இந்த பகுதியில் கரிசலாங்கன்னி கீரையை கொண்டு எப்படி இயற்கையான ஹேர் பேக் போடுவது என்பது பற்றி காணலாம்.
பொன்னாங்கன்னியின் மகத்துவம் :
பொன்னாங்கன்னி கீரை முடியின் வேர் பகுதியை உறுதியாக்க உதவுகிறது. இது இயற்கையாகவே முடியை வலிமையடைய செய்கிறது. இது முடி வளர்ச்சியை தூண்டுவதில் முக்கிய பங்குவகிக்கிறது.
நெல்லிக்காய் மற்றும் பொன்னாங்கன்னி :
நெல்லிக்காய் முடிக்கும், வேர்ப்பகுதிக்கும் சிறந்த ஒரு மருந்தாக இருக்கிறது. நெல்லிக்காய் சாறு அல்லது நெல்லிக்காய் பவுடரை, ஒரு கைப்பிடி அளவு அல்லது உங்களது கூந்தலுக்கு தேவையான அளவு பொன்னாங்கன்னி இலைகளுடன் சேர்த்து அரைத்து, முடியின் வேர்ப்பகுதிக்கும், முடிக்கும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் தலையை அலச வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை, ரோஸ்மேரி
கற்றாழை ஜெல் இரண்டு டீஸ்பூன், பொன்னாங்கன்னி பொடி 3 டீஸ்பூன், 2 சொட்டு ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலைக்கு மாஸ்க் போட்டு ஒரு மணி நேரம் கழித்து, தண்ணீரில் முடியை நன்றாக அலசிக்கொள்ளுங்கள். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வர வேண்டும்.
பயன்கள் கற்றாழை தலையில் உள்ள பொடுகுகளை போக்க உதவுகிறது. இது முடி வளர்ச்சியை தூண்டவும் உதவுகிறது. இதனுடன் பொன்னாங்கன்னியும் சேர்வதால், முடி வளர்ச்சி தூண்டப்படுகிறது.
அர்னிகா எண்ணெய் (arnica oil) ஒரு டீஸ்பூன் அர்னிகா எண்ணெய்யை நான்கு டீஸ்பூன் டீஸ்பூன் பொன்னாங்கன்னி சாறுடன் கலந்து தலைக்கு மாஸ்க் போட்டால் முடி மிக நன்றாக வளரும். இது முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது.