29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
download 5
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை உள்ளதா? நெல்லிக்காய் தைலம் முயற்சி செய்துபாருங்கள்..!!!

பெரும்பாலானவர்களுக்கு முடி கொட்டுவது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இது அவர்களுக்கு மன உலைச்சலையும் ஏற்படுத்துகிறது. முடி அதிகம் கொட்டுகிறதே என்று கவலைப்பட்டால் இன்னும் தான் முடி கொட்டும். கவலையை நிறுத்தி, இந்த நெல்லிக்காய் தைலத்தைத் தலையில் தேயுங்கள்.download 5

மாயாஜாலம் நிகழும். பச்சை நெல்லிக்காய், துளசி இலை, கொட்டை நீக்கிய முற்றின கடுக்காய், கறிவேப்பிலை – தலா 100 கிராம் எடுங்கள். நான்கையும் சேர்த்து கிரைண்டரில் நன்றாக அரையுங்கள். இந்த விழுதை மெல்லிய துணியில் மூட்டையாகக் கட்டித் தொங்கவிடுங்கள்.

அதிலிருந்து துளி துளியாக சாறு சொட்டும். இந்த சாற்றினை சேமித்து, இதன் அளவில் மூன்று மடங்கு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுங்கள். இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வர முடி கொட்டுவது நின்று, அடர்த்தியாக வளரவும் தொடங்கும்.

பனிகாலம்…. தலையில் பனித்துளிகளைப் போன்று பொடுகும், செதில்களும் வந்து இம்சிக்கும். இதைப் போக்கி நிம்மதி தருகிறது இந்த நெல்லிக்காய் பேஸ்ட். வெந்தயப்பொடி – 1 டீஸ்பூன், கடுக்காய் பொடி- அரை டீஸ்பூன், கடலை மாவு -3 டீஸ்பூன்.. இந்த மூன்றையும் கலக்கும் அளவுக்கு எலுமிச்சைச்சாறு, பச்சை நெல்லிக்காய் சாறு (இரண்டும் சம அளவு) சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள்.

இந்த பேஸ்ட்டை தலைக்கு `பேக்’ ஆகப் போட்டு 10 நிமிடம் கழித்து அப்படியே தண்ணீர் விட்டு அலசுங்கள். வெந்தயம், கடுக்காய், கடலை மாவு மூன்றும் தலையை சுத்தப்படுத்தி செதில்களை நீக்கும். எலுமிச்சைச்சாறு தலையில் உள்ள அரிப்பைப் போக்கும். நெல்லிக்காய் முடியின் நுனி பிளவை நீக்கி முடியை கருகருவென வளரச்செய்யும்.

Related posts

ஆயில் மசாஜ் செய்தால் கூந்தல் வளருமா?

nathan

தலைமுடியின் வளர்ச்சியை தூண்டும் வெந்தயக்கீரை

nathan

கூந்தலுக்கு ஆயில் மசாஜ் செய்வது எப்படி?

nathan

செம்பருத்தி பூவின் மகத்தான பலன்கள்…..

nathan

தலைக்கு குளிக்க நேரமில்லையா? உங்க தலை கப்பு அடிக்குதா? இதோ சில டிப்ஸ்…

nathan

கூந்தலை பாதுகாக்கும் எண்ணெய் வகைகள்

nathan

ஆண்களே, உங்களின் தலை முடி துர்நாற்றம் அடிக்கிறதா..? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா முடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…!

nathan

கரு கரு’ கூந்தலுக்கு

nathan