26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
healthy skin main
சரும பராமரிப்பு

முகத்தில் எண்ணெய் வழிவது பலருக்கும் மிகப்பெரிய பிரச்சனை

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க என்னென்ன பழங்களை சாப்பிடலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

1. வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் அதிகளவு தண்ணீர் நிறைந்துள்ளது. இதில் சருமத்தை சீரமைக்கும் சக்தி அமைந்துள்ளது. இது முகத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உங்களை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

2. நட்ஸ்
நட்ஸில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க உதவுகிறது.

3. ஆரஞ்ச்
ஆரஞ்சில் சிட்ரஸ் அதிகமாக உள்ளது. இது எலுமிச்சையிலும் உள்ளது. இதில் உள்ள விட்டமின் சி சருமத்தில் உள்ள இறந்த செல்களை போக்கி, எண்ணெய் பசை இல்லாத சிறந்த சருமத்தை உங்களுக்கு தருகிறது.
healthy skin main
4. பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகளில் எண்ணெய் மற்றும் கொழுப்பு இருக்காது. இதில் அதிகளவு நார்ச்சத்து உள்லது. இது சருமத்தில் உள்ள எண்ணெய்பசையை போக்கி சருமத்தை பளபளப்பாக்குகிறது.

5. அவோகேடா
அவோகேடாவை சாப்பிட மட்டுமில்லாமல், முகத்திற்கு மாஸ்க் போல அப்ளை செய்யவும் பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு சிறந்த மாஸ்சுரைசராக செயல்படுகிறது.

6. திராட்சை
திராட்சை எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த பழமாகும். இதில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடலுக்கு பொழிவை தருகிறது. இதில் தண்ணீர் அதிகமாக உள்ளது.

7. முழு தானிய உணவுகள்
முழு தானிய உணவுகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இது சருமத்தை எண்ணெய் பசையிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், முகப்பருக்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

8. மீன்
மீனில் அதிகளவு ஒமேகா 3 உள்ளது. எனவே இது சருமத்தில் தொற்றுகள் உண்டாகாமல் பாதுகாக்கிறது. இதனால் முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கிறது.

9. ப்ரோகோலி
ப்ரோகோலியில் அதிகளவு விட்டமின் சி நிறைந்துள்ளது. இது எளிதாக மனித உடலால் ஈர்க்கப்பட்டுள்ளது. இது எண்ணெய்யை கட்டுப்படுத்துவதன் மூலம் முகப்பருக்களின் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

10. பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள்

பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் வெளித்தோற்றத்தை மேம்படுத்தவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது செரிமானத்திற்கு மிக சிறந்தது. இது முகத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்கி சருமத்தில் பருக்கள் வருவதை தடுக்கிறது.

Related posts

மழை நீரால் உங்கள் சருமத்தை எப்படி சுருக்கமின்றி பொலிவாக்கலாம் என தெரியுமா?

nathan

கற்றாளையைப் பயன்படுத்தி சருமத்தின் பொலிவை பேண முடியும்.

sangika

கிர்ணி பழ பேஸ்பேக் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது

nathan

வயதானலும் அழகாக இருப்பது எப்படி?

nathan

முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகளை நீக்க இதை செய்யுங்கள்!…

sangika

மென்மையான சருமம் வேண்டுமா?

nathan

தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும்

nathan

அக்குள் கருப்பா இருக்கா? அதைப் போக்க சில அட்டகாசமான வழிகள்!!!

nathan

மூன்றே மாதத்தில் சரும கருமையை போக்கும் ஃபேஸ் பேக்

nathan