podemass1
அறுசுவைசைவம்

சிக்கன் பொடிமாஸ்

தேவையானப் பொருட்கள் :

சிக்கன் துண்டுகள் – அரை கிலோ,
சின்ன வெங்காயம் – 50 கிராம்,
பச்சை மிளகாய் – ஐந்து,
எண்ணெ‌ய் – அரை கப்,
கறிவேப்பிலை – இரண்டு கொத்து,
கடுகு – ஒரு டேபிள் ஸ்பூன்,
உளுந்து – அரை டீஸ்பூன்,
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்,
கடலைப் பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்,
தேங்காய் துருவல் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

podemass1செய்முறை :

சிக்கனை நன்றாக கழுவி கொள்ளவும்.

சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சிக்கனை சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேக வைத்த சிக்கனை உதிர்த்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எ‌ண்ணெ‌ய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

எல்லாம் நன்கு சிவந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு, ஐந்து நிமிடம் வதக்கவும்.

கடைசியாக தேங்காய்த் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

சூப்பரான கோழி பொடிமாஸ் ரெடி.

Related posts

கோவைக்காய் பொரியல்

nathan

பலாக்காய் குழம்பு செய்ய வேண்டுமா!

nathan

தர்பூசணிக் கூட்டு

nathan

கோழி ரசம்

nathan

சுவையான மைசூர் போண்டா….

sangika

வாழைக்காய் பொரியல்

nathan

சத்தான சுவையான வரகரிசி தக்காளி சாதம்

nathan

சூப்பரான மட்டன் கடாய்

nathan

மஷ்ரூம் தொக்கு

nathan