25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
Manfaat Rebusan Daun Sirih Untuk Hilangkan
எடை குறையமருத்துவ குறிப்பு

உடல் எடையை குறைக்க உதவும் வெற்றிலை

ஆயுர்வேதத்தின் படி, வெற்றிலை மற்றும் மிளகு நம் உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு கொழுந்து வெற்றிலை ஒன்றை எடுத்து அதனுடன் 5 மிளகு உருண்டைகளை சேர்த்து மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.

இவ்வாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால், இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாகுவதோடு, மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்க உதவுகிறது.

வெற்றிலைகளில் இரைப்பைக் குடல் வலி நீக்கி குணங்கள் அடங்கியுள்ளது. அதே போல் சரியான செரிமானத்திற்கும் உதவிடும். வெற்றிலையை மெல்லுவதால் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, வயிற்றில் சளி உடைய பொருளை அதிகரிக்கும். இதனால் அசிடிட்டி ஏற்படாமல் தடுக்கப்படும். இதனால் காஸ்ட்ரிக் அமிலத்தின் தீய தாக்கங்களில் இருந்து வயிற்றின் உட்பூச்சு பாதுகாக்கப்படும் என ஒரு ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

வெற்றிலையை மெல்ல ஆரம்பித்த உடனேயே வாயில் எச்சில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நீங்கள் உண்ட உணவை செரிக்க சொல்லி வயிற்றுக்கு சிக்னல் அனுப்பும் உங்கள் வாய். இதனால் செரிமானம் சிறப்பாக செயல்பட தொடங்கும். வயிற்றில் இருந்து நச்சுக்களை நீக்கவும் இது உதவுகிறது.

குறிப்பு: மஞ்சள் நிறத்தில் அல்லது அழுகிய நிலையில் உள்ள வெற்றிலையை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.Manfaat Rebusan Daun Sirih Untuk Hilangkan

Related posts

ஆண்மை பிரச்சனைகளை தீர்க்கும் இயற்கை வயாகரா அமுக்கிராகிழங்கு

nathan

கல்யாண முருங்கை இலையில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கா? நம்ப முடியலையே…

nathan

உடல் எடையை மிக வேகமாக குறைக்க வெல்லம்!….

sangika

உங்களுக்கு தெரியுமா இந்த ஒரு பழம் சாப்பிட்டா போதும் புற்றுநோயை வராமல் தடுக்க முடியும்!

nathan

சுற்றுலா சுகமானதாக அமைய ஆலோசனைகள்

nathan

கர்ப்ப காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

nathan

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியவைகள்!!!

nathan

இந்த 5 வகையான பெண்களில் உங்களுக்கு பிடிச்ச நபர் யார்?

nathan

மாணவர்களே நீங்களும் தலைவர் ஆகலாம்

nathan