26.9 C
Chennai
Sunday, Nov 24, 2024
ld461305284 1
உடல் பயிற்சி

சில யோகாசனங்களைச் செய்வதன் மூலமும் தைராய்டு சரி செய்ய முடியும்.

ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னையாக தைராய்டு குறைபாடு இருக்கிறது. தைராய்டு சுரப்பு குறைந்தால் உடல் பருமன், கால் வீக்கம், மாதவிடாய் கோளாறுகள், அதிகச் சோர்வு, தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாகச் சுரந்தால் உடல் மெலிதல், கை நடுக்கம், அதிகமான இதயத்துடிப்பு, அதிக வியர்வை போன்றவை தோன்றும். இதற்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது அவசியம் என்பதைப் போலவே, சில யோகாசனங்களைச் செய்வதன் மூலமும் தைராய்டுசுரப்பியின் வேலையை சமன் செய்ய முடியும்.

புஜங்காசனம்

கால்கள், வயிற்றுப்பகுதி தரையில் படுமாறு குப்புறப் படுக்க வேண்டும். கைகளை தரையில் ஊன்றிய நிலையில் தலையை மட்டும் மேலே தூக்கியவாறு இருக்க வேண்டும். கால்கள் இரண்டும் சேர்த்தவாறு இருக்க வேண்டும். இப்போது மூச்சை உள்ளிழுத்தவாறு 10 நொடிகள் இருக்க வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்பலாம்.
ld461305284
பயன்கள்: கீழ் மற்றும் மேல் முதுகுத்தசைகளை வலுவடையச் செய்கிறது. மார்புத் தசைகளை விரிவடையச் செய்கிறது. உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. முதுகின் மேல், நடு மற்றும் கீழ் பகுதிகளுக்கு நல்ல நெகிழ்ச்சியைக் கொடுக்கிறது. செரிமான உறுப்புகள், சிறுநீரக மற்றும் இனப்பெருக்க உறுப்புகளின் செயலை மேம்படுத்துகிறது. மேலும் கழுத்து தசைகளுக்கு அழுத்தம் கிடைப்பதால் தைராய்டு சுரப்பியைத் தூண்டச் செய்கிறது. பெண்களின் மாதவிடாய் சுழற்சிகளை சமன்படுத்துகிறது.

உஸ்த்ராசனம்

தரையில் முட்டிபோட்டு அமர்ந்து கொண்டு, மெதுவாக மூச்சை உள்ளிழுத்தவாறு தலையை மல்லாந்து நோக்கியவாறு வலது கையால் வலது பாதத்தையும், இடது கையால் இடது பாதத்தையும் தொடவேண்டும். இந்த நிலையில் மெதுவாக மூச்சை இழுத்து விடலாம். 6 முதல் 10 வினாடிகள் இதேநிலையில் இருந்து மெதுவாக மூச்சை வெளிவிட்டவாறு பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.

பயன்கள் மார்பை விரிவடையச் செய்வதால் நுரையீரலும் விரிவடைகிறது. இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்ல பயனைத் தருகிறது. கழுத்து, அடிவயிறு, மார்பிற்கு நெகிழ்ச்சி உண்டாகிறது. அடிவயிற்று உறுப்புகளைத் தூண்டுகிறது. மல்லாந்த நிலையில் இருக்கும் போது தைராய்டு சுரப்பியை நன்கு தூண்டுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

விபரீத கரணி

தரையில் படுத்து மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே கால்களை மட்டும் இடுப்பு நேர்கோட்டில் தூக்க வேண்டும். கைகள் இரண்டும் தரையில் ஊன்றியிருக்க வேண்டும். 3 நிமிடங்கள் இதே நிலையில் இருக்க வேண்டும்.பயன்கள் : தைராய்டின் செயல்பாட்டை சமன் செய்ய உதவுகிறது. ஹைப்போ ஆக்டிவ் தைராய்டினால் ஏற்படும் சிக்கலை தவிர்க்கிறது. மேலும் மைக்ரேன் தலைவலி, வெரிகோஸ் வெய்ன், நுரையீரல் பிரச்னைகளுக்கு தீர்வாகிறது.

மத்யாசனம்

தரையில் முழங்கால்களை மடித்து அமர வேண்டும். மூச்சை உள்ளிழுத்தவாறு இடுப்பை சற்றே தூக்கி தலையை தரையில் படுமாறு படுக்க வேண்டும். கைகள் இரண்டும் பின்புறத்திற்கு கீழ் வைத்துக் கொள்ள வேண்டும். முன்கைகள் மற்றும் முழங்கால்கள் இரண்டும் உடலை ஒட்டியவாறு இருக்க வேண்டும். இதே நிலையில் 15 முதல் 30 நிமிடங்கள் இருக்க வேண்டும்.

பயன்கள்: மார்பு மற்றும் கழுத்துப் பகுதியை நீட்சியடையச் செய்கிறது. கழுத்து மற்றும் தோள்களில் உள்ள இறுக்கத்தை போக்குகிறது. ஆழ்ந்து சுவாசிப்பதால் சுவாசக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. பாரா தைராய்டு, பிட்யூட்டரி மற்றும் பீனியல் சுரப்பிகளின் செயலை தூண்டுகிறது. கழுத்துப்பகுதியில் அழுத்தம் கொடுத்து தைராய்டு சுரப்பி தூண்டப்படுகிறது.

ஹாலாசனம்

உடலின் மேல்பகுதி தரையில் படுத்த நிலையில் உள்ளங்கைகளைத் தரையில் ஊன்றிய நிலையில் மூச்சை உள்ளிழுத்தவாறு காலை இடுப்போடு சேர்த்து மெதுவாக தலைக்கு மேலே எழுப்ப வேண்டும். பின்னர் கால்களை தரையில் ஊன்றியவாறு வைக்க வேண்டும். கால்கள் 180 டிகிரி கோணத்தில் தரையை தொட வேண்டும்.

பயன்கள்: ஹாலா என்றால் கலப்பை. கலப்பையைப் போல் தோற்றம் தரும் இந்த யோகாசனத்தை செய்யும்போது கழுத்தில் அழுத்தம் கொடுத்து தைராய்டு சுரப்பிகளை தூண்டச் செய்கிறது. முதுகுத்தண்டுவடத்துக்கு நெகிழ்ச்சித்தன்மை கிடைக்கிறது.

சேதுபந்த சர்வாங்காசனம்

தரையில் நேராக படுத்து கைகள் இரண்டையும் பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். கால்களை மடக்கி, மூச்சை உள்ளிழுத்தவாறு இடுப்பை மேலெழுப்ப வேண்டும். கைகளால் கால் மணிக்கட்டுகளை பிடித்துக் கொள்ளவும். தோள்பட்டை மட்டும் தரையை ஒட்டி இருக்க வேண்டும். இந்த நிலையில் 10 நொடிகள் இருக்க வேண்டும்.

பயன்கள்: கால், இடுப்பு, கழுத்து மற்றும் மார்புப்பகுதி வலுவடைகிறது. முழு உடலுக்கும் ஓய்வு கிடைப்பதால் மனஅழுத்தம் குறைகிறது. தூக்கமின்மை, செரிமானக்கோளாறு, முதுகுவலி பிரச்னைகளுக்குத் தீர்வு. தைராய்டு குறைபாட்டிற்கு மிகவும் முக்கியமான யோகாப்பயிற்சியாகும். கழுத்துக்கும் காலுக்கும் ஒரு பாலம் போல் செய்வதால் கழுத்துப் பகுதியில் ரத்த ஓட்டம் சீரடைந்து தைராய்டு சுரப்பியைத் தூண்டுகிறது.

தனுராசனம்

விரிப்பில் குப்புறப் படுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இரு கைகளையும் உடலோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இரு கால்களையும் முழங்கால்களை மடக்கித் தூக்கிய வண்ணமே இரு கைகளாலும் பிடிக்க வேண்டும். அப்படியே கால்களைத் தலைக்கு நேராகக் கொண்டு வந்த வண்ணமே மெல்ல மூச்சை உள்ளிழுத்தவாறு தலையையும், நெஞ்சுப் பகுதியையும் மேல் நோக்கித் தூக்கிக்கொள்ள வேண்டும்.

இரு பாதங்களும் மேலே சேர்ந்த வண்ணம் இருக்க வேண்டும். வயிற்றுப்பகுதி தரையில் அழுந்தி இருக்க உடல் வில் போல் வளைந்து இருப்பதால் இதற்கு தனுராசனம் என்று பெயர். பின் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.

பயன்கள்: தொந்தி குறைவதோடு, இடுப்பு, தொடைகளின் சதைகளும் கரையும். உடல் பின்னோக்கி வளைக்கப்படுவதால் ரத்த ஓட்டம் சீராகும். ரத்தக்குழாய்கள் நன்கு செயல்படுவதால் அதிகப்படியான ஆக்சிஜன் கிடைக்கும். வயிற்றுத் தொல்லைகள், வாயுத் தொல்லைகள் குறையும். இதயம் நன்கு சுருங்கி விரிந்து சுறுசுறுப்பாக இயங்கும். நுரையீரல் நன்கு செயல்படுவதால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது. நீரிழிவு நோய்க்கு நல்ல பலனை அளிக்கும். தனுராசனம் செய்யும்

Related posts

போசு பால் சூப்பர்மேன் பயிற்சி

nathan

தொப்பையை குறைக்கும் நின்றநிலை சைக்கிள் பயிற்சி

nathan

உடலை உறுதியாக்கும் தோப்பு கரணம்

nathan

கைகளுக்கு வலிமை தரும் பைசெப்ஸ் கர்ல்ஸ் பயிற்சி

nathan

யோகாசன ஆரம்பப் பயிற்சியும் ஆசனங்கள் செய்யும் படிமுறைகளும்

nathan

இடுப்பு, தொடை சதையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

nathan

ரஷ்யன் ட்விஸ்ட் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பயன்கள்

nathan

விரல்கள் செய்யும் விந்தை!

nathan

மனதுக்கும், உடலுக்கும் அமைதி தரும் சவாசனம்

nathan