தேவையான பொருட்கள்
- கடலை மாவு – 4 கப்
- பசும்பால் – இரண்டரை கப்
- நெய் – இரண்டரை கப்
- சர்க்கரை – 2 கப்
- ஏலக்காய் – 2 தேக்கரண்டி
- உலர்ந்த திராட்சை – சிறிதளவு
செய்முறை
நெய்யை உருக்கி கடலை மாவில் சேர்க்கவும்.
பாலையும் காய்ச்சி கடலை மாவில் விட்டு நன்கு கலக்கவும்.
கடலை மாவை தளர்த்தியாக பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.
பின்னர் ஒரு பெரிய ஜல்லடையில் மாவைக் கொட்டி சலிக்கவும்.
இப்போது வரும் பூந்திகளை வாணலியில் நெய் விட்டு அதில் போடவும்.
சர்க்கரை அரைத்து வாணலியில் சேர்க்கவும்.
ஏலக்காய், திராட்சை ஆகியவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி சூடாக இருக்கும்போதே லட்டுகளாக உருட்டிக் கொள்ளவும்.